வினோத் மேத்தா

வினோத் மேத்தா (Vinod Mehta, 1941 - 2015 மார்ச் 8)[2] ஒரு இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். இவர் 1995 இலிருந்து 2012 வரை அவுட்லுக் பத்திரிக்கையின் நிறுவனராகவும் ஆசிரியராகவும் இருந்தார். இவர் தி பயனீர், சண்டே ஒப்சேர்வர், தி இண்டிபன்டன்ட், இந்திய போஸ்ட் போன்ற பல பத்திரிக்கைகளில் ஆசிரியராக இருந்துள்ளார்.

வினோத் மேத்தா
பிறப்பு1941[1]
ராவல்பிண்டி, பிரித்தானிய இந்தியா
இறப்பு(2015-03-08)மார்ச்சு 8, 2015 (அகவை 73 )
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
கல்விஇளநிலைப் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்லக்னௌ பல்கலைக்கழகம்
செயற்பாட்டுக்
காலம்
1995 - 2012
பணியகம்அவுட்லுக் இந்தியா
அறியப்படுவதுஇதழாளர், ஊடகத்தில் நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை
வாழ்க்கைத்
துணை
சுமிதா பால்

வரலாறு

தொகு

இவர் 1942 மே 31 இல் இராவல்பிண்டியில் பிறந்தார். இவர் போட்டோஹர் கட்ரி இனத்தை சேர்ந்தவராவார். ராணுவத்தில் பணிபுரிந்த இவரின் தந்தை இவரைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது தவறாக இவரது பிறந்த நாளை 31 மே 1942 என்று பதிந்து விட்டார். லக்னோ பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த லா மர்டிநிரே கல்லூரியில் இளநிலைப் பட்டம் (பி.ஏ) பெற்றார்.

இவரின் புத்தகங்கள்

தொகு

இவர் மொத்தம் ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார்.

ஆசிரியராகப் பணியாற்றிய வரலாறு

தொகு
  • 1974 மரியாதையான
  • 1981 சண்டே ஒப்சேர்வர்
  • 1987 இந்தியன் போஸ்ட்
  • 1989 தி இண்டிபென்டன்ட்
  • 1990 பயனீர்
  • 1995 அவுட்லுக்

மேற்கோள்கள்

தொகு
  1. Singh, Kushwant (2012-01-28). "Of the grumbling Lucknow boy and John Keats". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714120840/http://www.hindustantimes.com/comment/khushwantsingh/of-the-grumbling-lucknow-boy-and-john-keats/article1-803484.aspx. பார்த்த நாள்: 2014-08-22. 
  2. http://www.bbc.co.uk/tamil/india/2015/03/150308_vinod_mehta
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_மேத்தா&oldid=3228737" இலிருந்து மீள்விக்கப்பட்டது