வின்சென்ட் விகில்சுவொர்த்
வின்சென்ட் விகில்சுவொர்த் (Sir Vincent Wigglesworth) (1899 ஏப்ரல் 17-1994 பிப்ரவரி 11) இவரது முழுப்பெயர் சர் வின்சென்ட் பிரையன் விகில்ஸ் வொர்த் எனப்படும் இவர், பூச்சியியலராகவும், ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியராகவும் அறியப்படுகிறார். மேலும், பூச்சியினங்கள் குறித்த பல அரிய உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறிய இங்கிலாந்து பூச்சியியல் வல்லுநராகவும், முதல் உலகப்போரின்போது, ராணுவத்தில் பணிபுரிந்தவராகவும் மற்றும் கேம்பிரிட்ஜில் உள்ள பூச்சி உடலியல் பிரிவின் வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது மூலத்தில் அறியப்பட்டது.[1]
வின்சென்ட் விகில்சுவொர்த் Sir Vincent Wigglesworth | |
---|---|
Vincent Wigglesworth | |
பிறப்பு | 17 ஏப்ரல் 1899 |
இறப்பு | 11 பெப்ரவரி 1994 | (அகவை 94)
தேசியம் | ஐக்கிய இராச்சியம் |
துறை | பூச்சியியலர் |
பணியிடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | உயிரியலாளர் பீட்டர் லாரன்ஸ் |
அறியப்படுவது | உருமாற்றம் |
விருதுகள் | ராயல் பதக்கம் (1955) அரச கழகம் |
அறிமுகமும், ஆய்வும்
தொகுவின்சென்ட் விகில்சுவொர்த், இங்கிலாந்தின் லங்காஷயர் கவுன்டியில் உள்ள கிர்க்ஹாம் நகரில் 1899-ம் ஆண்டில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு மருத்துவராவார் (வின்சென்ட் விகில்சுவொர்த்தின் பள்ளிப்படிப்பு பற்றிய மூலங்கள் இல்லை) தனது தந்தையைப்போல் மருத்துவம் படிக்க கல்லூரியில் சேர்ந்தார். அதேவேளையில், கல்வி உதவித்தொகை பெற்று கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதுடன் அவரது பேராசிரியர் ஆலோசனைப்படி, கரப்பான் பூச்சி குறித்த ஆராய்ச்சியில் இறங்கினார். அதன் பிறகுதான், பூச்சிகள் உலகின் மீது இவருக்கு ஆர்வம் பெருக்கெடுத்தது. பூச்சிகளின் உடல் அமைப்பு, திசுக்கள், உறுப்புகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.[2]
களப்பணியும், கண்டுபிடிப்பும்
தொகுமுதல் உலகப்போரின்போது, ராணுவத்தில் பணிபுரிந்த விகில்சுவொர்த், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீனில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். அதோடு, லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையில் பணியாற்றிய இவர், கேம்பிரிட்ஜில் உள்ள பூச்சி உடலியல் பிரிவின் வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் [[இயக்குனர்|இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், பூச்சிகளின் உருமாற்றம் குறித்த இவரது கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தென் அமெரிக்காவில் காணப்படும் குருதி உறிஞ்சும் பூச்சிகளில் ஒரு முக்கியமான வளர்ச்சி ஆர்மோன், அதன் மூளைச் செல்களில் உள்ள நரம்புச் சுரப்பிகளில் உற்பத்தியாகிறது என்பது இவரது ஆய்வில் தெரியவந்தது.[3] சில பூச்சிகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை எட்டும்வரை, முதிர்ச்சிக்கான அம்சங்கள் அதன் உடலில் ஏற்படாதவாறு வேறு சில ஆர்மோன்கள் தடுக்கின்றன என்பதை கண்டறிந்த வின்சென்ட், அதற்கு ஜுவனைல் ஹார்மோன் (Juvenile hormone )எனப் பெயரிட்டார். பூச்சியின உருமாற்றம் தொடர்பாக தெளிவான கோட்பாட்டை உருவாக்கியவர். பூச்சிகளின் அமைப்பியல் மற்றும் வளர்ச்சிப் பண்புகளை அவற்றின் மரபணு கூறுகளின் ஆர்மோன்கள் தீர்மானிக்கின்றன என்பதையும் கண்டறிந்தார்.[4]
படைப்பும், பட்டமும்
தொகுவின்சென்ட் பிரையன் விகில்ஸ் வொர்த், 1934-ல் ‘இன்செக்ட் ஃபிசியாலஜி’ (Insect physiology[5]) என்ற நூலை எழுதினார். இது இன்றளவும் பூச்சியியல் துறை மாணவர்களுக்கான வழிகாட்டி நூலாகத் திகழ்கிறது. 1939-ல் இவர் எழுதிய ‘தி பிரின்சிபல்ஸ் ஆஃப் இன்செக்ட் ஃபிசியாலஜி’ (The Principles Of Insect Physiology[6]) என்ற நூல் அத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இன்றியமையாத நூலாக கருதப்படுகிறது. தன் ஆராய்ச்சிகள் குறித்து 300 கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். இவரது அனைத்து நூல்களுமே உலகம் முழுவதும் பிரபலமடைந்தன.[7]
உலகம் முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் ஆற்றினார். பயன்பாட்டு உயிரியல் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1964-ல் இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. இது தவிர, ஏராளமான பட்டங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார். பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சிகள் பன்னெடுங்காலமாக நடக்கின்றன. ஆனால், பூச்சிகளின் உடற்கூறியல் குறித்து ஆராய்ந்து, அதற்கென்ற ஒரு புதிய அறிவியல் துறைக்கு அடித்தளமிட்ட வின்சென்ட் விகில்சுவொர்த் 95-வது வயதில் 1994-ல் மறைந்தார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ britannica.com|Sir Vincent Wigglesworth|British entomologist
- ↑ independent.co.uk|Obituary: Professor Sir Vincent Wigglesworth|JAMES BEAMENT|Wednesday 16 February 1994
- ↑ nytimes.com|Sir Vincent Wigglesworth Is Dead; Insect Physiology Expert Was 94
- ↑ munksroll.rcplondon.ac.uk | Munk's Roll : Volume X : Vincent Brian (Sir) Wigglesworth
- ↑ Insect physiology|by Wiggles Worth V.B
- ↑ The Principles Of Insect Physiology|by Wiggles Worth V.B.
- ↑ Journal of Experimental Biology
- ↑ worldlibrary|VINCENT WIGGLESWORTH|Article Id: WHEBN0004616015[தொடர்பிழந்த இணைப்பு]
வின்சென்ட் விகில்சுவொர்த் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)