வியட்நாம் குமுக மட்ட ஆட்சிப் பிரிவுகள்

வியட்நாமில், மூவகை மூன்றாம் அடுக்கு ஆட்சிப் பிரிவுகள் அமைகின்றன:குமுகம் (வியட்நாமியம்: சா), நகரியம்/பேரூர் (வியட்நாமியம்: தித்திரான்),சிறகம் (வியட்நாமியம்: பூவோங். வியட்நாமில் ஊரக்க் குமுகம் சா எனவும் நகரகக் குமுகம் தித்திரான் எனவும் அழைக்கப்படுகிறது. என்றாலும், மாகாணத் தகுதியுள்ள பெரிய நகரகங்கள் சிறகங்களாகப் பிரிக்கப்படும். இவை பூவோங் என அழைக்கப்படும்.

2008 ஆம் ஆண்டு திசம்பர் 31 இன் நிலவரப்படி வியட்நாமில், நகரியங்களையும் சிறகங்களையும் தவிர, 9,111 குமுகங்கள் நிலவுகின்றன. ஒவ்வொரு குமுகமும் பேரூர்களையும் ஊர்களையும் கொண்டுள்ளன; ஆனால், சிறகங்களும் குமுக மட்ட நகரியங்களும் (பெரும்பாலும் நகரக மாவட்டங்களில்) மேலும் அணுக்கங்களாகவும் பிரிக்கப்படுகின்றன. இவை ஊரக்க் குமுகங்களில் இருந்து வேறுபட்டனவாகும்.

2008 ஆம் ஆண்டு திசம்பர் 31 இன் நிலவரப்படி, வியட்நாமில், 11,112 நகரியங்களும் சிறகங்களும் உட்பட, குமுக மட்டப் பிரிவுகள் உள்ளன. தாங்கோவா மாகாணம் உயரெண்ணிக்கை குமுகங்களைப் பெற்றுள்ளது. இதில் 637 குமுக மட்ட ஆட்சிப் பிரிவுகள் உள்ளன.[1]

வரலாற்றுப் பாத்திரம் தொகு

வியட்நாம் குடியரசின் இரண்டாம் குடியாட்சியின்போது ஒவ்வொரு குமுகத்துக்கும் ஒரு மாவட்டத் தலைவர் அமர்த்தப்படுவார். இவர்கள், காவல் தலவர், குமுக்க் கருவூலத் தலைவர், ஆட்சியியல் அலுவலர்கள், பொதுப்பணி அலுவலர்கள் ஆகிய பிற தலைவர்களை ஒருங்கிணைத்து குமுக மன்றங்களை அமைப்பர்.[2] குமுகத்தின் உடல்நலம், கல்வி உட்பட, பல பொறுப்புகளைக் குமுக மன்றம் வகிக்கிறது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. General Statistics Office (Vietnam). பரணிடப்பட்டது 2012-01-31 at the வந்தவழி இயந்திரம்
  2. Donoghe, John. Cam An: a Fishing Village in Central Vietnam. Saigon: Michigan State University Vietnam Advisory Group, 1961.