விருந்தீசுவரர் கோவில்

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கோவில்

விருந்தீசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள, கோயம்புத்தூரில், அமைந்துள்ள சிவன் கோவில்.

விருந்தீசுவரர் கோவில்
விருந்தீசுவரர் கோவில் is located in தமிழ் நாடு
விருந்தீசுவரர் கோவில்
விருந்தீசுவரர் கோவில்
ஆள்கூறுகள்:11°04′37″N 76°55′56″E / 11.076845°N 76.932334°E / 11.076845; 76.932334
பெயர்
பெயர்:விருந்தீசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவு:வடமதுரை (கோயம்புத்தூர்)
கோயில் தகவல்கள்
மூலவர்:விருந்தீசுவரர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

கோயில் அமைப்பு

தொகு

இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், விருந்தீசுவரர் என அழைக்கப்படுகிறார். அம்மன் விஸ்வநாயகி அம்பாள் (பார்வதி, தனிச் சன்னிதியில் தாமரைப் பீடத்தில் காட்சியளிக்கிறார். பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் விரிந்த சடாமுடியுடன் நடன கோலத்தில் இருப்பார். இங்கு முடிந்த சடாமுடியுடனுள்ளார். சிவன் நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்ததாகவும் இதிலிருந்துதான் கோயில்களில் "அதிகார நந்தி' சன்னதி அமைக்கும் பழக்கம் உண்டானதாகவும் மரபுசழிச் செய்தியுள்ளது.[சான்று தேவை] கோவிலுக்குள் லட்சுமி நாராயணப் பெருமாள் என்ற பெயருடன் பெருமாளுக்கு ஒரு சிறிய தனிச் சன்னிதி உள்ளது. இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் இது கட்டப்பட்டது என அறியவருகிறது.

மூலவர் விருந்தீசுவரர்
உற்சவர்
அம்மன்/தாயார் விஸ்வநாயகி அம்பாள்
தல விருட்சம் வன முருங்கை
தீர்த்தம் விடகர தீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் கணேஸ்வரம், அகஸ்திய நல்லூர், கந்தமாபுரி

தல வரலாறு

தொகு

சுந்தரர் அவினாசி சென்று அவினாசிலிங்கேஸ்வரையும் கருணாம்பிகையையும் தரிசித்த பின், மிகுந்த களைப்புடனும் பசியுடனும் விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்த வேடுவத் தம்பதியனர் அவருக்கு முருங்கைக்கீரையுடன் உணவு தயாரித்துத் தந்து பசியையும் களைப்பையும் போக்கினர். அவ்வாறு தனது பசிக்கு உணவு தந்தவர்கள் இறைவனும், இறைவியுமே என்பதை உணர்ந்தார் சுந்தரர். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இக்கோயில் ஈசன் "விருந்தீஸ்வரர்' என பெயர் கொண்டார் என்பது மரபு வரலாறாகும். [சான்று தேவை]

அமைவிடம்

தொகு

கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) கோயம்புத்தூர் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் துடியலூருக்கு அருகேயுள்ள கு. வடமதுரை என்னும் பகுதியில் இக்கோவில் சாலையோரமாக அமைந்துள்ளது. கோயம்புத்தூர் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இக்கோயிலுக்குச் செல்ல நிறையப் பேருந்துகள் உள்ளன.

அஞ்சல் முகவரி

தொகு
அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில்,
வடமதுரை- 641017.
கோயம்புத்தூர்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருந்தீசுவரர்_கோவில்&oldid=2786021" இலிருந்து மீள்விக்கப்பட்டது