விளாதிமிர் கோப்பென்
விளாதிமிர் பீட்டர் கோப்பென் (Wladimir Peter Köppen, டாய்ச்சு ஒலிப்பு: [vlaˈdiːmiːɐ̯ ˈkœpn̩, ˈvlaːdimiːɐ̯ -]; உருசியம்: Влади́мир Петро́вич Кёппен, விளதீமிர் பெத்ரோவிச் கியோப்பென்; 25 செப்டம்பர் 1846 – 22 சூன் 1940) ஒரு உருசிய-செருமனிய புவியியலாளர், வானிலையியல் ஆய்வாளர், காலநிலை ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளர் ஆவார். சென் பீட்டர்ஸ்பேர்க்கில் படித்த பிறகு, அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி வேலை மற்றும் வாழ்க்கையையும் செருமனி, ஆஸ்திரியாவில் கழித்தார். அறிவியலுக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையை உருவாக்கினார். இது சில மாற்றங்களுடன் இன்னும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] கோப்பன் அறிவியலின் பல கண்டுபிடிப்புகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
விளாதிமிர் கோப்பென் Wladimir Köppen | |
---|---|
1921 இல் கோப்பென் | |
பிறப்பு | சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு | 25 செப்டம்பர் 1846
இறப்பு | 22 சூன் 1940 கிராசு, நாட்சி ஜெர்மனி (இன்றைய ஆஸ்திரியாவில்)[1] | (அகவை 93)
தேசியம் | உருசியர்/செருமனியர் |
துறை | புவியியல், வானிலையியல், காலநிலையியல், தாவரவியல் |
பணியிடங்கள் | ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் லீப்சிக் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சென் பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கோப்பென் காலநிலை வகைப்பாடு |
பின்னணி மற்றும் கல்வி
தொகுவிளாதிமிர் கோப்பென் உருசியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் பிறந்து, 20 வயது வரை அங்கு வாழ்ந்தார். நாட்சி ஜெர்மனியின் கிராசு என்ற இடத்தில் இறந்தார். உருசியப் பேரரசி இரண்டாம்கேத்தரின் உருசியாவிற்கு அழைக்கப்பட்ட பல செருமனிய மருத்துவர்களில் கோப்பெனின் தாத்தாவும் ஒருவர்.[2] கிரிமியாவின் சிம்ஃபெரோப்போலில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்ற அவர், 1864 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் குறித்த தனது ஆய்வைத் தொடங்கினார்.
கிரிமியன் கடற்கரையில் உள்ள தனது குடும்பத்தைப் பார்க்க செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து மற்றும் தீபகற்பத்தின் உட்புறத்தில் உள்ள சிமிபெர்புலுக்கு அடிக்கடி பயணம் செய்வது வழக்கமாக கொண்டிருந்தார். இது கிரிமியன் தீபகற்பத்தின் மலர் மற்றும் புவியியல் பன்முகத்தன்மையும், புவியியல் மாற்றங்களும், காலநிலைகள் மாற்றம் மற்றும் இயற்கை மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தொடர் பயணங்கள் தூண்டியது. 1867 ஆம் ஆண்டில், அவர் ஜடல்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார், மேலும் 1870 ஆம் ஆண்டில் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் தாவர வளர்ச்சியில் வெப்பநிலையின் விளைவுகள் குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வைப் தொடர்ந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள மத்திய உடல் ஆய்வகத்தில் பணியாற்றினார்.[2]
ஐந்து மிக முக்கியமான காலநிலைக் குழுக்களை கண்டறிந்தார்.
தொகு- வெப்பமண்டல மழை காலநிலை
- வறண்ட காலநிலை
- வெப்பமான வெப்பநிலை மழை காலநிலை
- பனி மற்றும் குளிர் காலநிலை
- துருவ காலநிலை
வேலை மற்றும் பங்களிப்புகள்
தொகுகோப்பன் நவீன தட்பவெப்பநிலை மற்றும் வானிலை தட்பவெப்பநிலை முதன்மை நிறுவனர் ஆவார். 1850 மற்றும் 1860 க்கு இடையில், அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களுக்கான சீவர்ட்டின் படகோட்டி கையேடு புத்தகத்தை உருவாக்க கோப்பன் உறுதுணையாக இருந்தாது. [3] 1872 மற்றும் 1873 க்கு இடையில் கோப்பன் உருசியா வானிலை சேவையில் உதவியாளராகப் பணியாற்றினார், அங்கு அவர் தினசரி சினோப்டிக் வானிலை வரைபடத்தைத் தயாரிக்க உதவினார். [4] 1875 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் செர்மனிக்குச் சென்று, ஆம்பர்கு தளமாகக் கொண்ட ஜேர்மன் கடற்படை ஆய்வகத்தில் (டாய்ச் சீவார்ட்) கடல்சார் வானிலை ஆய்வின் புதிய பிரிவின் தலைவரானார். அங்கு, செர்மனியின் வடமேற்கு பகுதி மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பு சேவையை நிறுவுவதற்கு அவர் பொறுப்பேற்றார். நான்கு வருட வேலைக்குபின் அவர் தனது முதன்மை ஆராய்ச்சிக்கு செல்ல முடிவு எடுத்தார்.
கோப்பன் காலநிலை குறித்த முறையான ஆய்வைத் தொடங்கினார், மேலும் வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளிலிருந்து மாரிதிகளை சேகரிக்க வானிலைபலூன்களை அனுப்பி ஆய்வுகள் செய்தார். 1884 ஆம் ஆண்டில், அவர் தனது காலநிலை மண்டலங்களின் வரைபடத்தின் முதல் ஆய்வை வெளியிட்டார், அதில் பருவகால வெப்பநிலை வரம்புகள் திட்டமிடப்பட்டன. இது 1900 ஆம் ஆண்டில் கோப்பன் காலநிலை வகைப்பாடு முறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, அவர் தனது வாழ்நாள் முழுவதும் முன்னேறிக்கொண்டே இருந்தார். அவரது அமைப்பின் முழு ஆய்வு முதலில் 1918 இல் தோன்றியது; பல மாற்றங்களுக்குப் பிறகு, இறுதி ஆய்வு 1936 இல் வெளியிடப்பட்டது.
நூலியல்
தொகு- கோப்பன், விலாடிமீர் மற்றும் வேசனர், ஆல்பிரட் (1924): புவியியல் பாஸ்ட் க்லைமேட்ஸ் 'என்ற செருமன் மொழியிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தார். தொலைநகல்' Geologischen Vorzeit' Berlin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-443-01088-1
- விளாடிமிர் கோப்பன்: வாழ்க்கைக்கான அறிஞர் (ஐன் கெலெஹெர்டென்லேபென் ஃபார் டை வானிலை), போர்ன்ட்ராகர் அறிவியல் வெளியீட்டாளர்கள் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-443-01100-0, 316 ப. (விளாடிமிர் கோப்பனின் ஆங்கிலம் மற்றும் செருமன் மொழி சுயசரிதை, புதுப்பிக்கப்பட்ட நூலியல் மூலம் தனது ஆராய்ச்சியை எடுத்துக்காட்டுகிறது)
மேற்கோள்கள்
தொகு- ↑ Evan Burr Bukey (2002). Hitler's Austria: Popular Sentiment in the Nazi Era, 1938–1945. UNC Press Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8078-5363-4.
- ↑ 2.0 2.1 2.2 "Wladimir Koppen: German climatologist". பார்க்கப்பட்ட நாள் 12 May 2017.
- ↑ Earth's Climate Evolution.
- ↑ "Wladimir Peter Koppen facts, information, pictures - Encyclopedia.com articles about Wladimir Peter Koppen". Encyclopedia.com.
வெளி இணைப்புகள்
தொகு- Newspaper clippings about விளாதிமிர் கோப்பென் in the 20th Century Press Archives of the German National Library of Economics
- விளாடிமிர் கோப்பன் பற்றிய செய்தி