விளக்குத் தூண்

பொதுவாக இந்து கோவில்களில், விளக்கு ஏற்றும் தூண் வடிவில் காணப்படும் அமைப்பு

விளக்குத் தூண், விளக்கு கோபுரம் அல்லது தீப ஸ்தம்பம் (Deep Jyoti Stambh or Deepa Stambha சமக்கிருதம்: दीपस्तंभ ) என்பது இந்துக் கோவில்களில் பொதுவாகக் காணப்படும் கட்டிடக்கலை கட்டமைப்பின் ஒரு தனித்துவமான பகுதியாகும். தீப ஸ்தம்பம் என்ற பெயரில் குறிப்பிடும், தீபம் என்றால் " அகல் விளக்கு " ஜோதி என்றால் " ஒளி ", ஸ்தம்ப என்றால் "கம்பம்" அல்லது "தூண்" என்பதாகும். இத்தகைய தூண்கள் கோவில் வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும். சிறப்பு நாட்களில் அந்தத் தூண்கள் விளக்குகளால் ஒளிரவைக்கப்படும். கோவாவின் போண்டாவில் உள்ள மகால்சா கோயில், [1] கோவாவின் சாந்த துர்கை கோயில், உஜ்ஜயினில் உள்ள ஹர்சித்தி கோயில், தேவாசில் உள்ள தேகாரி கோயில், [2] ஜேஜுரியில் உள்ள கண்டோபா கோயில், மங்கேசி கோயில் போன்றவை இந்தியாவில் உள்ள சில புகழ்பெற்ற மற்றும் தனித்துவமான விளக்குத் தூண்கள் காணப்படும் கோயில்களாகும். மங்கேஷி, சௌந்தட்டியின் எல்லம்மா ரேணுகா கோயில், குல்பர்காவின் சரண பாசவேஸ்வரர் கோயில், கர்நாடகத்தின் பாதாமிக்கு அருகில் உள்ள பனசங்கரி அம்மா கோயில் போன்ற சிலவற்றையும் குறிப்பிடலாம்.

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Deep Stambh - Tower of Light
  2. "Deep Stambh, Tekari". Archived from the original on 2011-05-03. பார்க்கப்பட்ட நாள் 2011-06-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளக்குத்_தூண்&oldid=3842134" இலிருந்து மீள்விக்கப்பட்டது