விஷ்ணு நிக்கோலோ முத்திரை

விஷ்ணு நிக்கோலா முத்திரை (Vishnu Nicolo Seal) முட்டை வடிவத்தில் கடினமான கல்லால் நேர்த்தியாக செதுக்கப்பட்ட முத்திரை ஆகும். இது 1.4 x 1.05 அங்குல அளவு கொண்டது. கிபி 4-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த இம்முத்திரை தற்கால ஆப்கானிஸ்தான் நாட்டின் பண்டைய காந்தாரப் பகுதியில் (பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் வடமேற்கு எல்லைப்புற மாகாணம்) பிரித்தானிய தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1][2] இம்முத்திரை 1892 ஆண்டு முதல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. [3]

விஷ்ணு நிக்கோலோ முத்திரை
விஷ்ணு நிக்கோலோ முத்திரை, பிரித்தானிய அருங்காட்சியகம்
செய்பொருள்கடுங்கல்
உருவாக்கம்4-ஆம் நூற்றாண்டு
கண்டுபிடிப்புகாந்தாரம், ஆப்கானிஸ்தான்
34°00′N 71°19′E / 34°N 71.32°E / 34; 71.32
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
பதிவு1892,1103.98

இம்முத்திரையில் நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதுடன்,[4] கைகளில் கதாயுதம், சக்ராயுதம், தாமரை ஏந்தியுள்ள விஷ்ணு முத்திரையில் ஒரு அரச பக்தர் விஷ்ணுவை வணங்குவது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. [1][5][3] பக்தரின் காலடியில் இரு வரிகளில் கல்வெட்டும் உள்ளது[3]பிரித்தானிய அருங்காட்சியகத்தினர் இக்கல்வெட்டு பாக்திரியா மொழியில் உள்ளதாக கூறுகின்றனர்.[3]

விளக்கங்கள்

தொகு

இம்முத்திரையின் தலைக்கவசத்தின் ஒற்றுமையின் அடிப்படையில், கிமு 140-180களில் ஆட்சி செய்த குஷான் பேரரசர் ஹுவிஷ்கா (கிபி 150 – 180) அணியும் தலைகவசம் போன்று விஷ்ணுவின் தலைப்பகுதி உள்ளது.[5] கல்வெட்டில் பொறித்த இரு வரிகளில் உள்ள சொற்களில் "மியர்கா யாஸ்னா ஓசோ" என்றால்: "மித்திரன் (சூரியன்), விஷ்ணு, சிவன்" பொருள் கொள்ளப்பட்டது.

நிக்கோலோ முத்திரையின் உரை

தொகு

மிக சமீபத்திய விளக்கம், தெய்வீகம் என்பது வாசுதேவன் என்று கூறுகிறது. இது ஒரு ஆரம்பகால தெய்வமாகும். அதன் பண்புகள் பின்னர் விஷ்ணுவிற்கு பயன்படுத்தப்பட்டது. ஒரு ஆரியோலைச் சேர்த்து மீண்டும் பயன்படுத்தப்பட்டன.[7][8]

இந்த சமீபத்திய ஆராய்ச்சி,விஷ்ணுவை வணங்கும் பக்தரை மன்னர் குசானப் பேரரசர் ஹுவிஷ்கா அல்லாது, ஹூண அரசனின் அடையாளம் கொண்டுள்ளது என கண்டறிந்தனர். [2][5]அந்த பக்தன் ஒரு குசானன் அல்லது சசானியனாகவோ அல்லது கிடாரிய இளவரசனாகவோ இருக்கலாம்.[6]

சூரியன் (மிஹிராவின் மற்றொரு பெயர்), விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூன்று தெய்வங்களின் கூட்டு வழிபாட்டு முறை இந்தியாவில் சுமார் கிபி 500 முதல் இருந்ததாகவும் முத்திரை கூறுகிறது.[3] இருப்பினும், 2019 ஆம் ஆண்டில் பிரித்தானிய அருங்காட்சியகம் கல்வெட்டின் வித்தியாசமான வாசிப்பை வழங்குகிறது.


விஷ்ணு நிக்கோலா முத்திரைபிரித்தானிய அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி
கல்வெட்டின் வரி எண் அசல் (கிரேக்க-பாக்திரியா எழுத்துமுறை) எழுத்துப்பெயர்ப்பு ஆங்கில மொழிபெயர்ப்பு
1 σασο ρηο ιαþτoo saso reo iastoo "Sas-re(w) the leader of worship (?)"
2 αλγo algo

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1893 Numismatic Chonicle p.126
  2. 2.0 2.1 Buddhism in Central Asia, by Baij Nath Puri, Motilal Banarsidass Publ., 1987, p.131-132
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 British Museum page
  4. "A much better known «syncretistic» image is the one depicted on a well-known «nicolo» seal (....) Ghirshman thought of a composite deity (Mihira-Visnu-Siva, Ibidem: 55-58), although an identification with the god Vasudeva is perhaps more likely (Mitterwallner 1986: 10)" (in en) Silk Road Art and Archaeology: Journal of the Institute of Silk Road Studies, Kamakura. The Institute. 1996. p. 170. https://books.google.com/books?id=XU3rAAAAMAAJ. 
  5. 5.0 5.1 5.2 Śaivāgamas: A Study in the Socio-economic Ideas and Institutions of Kashmir (200 B.C. to A.D. 700) V. N. Drabu, Indus Publishing, 1990 p.201
  6. "South Asia Bulletin: Volume 27, Issue 2". South Asia Bulletin (University of California, Los Angeles). 2007. https://books.google.com/books?id=BuMUAQAAIAAJ. "A seal inscribed in Bactrian , fourth to fifth century AD , shows a Kushano - Sasanian or Kidarite official worshipping Vishnu : Pierfrancesco Callieri , Seals and Sealings from the North - West of the Indian Subcontinent and Afghanistan.". 

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Callieri, Seals and Sealing, 1997, Naples (p. 190)