உதயகிரி குகைகள்
உதயகிரி குகைகள் (Udayagiri Caves) பண்டைய இந்து சமய சிற்பக்கலையை விளக்கும் குடைவரைக் கோயில் ஆகும்.[1][2] உதயகிரி குகைகள் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலுக்கு வடகிழக்கே உள்ள விதிஷா நகரத்திலிருந்து 48 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[2] உதயகிரி குகைகள் பௌத்தத் தலமான சாஞ்சியிலிருந்து 13 கி மீ தொலைவில் உள்ளது.[3] குப்தர்கள் காலத்திய புகழ்பெற்ற உதயகிரி குகைகள் தற்போது இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.
உதயகிரி குகைகள் | |
---|---|
தொல்லியல் களம் | |
ஆள்கூறுகள்: 23°32′11″N 77°46′20″E / 23.536389°N 77.772222°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | விதிஷா |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 464001 |
உதயகிரி குடவரைக் கோயில்கள் குப்தப் பேரரசின் காலத்தில் கி பி ஐந்தாம் நூற்றாண்டில் உதயகிரி மலையில் குடைந்தெடுத்து நிறுவப்பட்டது. உதயகிரி குகைகளின் குடைவரை சிற்பங்களில் விஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பம் மிகவும் சிறப்பானது.[1] உதயகிரி குகை கல்வெட்டுக் குறிப்புகளில் குப்தப் பேரரசர்களான இரண்டாம் சந்திரகுப்தர் (கி பி 375-415) மற்றும் முதலாம் குமாரகுப்தன் (கி பி 415-55) ஆகியவர்களின் ஆட்சிக் காலத்தை விளக்குகிறது.[4] உதயகிரி மலையில் இந்து சமயம் மற்றும் சமண சமயம் தொடர்பான 20 குகைகள் உள்ளது.[2] குகை எண் 20-இல் மட்டும் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டுள்ளது.[5]
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Fred Kleiner (2012), Gardner’s Art through the Ages: A Global History, Cengage, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-495-91542-3, page 434
- ↑ 2.0 2.1 2.2 Margaret Prosser Allen (1992), Ornament in Indian Architecture, University of Delaware Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87413-399-8, pages 128-129
- ↑ A. Ghosh, An Encyclopaedia of Indian Archaeology, 2 vols. New Delhi, 1989: s.v. Besnagar.
- ↑ The inscriptions are dealt with in J. F. Fleet, Inscriptions of the Early Gupta Kings and their Successors, Corpus Inscriptionum Indicarum, vol. 3 (Calcutta, 1888), hereinafter CII 3 (1888). Some of the records are re-edited, often with mischievous results, in the revised edition, D. R. Bhandarkar et al, Inscriptions of the Early Gupta Kings, Corpus Inscriptionum Indicarum, vol. 3 (revised) (New Delhi, 1981).
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-04-06.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Asher, Frederick M. (1983). "Historical and Political Allegory in Gupta Art". Essays on Gupta Culture (Delhi: Motilal Banarsidass): pp. 53–66.
- Willis, Michael (2004). "The Archaeology and Politics of Time". The Vākāṭaka Heritage: Indian Culture at the Crossroads (Groningen: Egbert Forsten): pp. 33–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-6980-148-5.
- Willis, Michael (2009). The Archaeology of Hindu Ritual. Cambridge and New York: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-51874-1.