விஷ்வா பெர்னாண்டோ

இலங்கை துடுப்பாட்டக்காரர்

முத்துதன்திருகே விஸ்வ திலின பெர்னாண்டோ ( Muthuthanthrige Vishwa Thilina Fernando பிறப்பு 18 செப்டம்பர் 1991), பொதுவாக விஸ்வ பெர்னாண்டோ என அறியப்படும் இவர் இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் இலங்கை தேசிய அணியின் சார்பாக தேர்வு துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார்.[1]

ஆரம்ப கால மற்றும் உள்நாட்டு துடுப்பாட்ட வாழ்க்கைதொகு

ஆகஸ்ட் 2015 இல் இலங்கை வாரியத் தலைவரின் லெவன் மற்றும் இந்திய துடுப்பாட்ட அணிக்கு இடையிலான சுற்றுப் பயணத்தில் விளையாடிய இவர், மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இவர் தேர்வானார்.[2] ஜூலை 2016 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் அவர் இடம் பெற்றார்.[3]

மார்ச் 2018 இல், நடைபெற்ற சூப்பர் ஃ போர் மாகாண துடுப்பாட்ட தொடரில் விளையாடினார் . அந்தத் தொடரில் இவர் கொழும்பு அணியில் இடம் பெற்றார் .[4][5] அடுத்த மாதம், 2018 சூப்பர் மாகாண ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் இவர் கொழும்பு அணியில் இடம் பெற்றார் .[6]

ஆகஸ்ட் 2018 இல், நடைபெற்ற எஸ் எல் சி லீக் 20 துடுப்பாட்ட தொடரில் இவர் விளையாடினார். அந்தத் தொடரில் இவர் கண்டி அணி சார்பாக கலந்து கொண்டார். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சூப்பர் மாகாண ஒருநாள் துடுப்பாட்ட தொடரில் இவர் தம்புலா அணி சார்பாக விளையாடினார்.[7]

சர்வதேச வாழ்க்கைதொகு

ஆரம்ப ஆண்டுகளில்தொகு

அவர் பல முறை சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் தேர்வான போதிலும் , இலங்கை துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் இவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், நான்கு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களும் காயமடைந்ததால் இவருக்கு வாய்ய்ப்பு கிடைத்தது. தம்மிகா பிரசாத், நுவான் பிரதீப், துஷ்மந்தா சமீரா மற்றும் சுரங்கா லக்மல், பெர்னாண்டோ ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் காயம் அடைந்தனர். அதனால் இவர் 2016ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 4 அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரில் ஜோ பர்ன்ஸ் இலக்கினை கைப்பற்றினார். மீதமுள்ள போட்டிகளில், அவர் பந்து வீசவில்லை, அந்தப் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் 19 இலக்குகளை வீழ்த்தி முழு ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தினர்.[8] இருப்பினும், முதன்முறையாக வார்ன்-முரளிதரன் கோப்பையை இலங்கை 229 ஓட்டங்களில் வென்றது .[9]

ஆகஸ்ட் 2017 இல், இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியில் அவர் இடம் பெற்றார்.[10] அவர் ஆகஸ்ட் 20, 2017 அன்று இந்தியாவுக்கு எதிராக இலங்கைக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[11] விராட் கோலியை தனது முதல் ஒருநாள் இலக்காக எடுத்தார். அக்டோபர் 2017 இல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான இலங்கையின் இருபது -20 சர்வதேச (டி 20 ஐ) அணியில் அவர் இடம் பெற்றார்.[12] அவர் டிசம்பர் 20, 2017 அன்று இந்தியாவுக்கு எதிராக இலங்கைக்காக தனது டி 20 ஐ அறிமுகப்படுத்தினார். இருப்பினும், அவர் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார், ஒரு இலக்கினை கூட எடுக்கவில்லை.[13]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்வா_பெர்னாண்டோ&oldid=2867794" இருந்து மீள்விக்கப்பட்டது