இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2017

இந்தியத் துடுப்பாட்ட அணி 2017 சூலை முதல் செப்டம்பர் வரை இலங்கையில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், ஒரு பன்னாட்டு இருபது20 போட்டியிலும் பங்குபற்றுகிறது.[1][2][3] தேர்வுப் போட்டிகளுக்கு முன்னதாக இரு அணிகளும் கொழும்பு நகரில் இரண்டு 2-நாள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடின.[4][5][6]

இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2017
Flag of Sri Lanka.svg
இலங்கை
Flag of India.svg
இந்தியா
காலம் 21 சூலை – 6 செப்டம்பர் 2017
தலைவர்கள் ரங்கன ஹேரத் (தேர்வு) விராட் கோலி
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் திமுத் கருணாரத்ன (285) ஷிகர் தவான் (358)
அதிக விக்கெட்டுகள் நுவான் பிரதீப் (6) ரவிச்சந்திரன் அசுவின் (17)
தொடர் ஆட்ட நாயகன் ஷிகர் தவான் (இந்)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
இருபது20 தொடர்

இலங்கை அணி சிம்பாப்வே அணியிடம் ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை அணியின் புதிய தேர்வுத் தலைவராக தினேஸ் சந்திமல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.[7] ஆனாலும், முதலாவது தேர்வுப் போட்டிக்கு முன்னதாக சந்திமல் நுரையீரல் அழற்சியினால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவரால் விளையாட முடியவில்லை.[8] முதல் போட்டிக்கு ரங்கன ஹேரத் தலைமை தாங்கினார்.[9] தேர்வுத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது இந்தியா தனது சுற்றுப் பயணம் ஒன்றில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுப் போட்டியளில் விளையாடிப் பெற்ற முதலாவது வெள்ளையடிப்பு ஆகும்.[10]

பொருளடக்கம்

அணிகள்தொகு

தேர்வுகள் ஒரு-நாள் இ20ப
  இலங்கை[11]   இந்தியா[12]   இலங்கை   இந்தியா   இலங்கை   இந்தியா

முரளி விஜய் காயமடைந்ததை அடுத்து அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் விளையாடினார்.[13] அசெலா குணரத்தினா முதலாவது ஆட்ட நாளில் கையில் காயமேற்பட்டதை அடுத்து, ஏனைய ஆட்டங்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.[14]

தேர்வுத் தொடர்தொகு

1-வது தேவுதொகு

26–30 சூலை 2017
ஓட்டப்பலகை
600 (133.1 ஓவர்கள்)
ஷிகர் தவான் 190 (168)
நுவான் பிரதீப் 6/132 (31 ஓவர்கள்)
291 (78.3 ஓவர்கள்)
தில்ருவன் பெரேரா 92* (132)
ரவீந்திர ஜடேஜா 3/67 (22.3 ஓவர்கள்)
240/3d (53 ஓவர்கள்)
விராட் கோலி 103* (136)
தனுஷ்க குணதிலக்க 1/16 (5 ஓவர்கள்)
245 (76.5 ஓவர்கள்)
திமுத் கருணாரத்ன 97 (208)
ரவிச்சந்திரன் அசுவின் 3/65 (27 ஓவர்கள்)
இந்தியா 304 ஓட்டங்களால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
 • நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • அர்திக் பாண்டியா (இந்), தனுஷ்க குணதிலக்க (இல) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
 • நுவான் பிரதீப் (இல) தனது முதலாவது 5-இலக்குகள் தேர்வுப் போட்டியில் கைப்பற்றினார்.[15]
 • ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[16]
 • இப்போட்டி இந்தியா வெளிநாடொன்றில் பெற்ற மிகப்பெரிய தேர்வு வெற்றியும், ஓட்டங்கள் அடிப்படையில் இலங்கையின் மிகப்பெரும் தோல்வியும் ஆகும்.[17]

2-வது தேர்வுதொகு

3–7 ஆகத்து 2017
ஓட்டப்பலகை
622/9d (158 ஓவர்கள்)
செதேஷ்வர் புஜாரா 133 (232)
ரங்கன ஹேரத் 4/154 (41 ஓவர்கள்)
183 (49.4 ஓவர்கள்)
நிரோசன் டிக்வெல்ல 51 (48)
ரவிச்சந்திரன் அசுவின் 5/69 (16.4 ஓவர்கள்)
386 (116.5 ஓவர்கள்) (f/o)
திமுத் கருணாரத்ன 141 (307)
ரவீந்திர ஜடேஜா 5/152 (39 ஓவர்கள்)
இந்தியா ஒரு இன்னிங்சாலும் 53 ஓட்டங்களாலும் வெற்றி
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மலிந்த புஸ்பகுமார (இல) தனது முதலாவது தேர்வில் விளையாடினார்.
 • செதேஷ்வர் புஜாரா (இந்) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[18]
 • இலங்கையில் இந்தியா இன்னிங்சு ஒன்றினால் வெற்றி பெற்றது இதுவே முதல் தடவையாகும்.[19]

3-வது தேர்வுதொகு

12–16 ஆகத்து 2017
ஓட்டப்பலகை
487 (122.3 ஓவர்கள்)
ஷிகர் தவான் 119 (123)
இலக்சன் சந்தக்கன் 5/132 (35.3 ஓவர்கள்)
135 (37.4 ஓவர்கள்)
தினேஸ் சந்திமல் 48 (87)
குல்தீப் யாதவ் 4/40 (13 ஓவர்கள்)
181 (74.3 ஓவர்கள்) (f/o)
நிரோசன் டிக்வெல்ல 41 (52)
ரவிச்சந்திரன் அசுவின் 4/68 (28.3 ஓவர்கள்)
இந்தியா இன்னிங்சு மற்றும் 171 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், பல்லேகலை
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஆர்திக் பாண்டியா (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இலக்சன் சந்தக்கன் (இல) தனது முதலாவது 5-தேர்வு இலக்குகளைக் கைப்பற்றினார்.[20]

ஒருநாள் தொடர்தொகு

1-வது ஒருநாள்தொகு

20 ஆகத்து 2017
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
216 (43.2 ஓவர்கள்)
  இந்தியா
220/1 (28.5 ஓவர்கள்)
இந்தியா 9 இலக்குகளால் வெற்றி
இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், தம்புள்ளை
நடுவர்கள்: ருசிர பள்ளியகுரு (இல), ஜொயெல் வில்சன் (மேதீ)
ஆட்ட நாயகன்: ஷிகர் தவான் (இந்)
 • நானயச்சுழற்சியி, வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடியது.
 • விசுவா பெர்னாண்டோ தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
 • லசித் மாலிங்க (இல) தனது 200வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[21]

2-வது ஒருநாள்தொகு

3-வது ஒருநாள்தொகு

4-வது ஒருநாள்தொகு

5-வது ஒருநாள்தொகு

இ20ப தொடர்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. "Future Tours Programme". International Cricket Council. பார்த்த நாள் 16-01-2016.
 2. "India to play 3 Tests, 5 ODIs and 1 T20I in Sri Lanka". Cricbuzz. பார்த்த நாள் 7-07-2017.
 3. "India's next away Test in Galle on July 26". ESPN Cricinfo. பார்த்த நாள் 7-07-2017.
 4. "Pandya earns Test call-up, Rahul back". ESPN Cricinfo. பார்த்த நாள் 9-07-2017.
 5. "India team for the Test series against Sri Lanka". Wisden India. பார்த்த நாள் 9-07-2017.
 6. "India tour of Sri Lanka, 2017". Cricket Buzz. பார்த்த நாள் 10-07-2017.
 7. "Chandimal to lead SL in Tests, Tharanga in shorter formats". ESPN Cricinfo. பார்த்த நாள் 12-07-2017.
 8. "Chandimal ruled out of Galle Test". ESPN Cricinfo. பார்த்த நாள் 21-07-2017.
 9. "Herath to skipper SL against India". Cricket Australia. பார்த்த நாள் 21-07-2017.
 10. "A rare clean sweep away from home". ESPN Cricinfo. பார்த்த நாள் 14-08-2017.
 11. "Sri Lanka announces squad for first Test against India". Sri Lanka Cricket. பார்த்த நாள் 23-07-2017.
 12. "Pandya in squad for SL Tests, Rahul back". ESPN Cricinfo. பார்த்த நாள் 9-07-2017.
 13. "Dhawan to replace injured Vijay for Sri Lanka". ESPN Cricinfo. பார்த்த நாள் 17 July 2017.
 14. "Gunaratne out of India series". ESPN Cricinfo. பார்த்த நாள் 26-07-2017.
 15. "Pradeep takes five, but India surpass 500". ESPN Cricinfo. பார்த்த நாள் 27-07-2017.
 16. "R Ashwin plays in his 50th Test". பார்த்த நாள் 29-07-2017.
 17. "India's biggest away win, SL's biggest defeat". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1113157.html. பார்த்த நாள்: 29-07-2017. 
 18. "Rahul set for return as India aim to close out series". ESPN Cricinfo. பார்த்த நாள் 2-08-2017.
 19. "India's first innings win in Sri Lanka". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/20264558/india-first-innings-win-sri-lanka. பார்த்த நாள்: 5-08-2017. 
 20. "Pandya's maiden ton headlines 15-wicket day". ESPN Cricinfo. பார்த்த நாள் 13-08-2017.
 21. "Lasith Malinga set for 200th ODI for Sri Lanka, 2 short of 300 wickets". Hindustan Times. பார்த்த நாள் 20-08-2017.

வெளி இணைப்புகள்தொகு