நுவான் பிரதீப்

நுவான் பிரதீப் என அழைக்கப்படும் அத்தாச்சி நுவான் பிரதீப் ரொசான் பெர்னாண்டோ (Aththachchi Nuwan Pradeep Roshan Fernando, பிறப்பு: 19 அக்டோபர் 1986) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் தேர்வுத் துடுப்பாட்டங்களில் துவக்க பந்துவீச்சாளராகச் செயல்படுகிறார்.

நுவான் பிரதீப்
Nuwan Pradeep
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அத்தாச்சி நுவான் பிரதீப் ரொசான் பெர்னாண்டோ
பிறப்பு19 அக்டோபர் 1986 (1986-10-19) (அகவை 37)
நீர்கொழும்பு, இலங்கை
பட்டப்பெயர்சிரச
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலக்கைத் துடுப்பாளர்
பந்துவீச்சு நடைவலக்கை வேகப் பந்து
பங்குபந்து வீச்சாளர்
உறவினர்கள்நிலக்சி சம்பிக்க (மனைவி) (தி. 2015)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 119)18 அக் 2011 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு17-21 சூன் 2015 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 153)31 சூலை 2012 எ. இந்தியா
கடைசி ஒநாப22 சூலை 2015 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–08பேர்கர் ரிக்கிரியேசன் அணி
2008–11புளூம்ஃபீல்ட்
2009–10பஸ்னாகிரா வடக்கு
2011ருகுண
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா. மு.த. ப.அ
ஆட்டங்கள் 10 5 67 48
ஓட்டங்கள் 57 3 257 64
மட்டையாட்ட சராசரி 5.18 0 5.35 6.40
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 17* 3* 27* 6*
வீசிய பந்துகள் 1,912 224 7,768 1,925
வீழ்த்தல்கள் 23 4 155 67
பந்துவீச்சு சராசரி 56.00 53.25 33.07 25.11
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 4 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/63 2/63 5/36 5/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 0/0 27/0 9/0
மூலம்: CricketArchive, சூலை 22 2015

சர்வதேச போட்டிகள் தொகு

2010 ஆம் ஆண்டில் பிரதீப் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இலங்கை அணியின் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டார். 2011 இல் மீண்டும் பாக்கித்தான் அணிக்கு எதிராக அமீரகத்தில் நடத்தப்பட்ட தொடரில் இலங்கை அணியில் விளையாட அழைக்கப்பட்டார்.[1][2] 2011 அக்டோபரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகம் ஆனார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 3 பந்துகளில் 1 ஓட்டங்கள் எடுத்து ஜுனைத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 27 ஓவர்கள் வீசி 107 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார்.இரண்டாவது ஆட்டப்பகுதியில் மூன்று பந்துகளில் ஓட்டங்கள் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இதில் 1 ஓவர் வீசி 3 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனாலும், தனது முதலாவது போட்டியில் எந்த விக்கெட்டுகளையும் இவர் கைப்பற்றவில்லை.[3]

இவருக்கு அடிக்கடி காயங்கள் ஏற்பட்டதனால் அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை. தற்போது இலங்கை அணியில் உள்ள சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். சூன் 25, 2012 ஆம் ஆண்டில் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். முகமது ஆயுப்பின் இலக்கினை தனது முதல் இலக்காக வீழ்த்தினார்.[4][5] பின் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் சிறப்பான , திறனை வெளிப்படுத்திய பின் அணியில் நிலையான இடத்தைப் பெற்றார். இவர் தம்மிகா பிரசாத்துடன் இணைந்து தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் துவக்கவீரராக பந்துவீசுகிறார்.

சூலை 5, 2016 இல் சௌதாம்டனில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் சந்தித்த முதல் பந்திலேயே ஜோர்டானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 2 ஓவர்கள்வீசி 12 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.[6]

டிசம்பர் 28, 2016 இல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டிசம்பர் 28 இல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அசீம் ஆம்லாவின் இலக்கினை எல் பி ட்பிள்யூ முறையில் வீழ்த்தினார். இது 10,000 ஆவது எல் பி டபிள்யூ ஆகும்.[7][8] பின் இரண்டாவது போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டதனால் இவர் நாடு திரும்பினார்.[9]

பின் 2017 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைத்தது.[10] முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஐந்து இலக்குகளை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். இவரின் பந்துவீச்சு துடுப்பாட்ட வர்ணானையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.[11][12] இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டது எனவே அவர் தொடர்ந்து பந்துவிசவில்லை. அந்தத் தொடரில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Sri Lankan test squad". பார்க்கப்பட்ட நாள் 24 September 2011.
  2. "Samaraweera dropped for Pakistan Tests". பார்க்கப்பட்ட நாள் 24 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. First Test: Pakistan v Sri Lanka – espncricinfo.com. Retrieved 23 October 2011.
  4. "Nuwan Pradeep: Sri Lanka's latest maverick", Cricinfo (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-23
  5. "Photo: Nuwan Pradeep celebrates his first Test wicket | Sri Lanka | Cricket", Island Cricket (in ஆங்கிலம்), archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2018-05-23
  6. "Sri Lanka tour of England and Ireland, Only T20I: England v Sri Lanka at Southampton, Jul 5, 2016". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  7. "Cook century drives South Africa's dominance". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 December 2016.
  8. "Marshall's lbw bunny, and a Darling who never got that way". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 December 2016.
  9. "Mathews, Pradeep, Gunathilaka to return to Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 January 2017.
  10. "Dhananjaya, Pradeep return to Sri Lanka's Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.
  11. "Pradeep's miserly resurgence amid Sri Lanka's continued misery". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 July 2017.
  12. "India run through top order after amassing 600". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவான்_பிரதீப்&oldid=3403340" இலிருந்து மீள்விக்கப்பட்டது