இலங்கை–பாக்கித்தான் துடுப்பாட்டத் தொடர், 2017

இலங்கைத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2017 செப்டம்பர் முதல் அக்டோபர் வரை பாக்கித்தான் துடுப்பாட்ட அணியுடன் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[1][2] பாக்கித்தான் அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் இளைப்பாறிய பின்னர் சப்ராஸ் அகமது அவ்வணியின் தலைவராக விளையாடிய முதலாவது தேர்வுப் போட்டி இதுவாகும்.[3]

இலங்கை–பாக்கித்தான் துடுப்பாட்டத் தொடர், 2017
Flag of Pakistan.svg
பாக்கித்தான்
Flag of Sri Lanka.svg
இலங்கை
காலம் 28 செப்டம்பர் – 29 அக்டோபர் 2017
தலைவர்கள் சப்ராஸ் அகமது தினேஸ் சந்திமல் (தேர்வு)
உபுல் தரங்க (ஒநா)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் அசாத் சஃபீக் (183) திமுத் கருணாரத்ன (306)
அதிக வீழ்த்தல்கள் யாசிர் ஷா (16) ரங்கன ஹேரத் (16)
தொடர் நாயகன் திமுத் கருணாரத்ன (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் பாபர் அசாம் (303) உபுல் தரங்க (199)
அதிக வீழ்த்தல்கள் அசன் அலி (14) லகிரு கமகே (7)
தொடர் நாயகன் அசன் அலி (பாக்)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் பாக்கித்தான் 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சோயிப் மாலிக் (102) தனுஷ்க குணதிலக்க (78)
அதிக வீழ்த்தல்கள் பகீம் அசுரப் (6)
அசன் அலி (6)
விக்கும் சஞ்சய (4)
தொடர் நாயகன் சோயிப் மாலிக் (பாக்)

2009 ஆம் ஆண்டில் இலங்கை அணி லாகூரில் துடுப்பாட்டப் போட்டித் தொடரில் விளையாடச் சென்ற போது இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இலங்கை அணியின் ஆறு வீரர்கள் காயமடைந்தனர்.[4] அதன் பின்னர் சிம்பாப்வே அணி மட்டும் 2015 மே மாதத்தில் பாக்கித்தான் சென்று தேர்வுப் போட்டியில் விளையாடியது. வேறு எந்த தேர்வு அணிகளும் பாக்கித்தான் செல்லவில்லை.[4]

அமீரகத்தில் நடந்த இரண்டாவது தேர்வுப் போட்டி பகல்/இரவு போட்டியாக விளையாடப்பட்டது. இவ்வாறான போட்டி ஒன்றில் விளையாடுவது இலங்கைக்கு முதற் தடவையாகும்.[5] இலங்கை அணி தேர்வுத்தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றது. அமீரகத்தில் விளையாடிய தொடர்களில் பாக்கித்தான் அனைத்துத் தேர்வுப் போட்டிகளிலும் தோல்வியடைந்தது இதுவே முதன் முறையாகும்.[6] ஒருநாள் தொடரை பாக்கித்தான் அணி 5–0 என்ற கணக்கில் வென்றது.[7] ஒரே ஆண்டில் மூன்று தடவைகள் அனைத்து ஒரு-நாள் போட்டிகளிலும் தோல்வியடைந்த ஒரே நாடு என்ற சாதனையைப் பெற்றது. முன்னதாக இதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவுடனும், இந்திய அணியுடனும் விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது.[8]

அணிகள்தொகு

தேர்வுகள் ஒரு-நாள் இ20ப
  பாக்கித்தான்[9]   இலங்கை[10]   பாக்கித்தான்[11]   இலங்கை[12]   பாக்கித்தான்[13]   இலங்கை

தேர்வுத் தொடர்தொகு

1வது தேர்வுதொகு

28 செப்டம்பர்–2 அக்டோபர் 2017
ஓட்டப்பலகை
419 (154.5 ஓவர்கள்)
தினேஸ் சந்திமல் 155* (372)
முகம்மது அப்பாசு 3/75 (26.5 ஓவர்கள்)
422 (162.3 ஓவர்கள்)
அசார் அலி 85 (226)
ரங்கன ஹேரத் 5/93 (40 ஓவர்கள்)
138 (66.5 ஓவர்கள்)
நிரோசன் டிக்வெல்ல 40* (76)
யாசிர் ஷா 5/51 (27 ஓவர்கள்)
114 (47.4 ஓவர்கள்)
ஆரிசு சொகாயில் 34 (69)
ரங்கன ஹேரத் 6/43 (21.4 ஓவர்கள்)
இலங்கை 21 ஓட்டங்களால் வெற்றி
சேக் சையது துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: ரங்கன ஹேரத் (இல)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஆரிசு சிகாயில் (பாக்) தனது 1வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • யாசிர் ஷா (பாக்) தனது 150-வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[14]
 • அசார் அலி (பாக்) 5,000 தேர்வு ஓட்டங்கள் பெற்ற 8வது வீரர் என்ற சாதனையை எட்டினார்.[15]
 • ரங்கன ஹேரத் (இல) தனது 400வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[16]

2வது தேர்வுதொகு

6–10 அக்டோபர் 2017 (ப/இ)
ஓட்டப்பலகை
482 (159.2 ஓவர்கள்)
திமுத் கருணாரத்ன 196 (405)
யாசிர் ஷா 6/184 (55.5 ஓவர்கள்)
262 (90.3 ஓவர்கள்)
அசார் அலி 59 (128)
தில்ருவன் பெரேரா 3/72 (26 ஓவர்கள்)
96 (26 ஓவர்கள்)
குசல் மெண்டிசு 29 (49)
வகாப் ரியாஸ் 4/41 (9 ஓவர்கள்)
248 (90.2 ஓவர்கள்)
அசாத் சஃபீக் 112 (176)
தில்ருவன் பெரேரா 5/98 (26 ஓவர்கள்)
இலங்கை 68 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), நைஜல் லோங் (இங்)
ஆட்ட நாயகன்: திமுத் கருணாரத்ன (இல)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • லகிரு கமகே, சதீர சமரவிக்கிரம (இல) தமது 1-வது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
 • இது இலங்கை விளையாடிய முதலாவது பக/இரவு தேர்வுப் போட்டியாகும்.[17]

ஒரு-நாள் தொடர்தொகு

1வது ஒருநாள்தொகு

13 அக்டோபர் 2017
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான்  
292/6 (50 ஓவர்கள்)
  இலங்கை
209/8 (50 ஓவர்கள்)
பாபர் அசாம் 103 (131)
சுரங்க லக்மால் 2/47 (10 ஓவர்கள்)
லகிரு திரிமான்ன 53 (74)
அசன் அலி 3/36 (9 ஓவர்கள்)
பாக்கித்தான் 83 ஓட்டங்களால் வெற்றி
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), ச்ந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: சோயிப் மாலிக் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

2பது ஒருநாள்தொகு

16 அக்டோபர் 2017
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான்  
219/9 (50 ஓவர்கள்)
  இலங்கை
187 (48 ஓவர்கள்)
பாபர் அசாம் 101 (133)
லகிரு கமகே 4/57 (10 ஓவர்கள்)
உபுல் தரங்க 112* (144)
சதாப் கான் 3/47 (9 ஓவர்கள்)
பாக்கித்தான் 32 ஓட்டங்களால் வெற்றி
சேக் சாயிது துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சொசாப் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: சதாப் கான் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • பாபர் அசாம் (பாக்) ஒரே நாட்டில் அடுத்தடுத்த ஐந்து (ஒருநாள்) சதங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.[18]

3வது ஒருநாள்தொகு

18 அக்டோபர் 2017
15:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
208 (48.2 ஓவர்கள்)
  பாக்கித்தான்
209/3 (42.3 ஓவர்கள்)
உபுல் தரங்க 61 (80)
அசன் அலி 5/34 (10 ஓவர்கள்)
இமாம்-உல்-அக் 100 (125)
திசாரா பெரேரா 1/22 (4 ஓவர்கள்)
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
சேக் சாயிது துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ஆசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: இமாம்-உல்-அக் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இமாம்-உல்-அக் (பாக்) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடி, முதல் போட்டியிலேயே சதம் பெற்ற 13வது ஆட்டக்காரரானார்.[19]

4வது ஒருநாள்தொகு

20 அக்டோபர் 2017
14:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
173 (43.4 ஓவர்கள்)
  பாக்கித்தான்
177/3 (39 ஓவர்கள்)
லகிரு திரிமான்ன 62 (94)
அசன் அலி 3/37 (8.4 ஓவர்கள்)
சோயிப் மாலிக் 69* (81)
லகிரு கமகே 1/27 (5 ஓவர்கள்)
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சோசாப் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: பாபர் அசாம் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • உசுமான் கான் (பாக்), சதீர சமரவிக்கிரம (இல) தமது 1வது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.

5வது ஒருநாள்தொகு

23 அக்டோபர் 2017
14:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
103 (26.2 ஓவர்கள்)
  பாக்கித்தான்
105/1 (20.2 ஓவர்கள்)
திசாரா பெரேரா 25 (29)
உசுமான் கான் 5/34 (7 ஓவர்கள்)
பக்கார் சமன் 48 (47)
ஜெப்ரி வான்டர்சி 1/30 (6.1 ஓவர்கள்)
பாக்கித்தான் 9 இலக்குகளால் வெற்றி
சார்ஜா துடுப்பாட்ட அரங்கம், சார்ஜா
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ஆசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: உசுமான் கான் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • உசுமான் கான் (பாக்) தனது முதலாவது 5-ஒருநாள் இலக்குகளைக் கைப்பற்றினார்.[20]

இ20ப தொடர்தொகு

1st T20Iதொகு

26 அக்டோபர் 2017
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
102 (18.3 ஓவர்கள்)
  பாக்கித்தான்
103/3 (17.2 ஓவர்கள்)
சீக்குகே பிரசன்னா 23* (23)
அசன் அலி 3/23 (3.3 ஓவர்கள்)
சோயிப் மாலிக் 42* (31)
விக்கும் சஞ்சய 2/20 (4 ஓவர்கள்)
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
சேக் சாயிது துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), சொசாப் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: உசுமான் கான் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • திசாரா பெரேரா (இல) இலங்கை இ20ப அணியின் 9வது தலைவராக விளையாடினார்.[21]
 • சதீர சமரவிக்கிரம (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.

2வது இ20பதொகு

27 அக்டோபர் 2017
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை  
124/9 (20 ஓவர்கள்)
  பாக்கித்தான்
125/8 (19.5 ஓவர்கள்)
தனுஷ்க குணதிலக்க 51 (48)
பகீம் அசுரப் 3/16 (3 ஓவர்கள்)
பாக்கித்தான் 2 இலக்குகளால் வெற்றி
சேக் சாயிது துடுப்பாட்ட அரங்கம், அபுதாபி
நடுவர்கள்: சொசாப் ராசா (பாக்), அகமது சகாப் (பாக்)
ஆட்ட நாயகன்: சதாப் கான் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

3வது இ20பதொகு

29 அக்டோபர் 2017
19:30 (ப/இ)
ஓட்டப்பலகை
பாக்கித்தான்  
180/3 (20 ஓவர்கள்)
  இலங்கை
144/9 (20 ஓவர்கள்)
சோயிப் மாலிக் 51 (24)
தில்சான் முனவீர 1/26 (4 ஓவர்கள்)
பாக்கித்தான் 36 ஓட்டங்களால் வெற்றி
கடாபி அரங்கம், லாகூர்
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), அகமது சகாப் (பாக்)
ஆட்ட நாயகன்: சோயிப் மாலிக் (பாக்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • சதுரங்க டி சில்வா (இல) தனது 1வது இ20ப போட்டியில் விளையாடினார்.

மேற்கோள்கள்தொகு

 1. "Future Tours Programme". International Cricket Council. பார்த்த நாள் 16 January 2016.
 2. "Workload management and its different strokes". Wisden India. மூல முகவரியிலிருந்து 12 ஆகஸ்ட் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 August 2017.
 3. "Sarfraz to lead Pakistan in all three formats". ESPN Cricinfo. பார்த்த நாள் 4-07-2017.
 4. 4.0 4.1 "Sri Lanka 'keen' to visit Pakistan for T20s in September". ESPN Cricinfo. பார்த்த நாள் 13-08-2017.
 5. "Sri Lanka to make day-night Test debut in Dubai". ESPN Cricinfo. பார்த்த நாள் 9-09-2017.
 6. "Sri Lanka moves ahead of Pakistan in sixth place". International Cricket Council. பார்த்த நாள் 10-102017.
 7. "Pakistan complete 5–0 after Usman bags five in 21 balls". ESPN Cricinfo. பார்த்த நாள் 23-10-2017.
 8. "Sri Lanka suffer 12th straight defeat". ESPN Cricinfo. பார்த்த நாள் 23-10-2017.
 9. "Pakistan look to Sohail, Salahuddin in post-MisYou era". ESPN Cricinfo. பார்த்த நாள் 23-09-2017.
 10. "Samarawickrama, Roshen Silva make Sri Lanka Test squad". ESPN Cricinfo. பார்த்த நாள் 20-09-2017.
 11. "Imam-ul-Haq called up to Pakistan's ODI squad". ESPN Cricinfo. பார்த்த நாள் 6-10-2017.
 12. "Malinga omitted from Sri Lanka squad for Pakistan ODIs". ESPN Cricinfo. பார்த்த நாள் 4-10-2017.
 13. "Hafeez back for T20Is against Sri Lanka". ESPN Cricinfo. பார்த்த நாள் 17-10-2017.
 14. "Yasir Shah becomes fastest spinner to take 150 wickets in Test cricket". Indian Express. பார்த்த நாள் 28-09-2017.
 15. "Azhar Ali joins Pakistan's 5000 Test club". Sport24. பார்த்த நாள் 30-09-2017.
 16. "First left-arm spinner to 400 Test wickets". ESPN Cricinfo. பார்த்த நாள் 2-10-2017.
 17. "Pakistan wary of Herath threat in must-win game". International Cricket Council. பார்த்த நாள் 6-10-2017.
 18. "Five consecutive tons in the UAE for Babar Azam". ESPN Cricinfo. பார்த்த நாள் 16-10-2017.
 19. "Records / One-Day Internationals / Batting records / Hundred on debut". ESPN Cricinfo. பார்த்த நாள் 18-10-2017.
 20. "Khan's record haul destroys SL". Cricket Australia. பார்த்த நாள் 23-10-2017.
 21. "Thisara named Sri Lanka captain for Pakistan T20Is". CricBuzz. பார்த்த நாள் 26-10-2017.

வெளி இணைப்புகள்தொகு