சப்ராஸ் அகமது
சப்ராஸ் அகமது (Sarfraz Ahmedஉருது: سرفراز احمد, பிறப்பு: மே 22 1987, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்), குச்சக்காப்பாளர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் அனைத்து வடிவ போட்டிகளுக்கும் தலைவராக உள்ளார். இவரின் தலைமையில் 2017 ஐசிசி வாகையாளர் கோப்பையை வென்றது. இந்தியாவில் நடைபெற்ற 2016 ஐசிசி உலக இருபது20 போட்டியின் போது இவர் தலைவரக நியமிக்கப்பட்டார்.[1] பெப்ரவரி 9 இல் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அசார் அலி தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியதால் இவருக்கு வய்ப்பு வழங்கப்பட்டது.மிஸ்பா-உல்-ஹக் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் பாக்கித்தான் அணியின் 32 ஆவது தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] மார்ச், 2018 ஆம் ஆண்டில் பாக்கித்தான் தேசிய நாள் அன்று இவருக்கு சிதாரா-இ-இம்தியாசு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினைப் பெற்ற மிக இளம்வயது துடுப்பாட்ட வீரர் எனும் சாதனை படைத்தார்.[3]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | சப்ராஸ் அகமது | |||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக்காப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 198) | சனவரி 14 2010 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 156) | நவம்பர் 18 2007 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | சூலை 4 2008 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 54 | |||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 28 2010 |
சர்வதேச போட்டிகள்
தொகுதேர்வுத் துடுப்பாட்டம்
தொகு2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . சனவரி 14 இல் ஹோபார்ட்டில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[4][5] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 6 பந்துகளை 1 ஓட்டம் எடுத்து காடிச்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 27 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்தார்.இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 231 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[6] பின் பாக்கித்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மே, 11 இல், டப்ளினில் நடைபெற்றது . இதன் முதல் ஆட்டப் பகுதியில் 40 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து தாம்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்து மீண்டும் தாம்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில்பாக்கித்தான் அணி 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]
ஒருநாள் போட்டிகள்
தொகு2007ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் பாக்கித்தான் அணியில் விளையாடும் வாய்பினைப் பெற்றார், நவம்பர்,18 இல் ஜெய்பூரில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஆனால் இந்தப்போட்டியில் மட்டையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.[8]
2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் அணியில் இடம்பெற்றார். ஆனால் முதல் நான்கு போட்டிகளில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.தொடர்ச்சியாக அணி தோல்வி அடைந்ததினால் இவருக்கு தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் 49 பதுகளில் 49 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் குச்சக் காப்பாளராக 6 கேட்ச்கள் பிடித்து சாதனை படைத்தார்.[9] இதன்மூலம் அடம் கில்கிறிஸ்ற் சாதனையை சமன் செய்தார்.[10] இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். பின் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 101* ஓட்டங்கள் எடுத்து அணியினை காலிறுதிச் சுற்றுக்குச் செல்ல உதவினார். இந்தப் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
சான்றுகள்
தொகு- ↑ "Sarfraz Ahmed named Pakistan's T20I captain". ESPN Cricifno. 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.
- ↑ "Azhar Ali quits as Pakistan ODI captain".
- ↑ "Sarfraz awarded Sitara-e-Imtiaz on Pakistan Day". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 March 2018.
- ↑ "Saga ends as dropped Kamran heads for a rest". 13 January 2010. http://www.cricinfo.com/ausvpak09/content/story/443748.html. பார்த்த நாள்: 14 January 2010. His unimpressive batting saw him dropped from the team after just one match.
- ↑ "Sarfraz Ahmed", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-26
- ↑ "3rd Test, Pakistan tour of Australia at Hobart, Jan 14-18 2010 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-26
- ↑ "Only Test, Pakistan tour of Ireland, England and Scotland at Dublin, May 11-15 2018 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-26
- ↑ "5th ODI (D/N), Pakistan tour of India at Jaipur, Nov 18 2007 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-26
- ↑ "Records | One-Day Internationals | Wicketkeeping records | Most dismissals in an innings | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283803.html.
- ↑ "Cricket Records | Records | World Cup | Most dismissals in an innings". ESPN Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/keeping/most_dismissals_innings.html?id=12;type=trophy.
வெளியிணைப்புகள்
தொகு- சர்பராஸ் அகமதுo
- [1]சர்பராஸ் அகமது பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Profile On ICC பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- [2]சர்பராஸ் அகமது Profile on PCB