அசார் அலி
அசார் அலி (Azhar Ali, உருது: اظہر علی, பிறப்பு: பெப்ரவரி 19 1985), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் ஒருநாள் போட்டியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
2017 இல் அசார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துடுப்பாட்டத் தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 199) | சூலை 13 2010 எ. ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | நவம்பர் 20 2010 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 24 2010 |
சூலை, 2010 இல் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். வலது கை மட்டையாளரான இவர் அவ்வப்போது இடது கை பந்துவீச்சாளராகவும் செயல்பட்டார். இவர் 2016 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 302 ஓட்டங்கள் அடித்தார்.இதன்மூலம் முந்நூருகள் அடித்த மூன்றாவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[1]
சர்வதேச போட்டிகள்
தொகுஇவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாகவே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். சூலை, 2010 இல் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[2]
ஆத்திரேலியா மற்றும் இங்கிலாந்து
தொகுஇவரின் காலத்தில் பாக்கித்தான் அணியின் மத்திய கள மட்டையாளர்களின் வரிசையில் யூனுஸ் கான் மற்றும் முகம்மது யூசுப் போன்ற திறமையானவர்கள் இருந்தனர். பின் உமர் அமினுடன் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 17 ஓட்டங்களையும் இரண்டவாவது ஆட்டப்பகுதியில் 42 ஓட்டங்களும் எடுத்தார், இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.[3] இதே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் முதல் ஆட்டப்பகுதியில் 30 ஓட்டங்களையும் இரண்டாவது ஆட்டப்பகுதியில் தனது முதல் அரைநூறினையும் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்கித்தான் அணி ஆத்திரேலிய அணியை வென்றது.[4] பின் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இவர் சிறப்பாக செயல்படவில்லை. முதல் போட்டியில் 32 பந்துகளில் இவர் ஓட்டங்கள் எதுவும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 72 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் முகம்மது யூசுப் மற்றும் அமின் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால் அசார் அலிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 92* ஓட்டங்கள் சேர்த்தார்.
தென்னாப்பிரிக்க தொடர்
தொகுபின் நவம்பரில் நடைபெற்ற தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் வாய்ப்ப்பினைப் பெற்றார். இந்தப் போட்டியின் இரண்டு ஆட்டப் பகுதியிலும் இவர் அரைநூறினைப் பதிவு செய்தார். மேலும் யூனுஸ் கானுடன் இணைந்து போட்டியை சமனில் முடிவதற்கு உதவினார். இரண்டாவது போடியின் முதல் ஆட்டப்பகுதியில் 90 ஓட்டங்கள் சேர்த்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் தலைவர் மிஸ்பா-உல்-ஹக்குடன் இணைந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 135 பந்துகளைச் சந்தித்து அணியை தோல்வியிலிருந்து மீட்க உதவினார்.
சாதனைகள்
தொகுசர்வதேச போட்டிகளில் வெள்ளைப்பந்தில் நூறுஓட்டங்களையும், சிவப்புப் பந்தில் இருநூறுகளையும், இளாம்சிவப்பு நிறப்பந்தில் முந்நூறு ஓட்டங்கள் எடுத்த முதல் சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 1000 ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[5] மேலும் சர்வதேச அளவில் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளார்.[6] ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை நூறு ஓட்டங்கள் அடித்த பாக்கித்தானிய தலைவர் எனும் சாதனை படைத்தார்.[7][8]
சான்றுகள்
தொகு- ↑ "Azhar Ali: Pakistan's fourth triple-centurion". ESPNcricinfo. 14 October 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
- ↑ "Test debut before playing an ODI". Cricbuzz.
- ↑ "1st Test: Australia v Pakistan at Lord's, Jul 13–16, 2010 – Cricket Scorecard – ESPN Cricinfo". பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
- ↑ "2nd Test: Australia v Pakistan at Leeds, Jul 21–24, 2010 – Cricket Scorecard – ESPN Cricinfo". பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
- ↑ "Records | One-Day Internationals | Batting records | Fastest to 1000 runs | ESPN Cricinfo". Stats.espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 1 February 2017.
- ↑ "Top 10 Fastest Batsmen To Reach 1000 ODI Runs". cricspirit. Archived from the original on 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
- ↑ "Hundreds by Pakistan captain". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
- ↑ "Azhar becomes first Pakistani captain to score 3 hundreds". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
வெளியிணைப்புகள்
தொகுகிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அசார் அலி