முதன்மை பட்டியைத் திறக்கவும்

முகம்மது யூசுப்

முகம்மது யூசுப் (Mohammad Yousuf, உருது: محمد یوسف இவரின் முன்னாள் பெயர் யூசுப் யொஹானா Yousuf Youhana, یوسف یوحنا, பிறப்பு: ஆகத்து 27. 1974), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் மற்றும் தேர்வுப் போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவார். 1998 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பன்னாட்டு இருபது20, முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வலதுகை மட்டையாளர் ஆவார். பாக்கித்தானிய வீரர்களில் உள்ள் சில கிறிஸ்தவர்களில் ஒருவராவார். பின் இவர் இசுலாம் சமயத்திற்கு மாறினார்.[2][3] 2006 ஆம் ஆண்டில்தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 1,788 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்தார். இவரின் மட்டையாட்ட 100 ஆக இருந்தது.[4]

முகம்மது யூசுப்
Mohammad yousuf.jpg
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் முகம்மது யூசுப்
பட்டப்பெயர் மொ யூ [1]
பிறப்பு 27 ஆகத்து 1974 (1974-08-27) (அகவை 45)
பாக்கித்தான்
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 122) பிப்ரவரி 26, 1998: எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு ஆகத்து 29, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 152) மார்ச்சு 28, 1998: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 22, 2010:  எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 90 287 134 325
ஓட்டங்கள் 7,530 9,717 10,152 10,510
துடுப்பாட்ட சராசரி 52.29 41.88 49.28 39.81
100கள்/50கள் 24/33 15/64 29/49 15/68
அதிக ஓட்டங்கள் 223 141* 223 141*
பந்து வீச்சுகள் 6 2 18 8
இலக்குகள் 0 1 0 1
பந்துவீச்சு சராசரி 1.00 13.00
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/3 1/0 0/3 1/0
பிடிகள்/ஸ்டம்புகள் 65/– 58/– 84/– 69/–

அக்டோபர் 10, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

மார்ச் 10, 2010 ஆம் ஆண்டில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக விளையாட தடை விதித்தது.[5] பின் இவர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும் , சக வீரர்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டதாலும் இவரை அணியிலிருந்து நீக்கியதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.[5]

அணியிலிருந்து நீக்கியதால் இவர் மார்ச் 29, 2010 இல் தனது ஓய்வினை அறிவித்தார்.[6] இருந்தபோதிலும் சூலை 2010 இல் நடைபெற இருந்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாட வருமாறு பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவரை அழைத்தது.[7]

சர்வதேச போட்டிகள்தொகு

முகம்மது யூசுப் டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.பின் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 9,000 ஓட்டங்களுக்கு மேல் ஒருநாள் போட்டிகளிலும், 7,000 ஓட்டங்களுக்கு மேல் தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளிலும் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 40, தேர்வுப் போட்டிகளில் 50 சராசரியாக வைத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 24 நூறுகள் அடித்துள்ளார். 2002-2003 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 405 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தார். மேலும் 23 பந்துகளில் அரைநூறும், 68 பந்துகளில் 100 ஓட்டங்களையும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அடித்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 27 பந்துகளில் அரைநூறு ஓட்டங்களை அடித்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் விரைவாக அரைநூறுகள் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் பொக்சிங் நாள் அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 111 ஓட்டங்கள் எடுத்தார். டிசம்பர் , 2005 ஆம் ஆண்டில் லாகூரில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 223 ஓட்டங்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார். சூலை 2006 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதன் முதல் போட்டியில் 202 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஹெடிங்லீயில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 192 ஓட்டங்களும், ஓவலில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 128 ஓட்டங்களும் எட்டுத்தார்.

இருபது20தொகு

இருபது20
# எதிரணி போட்டிகள் இன்னி NO ஓட்டங்கள் அதிகம் சராசரி பி ஸ்டிரைக் 100s 50s 0 4s 6s
1   இங்கிலாந்து 3 3 0 50 26 16.66 43 116.27 0 0 0 5 1
மொத்தம் 3 3 0 50 26 16.66 43 116.27 0 0 0 5 1

Referencesதொகு

  1. http://uk.eurosport.yahoo.com/cricket/cow-corner/article/17139/
  2. "For Pakistan's Dalit Christians, embracing Islam is an escape from stigma".
  3. Varma, Devarchit (27 March 2014). "7 Non-Muslim cricketers who played for Pakistan".
  4. "Yousuf's amazing run-spree".
  5. 5.0 5.1 "Rana, Malik get one-year bans, Younis and Yousuf axed from teams". ESPNCricinfo (29 March 2010). பார்த்த நாள் 10 March 2010.
  6. "Mohammad Yousuf retires from international cricket". ESPNcricinfo (29 March 2010). பார்த்த நாள் 29 March 2010.
  7. Gollapudi, Nagraj (1 August 2010). "Mohammad Yousuf added to Test squad". ESPNcricinfo. பார்த்த நாள் 2 August 2010.

வெளியிணைப்புகள்'தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_யூசுப்&oldid=2714449" இருந்து மீள்விக்கப்பட்டது