அகமது செசாத்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அகமது செசாத்(Ahmed shehzad,உருது: احمد شہزاد ‎ பிறப்பு: 23 நவம்பர் 1991), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர்.[1] லாகூர் இல் பிறந்த இவர் மட்டையாளர். பாக்கிஸ்தான் தேசிய அணி, லாகூர் துடுப்பாட்ட அணி அணி, கபீப் வங்கி அணி, லாகூர்ஈகல் லாகூர்ரவி லாகூர்சலிமார் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார். இவர் பாக்கித்தானிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2009 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.[2]

அகமது செசாத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அகமது செசாத்
பட்டப்பெயர்ஜனாய்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 172)24 ஏப்ரல் 2009 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப5 பெப்ரவரி 2011 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007கபீப் வங்கி அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ,தர
ஆட்டங்கள் 81 72 22
ஓட்டங்கள் 2,585 5,041 868
மட்டையாட்ட சராசரி 32.56 42.00 43.40
100கள்/50கள் 6/14 11/26 1/6
அதியுயர் ஓட்டம் 124 254 130*
வீசிய பந்துகள் 558 318
வீழ்த்தல்கள் 7 4
பந்துவீச்சு சராசரி 52.42 72.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/1 1/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 20/– 10/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பெப்ரவரி 9 2011

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அகமது செசாத் 23 நவம்பர் 1991 இல் லாகூரில் பிறந்தார்.இவர் பஷ்தூன் மக்கள் மரபைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பஷ்தூ மொழியை சரளமாகப் பேசும் திறன் பெற்றவர்.[3][4] இவருக்கு இரண்டு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை காலமானார். இவரின் தாயோடு லாகூரில் உள்ள அனார்க்கலியில் வசித்து வந்தார்.[5]

செப்டம்பர் 19, 2015 இல் இவரின் நீண்ட நாள் தோழியான சனா என்பவரைத் திருமணம் செய்தார்.[6][7] 2007 ஆம் ஆண்டில் தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இந்தப் போட்டியில் 167 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து துடுப்பட்ட அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு உதவினார்.[8]

தேர்வுத் துடுப்பாட்டங்கள்

தொகு

2014 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . டிசம்பர் 31 , இல் அபுதாபியில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 83 பந்துகளில் 38 ஓட்டங்களை எடுத்து எரங்காவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 109 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்து ஜெராத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில்முடிந்தது.[9]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

தொகு

ஏப்ரல் 24, 2009 இல்ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[2]

சாதனைகள்

தொகு

ஆதாரங்கள்:[10]

தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[11][12] பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக நான்கு மற்றும் ஆறு ஓட்டங்கள் அடித்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[13] இரு போட்டிகள் கொண்ட பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரில் 160 ஓட்டங்கள் சேர்த்து அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[14] லாகூர் லயன்ஸ் அணியில் அதிக ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தார். 76 போட்டிகளில் இவர் அனைத்து வடிவப் போட்டிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது சர்வதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.இதற்கு முன்பாக கே. எல். ராகுல் இந்தச் சாதனை படைத்தார். பாக்கித்தான் சூப்பர் லீக்கில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர் எனும் சாதனை படைத்தார். பன்னாட்டு இருபது20 போட்டியில் ஹேட்ரிக் ஆறு ஓட்டங்கள் அடித்த முதல் பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.

சான்றுகள்

தொகு
  1. http://m.espncricinfo.com/pakistan/content/player/259410.html
  2. 2.0 2.1 https://tribune.com.pk/story/1277470/ahmed-shahzad-eyes-odi-recall/%3famp=1/[தொடர்பிழந்த இணைப்பு]
  3. aPakistani. "Ahmad shehzad speaking pashtu – Video Dailymotion". Dailymotion. பார்க்கப்பட்ட நாள் 2016-02-15.
  4. Ahmed Shehzad interview with Sanam Baloch. "Ahmad shehzad speaking pashtu – ARY news interview". Dailymotion.
  5. "The Morning Show With (Exclusive Ahmad Shehzad) Sanam Baloch – ARY News – 4th September 2015". YouTube. Morning Show. பார்க்கப்பட்ட நாள் 2 March 2016.
  6. "Ahmad Shahzad celebrates first marriage anniversary with Sana". ARYNEWS. 19 September 2016. http://arynews.tv/en/ahmad-shahzad-celebrates-first-marriage-anniversary-with-sana/. பார்த்த நாள்: 16 November 2016. 
  7. "marriage". Dawn. பார்க்கப்பட்ட நாள் 2018-04-01.
  8. administrator (30 May 2012). "Ahmed Shehzad (Pakistan) – Player Profile, News, Stats, Wiki, Photos & Videos". Archived from the original on 4 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 27 மே 2018.
  9. "1st Test, Sri Lanka tour of United Arab Emirates at Abu Dhabi, Dec 31 2013 - Jan 4 2014 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
  10. "[Records] Ahmed Shehzad becomes first Pakistani to score 0 in his first 3 matches – CricNama". Archived from the original on 2015-05-21. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
  11. "Ahmed Shehzad – Pakistan's Greatest Opener Ever?".
  12. "Dreamt of becoming first Pakistani player to score a century in all three formats, says Ahmed Shehzad". The Indian Express. 30 March 2014.
  13. "[Records] Ahmed Shehzad: most runs, most sixes in T20 by a Pakistani – CricNama". Archived from the original on 2015-05-21. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
  14. "Statistics / Batting / Most runs in two–match T20I series". Howstat. பார்க்கப்பட்ட நாள் 27 August 2013.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_செசாத்&oldid=3682624" இலிருந்து மீள்விக்கப்பட்டது