வீச்சாட் (WeChat) (சீனம்: 微信பின்யின்: Wēixìn; நேர்பொருளாக "நுண்மையான செய்தி") என்பது உடனுக்குடன் செய்தியனுப்ப உதவும் மென்பொருளாகும். இந்த செயலியில் இணையவழி ஒலிப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இந்த செயலியை சீன நிறுவனமான டென்சென்ட் எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம், பிளாக்பெர்ரி, வின்டோசு, விண்டோஸ் போன் ஆகிய இயங்குதளங்களில் இந்த செயலியை இயக்க முடியும்.[1] [2]மாதந்தோறும் பல மக்கள் பயன்படுத்தும் செயலிகளுள் இதுவும் ஒன்றாகும்.[3] இச்செயலி 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[4] 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் இச்செயலி மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது இச்செயலியை 650 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுள் 70 மில்லியன் பேர் சின்னவைத் தவிர்ந்த வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவராவார்.[5] ஆங்கிலம், சீன மொழி, தய், இந்தோனேசியன், வியட்நாமியம், மலாய், சப்பானிய மொழி, கொரியன், போர்த்துகேயம், எசுப்பானிய மொழி, போலிய மொழி, இத்தாலிய மொழி, உருசிய மொழி, இந்தி, துருக்கிய மொழி, மியான்மார் மொழி ஆகிய 16 மொழிகளில் வீச்சட் செயலி காணப்படுகின்றது.

WeChat
உருவாக்குனர்டென்சென்ட்
தொடக்க வெளியீடுசனவரி 21, 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-01-21)
அண்மை வெளியீடுவார்ப்புரு:Latest stable software release/WeChat
இயக்கு முறைமைiOS,OS X, Android, விண்டோஸ் போன், சிம்பியன் இயங்குதளம், BlackBerry OS, BlackBerry 10, மைக்ரோசாப்ட் விண்டோசு
கிடைக்கும் மொழிஆங்கிலம், சீன மொழி, தய், இந்தோனேசியன், வியட்நாமியம், Malay, சப்பானிய மொழி, கொரியன், போர்த்துகேயம், எசுப்பானிய மொழி, போலிய மொழி, இத்தாலிய மொழி, உருசிய மொழி, இந்தி, துருக்கிய மொழி, மியான்மார் மொழி
மென்பொருள் வகைமைஉடனடி செய்தியனுப்பல் client
உரிமம்மூடிய மூலம்
இணையத்தளம்www.wechat.com (பன்னாட்டு)
weixin.qq.com (சீனா)

உரைச் செய்தியனுப்புதல், ஒலிச் செய்தியனுப்புதல், ஒலிபரப்புச் செய்தியனுப்புதல், காணொளிக் கலந்துரையாடல், காணொளி விளையாட்டுக்கள், காணொளிகள் புகைப்படங்கள் பரிமாறும் வசதி, அமைவிடப் பரிமாறல் ஆகிய பல வசதிகளை இச்செயலி தருகின்றது. [6] புளூடூத் மூலம் அருகிலுள்ள நபர்களுடன் தொடர்பு கொள்ளும் வசதி, பேஸ்புக், டென்சென்ட் கியூ கியூ ஆகிய சமுக வலைத்தளங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படும் வசதி ஆகியவையும் இச்செயலியில் காணப்படும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும் புகைப்படங்களை அழகுபடுத்தி மெருகூட்டும் வசதி, மொழிபெயர்ப்பு வசதி ஆகியவையும் இச்செயலியில் காணப்படுகின்றன.[7]

வரலாறு

தொகு

வீச்சாட் செயலியை உருவாக்குவதற்கான திட்டமும் ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளும் டென்சென்ட் நிறுவனத்தால் 2010 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இச்செயலியின் உண்மையான பெயர் "வெய்சின்" ("Weixin") என்பதாகும். இதனை சியாவோலோங் சாங் (Xiaolong Zhang) என்பவர் உருவாக்கினார். [8] பின்னர் டென்சென்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான மா ஹுவடெங் என்பவரால் இச்செயலி பெயரிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக சந்தைக்காக வெய்சின் எனும் பெயர் வீச்சாட் எனும் பெயராக மாற்றப்பட்டது..[9] 12 ஆகத்து 2012 அன்று இச்செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 600 மில்லியன் என டென்சென்ட் நிறுவனம் தெரிவித்தது.[10]

சான்றுகள்

தொகு
  1. Mittal Mandalia (2014-02-28). "WeChat announces native Mac client; Windows version may follow soon". techienews.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2014-03-06.
  2. "WeChat for Windows".
  3. It’s time for messaging apps to quit the bullshit numbers and tell us how many users are active. techinasia.com. January 23, 2014. Steven Millward.
  4. "Weixin (微信) – Tencent's Bringing the Mobile IM Revolution to theMainstream". TechRice. September 21, 2011. Archived from the original on அக்டோபர் 3, 2015. பார்க்கப்பட்ட நாள் April 20, 2012.
  5. "Tencent - Investor Relations - Financial Releases - 2014". Tencent. 12 August 2015.
  6. https://community.giffgaff.com/t5/Blog/WeChat-Messaging-App-Review/ba-p/14153535 WeChat users can send free text messages (SMS), picture messages (MMS), voice messages, video messages, and make free voice calls and video calls. Group chat functionality, broadcast messages (sending voice messages to multiple users) and walkie talkie mode are also available. Other services include location sharing, contacts sharing, photo sharing, moments and games. Moments allow users to share photos with their Facebook or Twitter accounts. WeChat offers paid for services including downloading stickers and downloading games with in-app game purchases. After three months of launching WeChat’s Game Center in 2013, it registered over 570 million downloads.
  7. "WeChat - Features". wechat.com. Archived from the original on 27 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. Loretta Chao , Paul Mozur (Nov 19, 2012). "Zhang Xiaolong, Wechat founder". The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 2012-11-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121127173150/http://www.cn.wsj.com/gb/20121119/tec072332.asp. பார்த்த நாள்: 2012-12-02. 
  9. 陈小蒙 (2012-11-07). "微信:走出中国,走向世界?". 36氪. http://www.36kr.com/p/167538.html. பார்த்த நாள்: 2012-12-03. 
  10. https://www.techinasia.com/wechat-monthly-active-users-q2-2015/>

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீச்சாட்&oldid=3572063" இலிருந்து மீள்விக்கப்பட்டது