வீட்டோட மாப்பிள்ளை
வீட்டோட மாப்பிள்ளை (Veettoda Mappillai) என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமான இத்திரைப்படம் வி.சேகரால் எழுதி இயக்கப்பட்டது. நெப்போலியன் மற்றும் ரோஜா நடித்துள்ள இப்படத்தில் விஜயகுமார், சார்லி, வையாபுரி, கல்பனா, கோவை சரளா, தலைவாசல் விஜய் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது.[1][2]
வீட்டோட மாப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | வி. சேகர் |
தயாரிப்பு | எஸ்.எஸ்.துரை ராஜு கே.பார்த்திபன் |
கதை | வி.சேகர் |
இசை | தேவா |
நடிப்பு | நெப்போலியன் விஜயகுமார் ரோஜா கோவை சரளா சார்லி கல்பனா தலைவாசல் விஜய் சோனியா வையாபுரி |
ஒளிப்பதிவு | பி. எஸ். செல்வம் |
படத்தொகுப்பு | ஏ. பி. மணிவண்ணன் |
விநியோகம் | திருவள்ளுவர் கலைக்கூடம் |
வெளியீடு | செப்டம்பர் 14, 2001 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார்.[3]
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
ஓட்டல் நடத்தும் ஒரு பெரியவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகன் இளவயதில் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான். முதல் இரண்டு மகள்களுக்கும் மணமுடித்த மாப்பிள்ளைகள் வேலைக்குச் செல்லாமல் மாமனார் உழைப்பில் வாழ்கின்றனர். தனது ஓட்டலில் நாணயமாக இருக்கும் வாலிபனை மூன்றாவது மகளுக்கு மணமுடித்துக் கொடுக்கிறார். மருமகனாக வந்தவர் வீட்டோடு மாப்பிளையாய் இருந்து ஓட்டல் பொறுப்பை ஏற்று நடத்துகிறார். நல்ல வருவாயும் ஈட்டி தருகிறார். இந்நேரம் திரும்பி வரும் மகன் , பிரச்சனைகளைக் கொண்டுவர குடும்பம் சிதைகிறது.தனது தவற்றை உணர்ந்து பெரியவரின் பெற்ற மகனும் திருந்தி, மகனாய் வந்த மாப்பிள்ளை மீண்டும் குடும்பத்துடன் இணைவதைச் சொல்லும் திரைச்சித்திரம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Veettoda maappillai ( 2001 )". Cinesouth. Archived from the original on 22 July 2012. பார்க்கப்பட்ட நாள் 20 November 2023.
- ↑ "Veettoda Mapillai (Tamil)". actornepoleon.com. Archived from the original on 2 December 2023. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ "Veettoda Mappillai (2001)". Raaga.com. Archived from the original on 12 September 2012. பார்க்கப்பட்ட நாள் 10 April 2012.