வீரமாங்குடி

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

வீரமாங்குடி (Veeramankudi) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[4][5]

வீரமாங்குடி
—  கிராமம்  —
வீரமாங்குடி
அமைவிடம்: வீரமாங்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°55′43″N 79°09′13″E / 10.928635°N 79.153490°E / 10.928635; 79.153490
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர்க்காரணம்

தொகு

புராண கதையில் வீரமாங்குடி வரலாறு

ஓம் எனும் பிரணவ மந்திர கதை

  • திருக்கயிலை பிரானான ஸ்ரீ பரமேஸ்வரன் ஒருசமயம் பிரணவ மந்திரத்தின் சூட்சமங்களை உலகறிய செய்ய வேண்டும் என தன் திருவுள்ளத்தில் நினைத்தான் .
  • எந்த பிரணவ மந்திரத்தின் சக்தியினால் அகிலமெல்லாம் அந்தரத்தில் தாழாமல் நிற்கின்றனவோ, அந்த மூல மந்திரத்தின் சக்தியையும், பெருமையையும் ஸ்ரீ முருகப்பெருமான் மூலம் தாம் கேட்டு இன்புற நினைத்தான்.
  • வேத சொருபீயான பரமேஸ்வரனுக்கு பிரணவ மந்திரத்தின் உட்பொருள் தெரியாதா? இருப்பினும் உலக நன்மை பொருட்டு ஒரு நாடகத்தை நடத்துவதற்கு திருவுள்ளம் கொண்டான்.
  • மயில்வாகனனும் தனது குழந்தையுமான ஸ்ரீ முருகப்பெருமானிடம் தெரிவிக்க, வள்ளி மணாளனும் சுவாமிமலையில் பிரணவமந்திரத்தின் உட்பொருளை அம்மையப்பனுக்குக் கூறுவதாக பதிலுரைத்தான்.
  • அதனை ஏற்று திருவுள்ளம் மகிழ்ந்த பெருமானும் திருக்கயிலையை விட்டு தென் திருக்கயிலாயம் என பூஜிக்கப்படும் திருவையாறு திருத்தலத்திற்குத் தன் தேவி பார்வதியுடன் எழுந்தருளினார்.

திருவையாறு

  • பெருமானுடன் அம்பிகை ஸ்ரீ பார்வதியும், நந்தியும், கணபதியும், நவகிரகங்கள் தன் துணைவியாருடனும், இந்திராதி தேவர்களும் திருவையாற்றில் வந்திறங்கினர்.
  • தந்தையே ஆனாலும் சிவன் தனது மகனிடம் கற்க செல்கிறார் அல்லவா, எனவே சீடன் குருவிடம் செல்லும் போது. தன் குடும்பமேயானாலும் விடுத்து தனியே குருகுலம் செல்வது என்பது நியதி. இது ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும். எனவே அங்கிருந்து சுவாமிமலைக்கு எழுந்தருளிய எம்பெருமான் தான் மட்டும் சீடனாக ஸ்ரீ முருகப்பெருமானிடம் பிரணவத்தின் உட்பொருளை கேட்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு,தன்னுடன் வந்த அனைவரையும் 'கங்கையின் புனிதமாய காவிரி' எனப் போற்றப்படும் காவிரி நதியின் வடகரையின் ஓரமாகத் தன் தெய்வீக திருப்பாதம் பதித்து நடந்தான்.

திங்களூர்

  • எழுந்தருளும் வழியில் தன் சிரசிலிருந்த சந்திரனை ஓரிடத்தில் இருக்கச் செய்தார். சந்திரனுக்கு திங்கள் என்று பெயருண்டல்லவா, ஆதலால் சந்திரனை இறைவன் இறக்கிவிட்ட இடத்திற்கு திங்களூர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
  • ஜனன கால ஜாதகத்தில் சந்திரனுக்கு தோஷமிருப்பின், அதற்கு மிக சிறந்த பரிகாரத்தளம் இந்த திங்களூர்.

வைரவன் கோயில்

  • சுவாமிமலை நோக்கி தன் திருவடிகள் நோக நடந்து சென்ற சிவபெருமான்,அடுத்ததாக ஓரிடத்தில் பைரவரை நிறுத்தினார், அதுவே பைரவ ஷேத்திரமாக மாறி இன்று வைரவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

ஈச்சங்குடி

  • ஸ்ரீ முருகப்பெருமானிடம் சிஷ்யனாக மாறி பிரணவ மந்திர பொருளை கேட்கச்சென்ற இறைவன், தன் ஈஸ்வர அம்சத்தை ஓரிடத்தில் நிறுத்தினார். அந்த இடமே இன்று ஈச்சங்குடி என்று அழைக்கபடுகிறது.

சோமேஸ்வரபுரம்

  • அங்கிருந்து தன் பரிவாரங்களுடன் நடந்து சென்ற ஸ்ரீ சிவபெருமான் தன் சோமஸ்கந்தர் அம்சத்தை நிறுத்தினார், இதனால் இத்தளம் சோமஸ்கந்தபுரம் என அழைக்கப்பட்டது பின் நாளடைவில் அதுவே சோமேஸ்வரபுரம் ஆனது.

வீரமாங்குடி

  • அதன் பின் தன்னுடன் தம்பதி சமேதர்களாக வந்த நவகிரஹங்களையும்,வீரர்களையும் ஒரு இடத்தில் நிறுத்தினார்.
  • வீரர்களும் நவகிரஹங்களும் அமர்ந்த தளமாதலால் இதற்கு வீரமாங்குடி என்று பெயர் பெற்றது.
  • சுவாமிமலைக்கு சென்ற ஸ்ரீ சிவபெருமானின் பாதம் பட்ட இடத்தில் ஸ்ரீ வஜ்ராகண்டேஸ்வர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறான் ஸ்ரீ சிவபெருமான்”
  • பரமனின் திருவுள்ளப்படி நவகிரகங்கள் அனைவரும் தம்பதி சமேததர்களாக அருள்பாலித்து வருகின்றனர்.
  • ஸ்ரீ மங்களாம்பிகை
  1. தேவியின் திருநாமம் ஸ்ரீ மங்களாம்பிகை,பெருமானுக்கு இடபாகத்தில் ஆலயம் கொண்டு அருள்பாளிக்கின்றால்.
  2. ஸ்ரீ மங்களாம்பிகை, கன்னிப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கையையும், திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்தையும் தருபவளாக இருக்கிறாள். எனவே, இவளுக்கு “மங்களாம்பிகை” என்று பெயர் சூட்டியுள்ளனர். புதுமணத் தம்பதியர் தங்கள் வாழ்க்கை குறையின்றி இருக்க, இந்த அம்பிகைக்கு புடவை, மஞ்சள் கயிறு அணிவித்தும், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பொடிகளை சன்னதியில் வைத்தும் வழிபடுகின்றனர். இதனால், அவர்களது வாழ்வு மங்களகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
  • சுற்றுபுறம் வினாயகபெருமான், துணைவியார்களுடன் ஸ்ரீசுப்பிரமணியனும், அழகாக ஸ்ரீ வரதராஜபெருமாளும் தனித்தனி ஆலயம் கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
  • காலமனைத்தையும் கடந்து தன் தெய்வீக சக்தி சிறிதும் குன்றாத கோபுரமாய் விளங்குகிறது.

தேவன்குடி

  • ஸ்ரீ சிவபெருமானின் பாதம் அடுத்து கடந்த இடம், இங்கு தேவர்களை நிறுத்தி, இருக்க செய்ததால், தேவர்கள் குடிகொண்ட இந்த தளம் தேவன்குடியானது.

மணலூர்

  • ஸ்ரீ சிவபெருமான், மாரியம்மனை இருக்க செய்த இடம் மணலூர் ஆனது.

இழுப்பைகோரை நந்தி மதகு

  • ஸ்ரீ சிவபெருமான், தன் வாகனமான நந்தியை இருக்க செய்த இடம் இழுப்பைகோரை ஆனது.

கணபதி அக்ரஹாரம்

  • தன் முதல் மைந்தனும் ஆருமுகத்தனின் அண்ணனுமான கணபதியை இருக்கச்செய்தலால் கணபதி அக்ரஹாரம் ஆனது.

கவித்தளம்

  • வானர சேனைகளை இந்த தலத்தில் இருக்க செய்தார். வானர சேனைகளை கவி என்பர். கவி அமர்ந்த தளமாதலால் இது கவித்தளம் என்று அழைக்கபடுகிறது

உமையாள்புரம்

  • தன்னுடனான நாயகி பார்வதி தேவியான உமையாளை இருக்கைச் செய்த தளம் உமையாள்புரம் என்று அழைக்கபடுகிறது

சுவாமிமலை பின் தனியொரு சீடனாகவே தனயனிடம் உபதேசம் பெற சுவாமிமலைக்கு எழுந்தருளினான் எம்பெருமான். அப்பனுக்கு(சிவன்) பாடம் சொன்ன சுப்பையன் (முருகன் ) தளம் இந்த சுவாமிமலை. அதாவது இந்த சுவாமிமலையில்தான் தந்தைக்கு உபதேசம் செய்தான் தமையனான முருகன். *முருகனின் ஆறுபடை வீடுகளில் இந்த சுவாமிமலையும்ஒன்று.

  • குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பர். ஆனால் இந்த சுவாமிமலை செயற்கையாகவே அமைக்கப்பட்ட மலையாகும்.

திருவிளையாடல்

  • ஈசனே ஆனாலும் கூட ஒரு குருவிடம் உபதேசம் பெற எப்படி செல்ல வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே சிவபெருமான் நடத்திய இணையற்ற திருவிளையாடல் இது!

சுவாமிமலையில் சுவாமிநாதனாக எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான், தான் அறிந்ததைத் தந்தைக்குச் செய்த உபதேசம் மூலம் வெளிபடுத்திய இந்த புண்ணிய சரித்திரம் இன்று அனைவரும் அறிந்த ஒன்றாகிவிட்டதில் பெருமிதம் கொள்கிறது வீரமாங்குடி.

[6]

ஊரின் பழங்கதை

தொகு
  • வீரமாங்குடி கிராமத்திலே இந்து சமயத்தின் உட்பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட அறுவகைத் தெய்வங்களுக்கும் தனித்தனியே ஆலயங்கள் உண்டு. அதற்குரிய விழாக்களும் ஒரு காலத்தில் தவறாமல் நடந்து வந்தது. செல்லியம்மன் ஆலயத் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்று வந்தன.
  • தேரோடும் வீதியெங்கும் மக்கள் திரண்டு சாமி கும்பிட்டு வந்தார்கள். "ஊருணி பொங்கல்' என்றும் "ஒப்பில்லாப் படையல்' என்றும் செல்லியம்மனுக்குப் படைத்தனர். இன்று தேரும் இல்லை, திருவிழாவும் இல்லை என்றாகிவிட்டது.
  • காவல் தெய்வம் கருப்பண்ண சாமிக்கும் பொங்கலிட்டு ஆடி மாதத்திலே அற்புத திருவிழா நடத்தினர். அதுவும் இப்போது நின்று போய் இப்போதோ எப்போதோ என்று ஆகிவிட்டது.
  • இவ்வூரிலுள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா, சுற்றுவட்டார கிராமங்களில் வெகு பிரசித்தம். திருவிழா ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே கோயில் பூசாரியார் தன் குழுவினருடன் மகாபாரதக் கதையை பாட ஆரம்பித்துவிடுவாராம்.
  • பம்பை, உடுக்கை முழங்க அவர் கதை சொல்லும் பாணி அலாதியாக இருக்குமாம். ""கதை துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே பம்பை ஒலிக்கத் துவங்கிவிடும்; அதன் கம்பீரமான ஒலி கிராமம் முழுவதும் கேட்கும்.
  • கிராமத்தினர் இரவு உணவை முடித்துக் கொண்டு கதை கேட்கச் சென்றுவிடுவர். திருவிழா நெருங்க இருக்கும் நாட்களில் மதிய நேரத்திலும் மகாபாரதக் கதை நடைபெறும். இதை உறுமக் (மதியம்) கதை என்று கூறுவோம். இந்த மதியக் கதை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு சென்று விடுவோம். பாடத்தை விட பாரதம் அவ்வளவு இனிமையாக இருக்கும்.
  • இந்த நிகழ்வுகள் அனைத்தும் கீழவீதியை மையமாக கொண்டு இருக்கும். தெற்கு வீதியில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் "பக்த ருக்மாங்கதா' நாடகம் நடக்கும். மெலட்டூர், சாலியமங்கலம் பாகவதமேளா நாட்டிய பாணியில் நடந்த இந்த நாடகத்தைக் காண ஏராளமான கூட்டம் வரும்.
  • 75 ஆண்டுகள் தொடர்ந்து இந்த நாடகம் நடந்தது. ருக்மாங்கதனாக நடித்த கருப்பையா மூப்பனாரும் மோகினியாக நடித்த துரையப்ப மூப்பனாரும் மறைந்து போக இந்த நாடகமும் நின்று போனது என்று இன்றும் இங்குள்ள பெரியவர்கள் அன்றைய வசந்த காலத்தை அசை போடுகின்றனர்.
  • "மேல வீதியிலே ஐந்து நாட்களுக்கு ராம நாடகமும் லவாகுசா நாடகமும் நடந்து அமர்க்களப்படும். வடக்கு வீதியிலே சித்திரை மாதத்திலே சிறு தொண்டர் நாடகம், மூன்று நாட்களுக்கு நடக்கும். இதற்குப் போட்டியாக கீழ வீதியிலே அரிச்சந்திரா நாடகம் நடக்கும்.
  • எல்லாவற்றிலும் போட்டி இருக்குமே தவிர பொறாமை இருக்காது. ஒருவர் செய்ததைவிட மற்றொருவர் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவர் என்று முதியோர்கள் மூச்செறிகின்றனர்.
  • தீமிதியும், திருவிழாவுமாகத் திகழ்ந்த திரௌபதி அம்மன் ஆலயம், கிராமவாசிகளால் புதுப்பிக்கப்பட்டு நல்ல நிலைமையில் உள்ளது.

[6]

கோவில்கள்

தொகு

வஜ்ரகண்டேஸ்வரர் ஆலயம் - வடக்கு தெரு

தொகு

தலவரலாறு

  • சாதாரண மனிதனால் மட்டுமே அழிவு உண்டாகும்படியான வரம் பெற்றிருந்த வஜ்ரன் என்ற அசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அவனுடன் சண்டையிட்டும் வெற்றி பெற முடியவில்லை. அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர்.
  • அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், சிவனடியார் ஒருவரை அசுரனிடம் அனுப்பினார். அவர் அசுரனுடன் போர் வீரன் போல சண்டையிட்டு அழித்தார். இறக்கும் நேரத்தில் தன் தவறை உணர்ந்த அசுரன், சிவனிடம் மன்னிப்பு வேண்டினான். அவனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
  • அசுரனின் பெயரால் "வஜ்ரகண்டேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார். வீரனாக வந்த அடியாரால் அசுரன் அழிந்ததால் தலத்திற்கு "வீரமாங்குடி' என்ற பெயர் ஏற்பட்டது.

தலச் சிறப்பு

  • இங்குள்ள நவக்கிரக சன்னதியில் எண்கோண வடிவ பீடத்தின் மீது, அனைத்து கிரகங்களும் தங்களின் வாகனத்தில், மனைவியுடன் தம்பதியராக அமர்ந்துள்ளது சிறப்பு.
  • ஜாதகத்தில் கிரக தோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக இந்த சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.

விசேஷங்கள்

  • 500 வருடங்களுக்கு முன் பழமையானது
  • தல விருச்சம் :வில்வம்
  • சிவராத்திரியில் விசேஷ பூஜை நடைபெறும்
  • ஐப்பசியில் அன்னாபிஷேகம் நடைபெறும்

மேலும் தகவல்களுக்கு.

கருப்பையா சாமி - குதிரை கோயில் தெரு

தொகு
  • கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வம்.
  • கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு.
  • கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது.
  • கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
  • தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார்.
  • கருப்புசாமி இல்லாத கிராம கோவில்களே இல்லை என கூறும் அளவிற்கு இந்த கடவுள் தமிழரின் வாழ்வில் ஒன்றியுள்ளார்.
  • குலதெய்வம் பொதுவாக மூலம் ஒரு இடம் என்றால் அதை வரவழைத்து ஆலயம் எழுப்புவது அக்கால நடைமுறையில் ஒன்று. ஏனென்றால் குலதெய்வ கோயில் பல மயில்களுக்கு அப்பால் இருக்கும் போக்குவரத்து வசதி இல்லாத கால கட்டத்தில் செல்வது சிரமம். இன்னொன்று குலதெய்வம் தங்கள் அருகிலே இருந்து அருள்பாலிக்க எண்ணி அந்த அந்த ஊர்களில் வரவழைத்து ஆலயம் அமைப்பர்
  • இங்குள்ள கருப்பசாமி மூலம் ஒட்டகுத்தூர் அரியலூர் அருகில் உள்ளது, அங்கிருந்து வரவழைத்து இங்கு ஆலயம் எழுப்பி உள்ளனர்.
  • இவரின் வாகனம் குதிரை என்பதால், இந்த ஆலயம் அமைந்துள்ள தெரு குதிரை கோயில் தெரு என அழைக்கப்படுகிறது.
  • இவரின் தோற்றம் பெரிய மீசை, கையில் பெரிய அருவாள் கொண்டு, கண்களை முழித்தும் இருக்கும்.
  • இவர் இரவு நேரங்களில் ஊரை காவல் காக்க வெள்ளை குதிரை வளம் வருவார் என்கிற ஐதீகம் உள்ளது.

பாலகணபதி பாலமுருகன் கோவில் - மந்தைவெளி

தொகு
  • வீரமாங்குடி மந்தைவெளியில் அமைந்துள்ளது பாலா கணபதி பாலா முருகன் கோயில்
  • இங்கு நடைபெறும் சோமவாரம் நிகழ்ச்சி பிரபலமான ஒன்று, ஒரு மாத காலம் நடக்கும் சோமவாரம் விழாவில் ஒவ்வொரு வீட்டை சேர்ந்த குடும்பத்தாரும் நாள் ஒன்றுக்கு படையல் வைத்து பக்கதர்கள் அனைவருக்கும் சுண்டல் வழங்குது சிறப்பான ஒன்று.
  • இறுதி நாளில் மந்தை வெளியில் அமைக்க பட்ட சுடலை மரத்தை தீயிட்டு கொளுத்தி கொண்டாடுவர்.
  • மார்கழி மாதத்தில் இந்த கோயிலில் அமைக்கபடும் ரேடியோ செட் பக்தி பாடல்கள் மந்தை வெளி முழுதம் சத்தம் எழுப்பி உற்சாகம் பரப்பும் ஊர் மக்களுக்கு.

திரௌபதி அம்மன் ஆலயம் - மந்தைவெளி

தொகு
  • இவ்வூரிலுள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா, சுற்றுவட்டார கிராமங்களில் வெகு பிரசித்தம்.
  • திருவிழா ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே கோயில் பூசாரியார் தன் குழுவினருடன் மகாபாரதக் கதையை பாட ஆரம்பித்துவிடுவாராம்.
  • பம்பை, உடுக்கை முழங்க அவர் கதை சொல்லும் பாணி அலாதியாக இருக்குமாம். ""கதை துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே பம்பை ஒலிக்கத் துவங்கிவிடும்; அதன் கம்பீரமான ஒலி கிராமம் முழுவதும் கேட்கும்.
  • கிராமத்தினர் இரவு உணவை முடித்துக் கொண்டு கதை கேட்கச் சென்றுவிடுவர். திருவிழா நெருங்க இருக்கும் நாட்களில் மதிய நேரத்திலும் மகாபாரதக் கதை நடைபெறும். இதை உறுமக் (மதியம்) கதை என்று கூறுவோம்.
  • ஏழு நாட்கள் நடைபெறும் தேர் திருவிழாவும் வாணவேடிக்கையும் காண கண்கோடி வேண்டும்.

செல்லியம்மன் ஆலயம் - அய்யனார் தெறிச்சி

தொகு
  • செல்லியம்மன் ஆலயம் வீரமாங்குடியில், அய்யனார் தெரிச்சியில் அமைந்துள்ளது சமீபத்தில் புதிபிக்கப்பட்டு கும்பாபிசேகம் நடந்து இப்போது பரந்த நிலப்பரப்புடன் விசாலமாக காட்சி அளிக்கிறது.
  • கிராமத்தின் எல்லையில் காக்கும் தெய்வமாக இருக்கிறாள் ஒரு அம்மன். அவளை எல்லையம்மன் என அழைக்கிறார்கள்.
  • அந்த எல்லை அம்மன் செல்லியம்மன் பெயரில் இங்கு அமர்ந்து அருள் புரிகிறாள்.
  • ஒருகாலத்தில் செல்லியம்மன் ஆலயத் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்று வந்தன.
  • தேரோடும் வீதியெங்கும் மக்கள் திரண்டு சாமி கும்பிட்டு வந்தார்கள். "ஊருணி பொங்கல்' என்றும் "ஒப்பில்லாப் படையல்' என்றும் செல்லியம்மனுக்குப் படைத்தனர். இன்று தேரும் இல்லை, திருவிழாவும் இல்லை என்றாகிவிட்டது.
  • தன்னைத் தேடிவந்து தரிசிப்பவர்களுக்கு நன்மையே செய்கிறாள் செல்லியம்மன்.
  • ராகுகாலத்தில் தீபமேற்றுவது, வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்வது, எல்லாம் தொடர்ந்து நடக்கின்றன.
  • பக்தர்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே நிறைவேற்றித் தருவதில் அன்னைக்கு நிகர் அன்னையே.

இதர கோவில்கள்

தொகு
  • பேச்சியம்மன் ஆலயம் - கொள்ளிடக்கரை
  • ஆலமர பிள்ளையார் - கொள்ளிடக்கரை
  • கருப்பையா சாமி - குதிரை கோயில் தெரு
  • பிள்ளையார் கோயில் - தெற்கு தெரு, நடுத்தெரு, புதுதெரு
  • காளி கோயில் - அய்யனார் தெறிச்சி
  • ஐய்யனார் கோயில் - அய்யனார் தெறிச்சி
  • அன்ன மடம் - வடக்கு தெரு
  • ஓம்சக்தி ஆலயம் - தெற்கு தெரு
  • வடலூர் அடிகளார் ஆலயம் - குதிரை கோயில் தெரு
  • பேச்சியம்மன் ஆலயம் - கொள்ளிட கரை
  • இயேசு கிறிஸ்து ஆலயம் - இந்திரா நகர்
  • முருகன் கோயில் - தேவன்குடி
  • சிவபெருமான் ஆலயம் - தேவன்குடி
  • மகா மாரியம்மன் ஆலயம் - மணலூர்

மண்ணின் மைந்தர்கள்

தொகு
  • ஒரு ஊர் வளமையுடனும், புகழுடனும் இருக்க மண்ணை சார்ந்த மனிதர்களும் ஒரு காரணம்.
  • பொதுவாக படிப்பு, தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் தேடி மண்ணை விட்டு மனிதன் இடம்பெயருவது வாடிக்கை.
  • கிராமங்களின் முக்கிய தொழிலாய் கருதப்படுவதும், மக்களின் உயிர் மூச்சாய் இருக்கும் உணவை, உற்பத்தி செய்வதுமான விவசாய தொழில் இன்று போதுமான ஆட்கள் இன்றியும், நீர் பாசன வசதி குன்றியும், நலிவடைந்து வரும் நிலையில், மாற்று காரணி தேடி மண்ணை விட்டு இடம்பெயர்வோர் இன்று அதிகம்.
  • அத்தகைய எந்த மாற்றம் வந்தாலும் மண்ணை மக்களையும் பிரியா மண்ணின் மைந்தர்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள்.
  • இவர்களின் பிறப்பு, வளர்ப்பு மட்டும் இன்றி இறப்பும் பிறந்த மண்ணிலே வேண்டும் என்ற கொள்கைகளோடு வாழ்வார்கள்.
  • சொந்த பிள்ளை வீடேயானாலும் நகர்புறத்தில் இவர்களால் ஓரிரு நாட்களுக்கு மேல் தங்குவது கடினம்.
  • விஞ்ஞான வளர்ச்சியாலும், அறிவியல் முன்னேற்றத்தினாலும் தொழில் துறையில், நகர்ப்புறங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தாலும். கிராமங்களின் நிலை தாழ்ந்து போகாமல் இருக்க முதுகெலும்பாய் இருக்கும் காரணிகள் இவர்கள்.
  • இவர்கள்தான் நம் மண்ணின் மைந்தர்கள். அத்தகைய நம் வீரமாங்குடி மண்ணின் மைந்தர்களை வெளிச்சம் போட்டு காட்டும் கட்டுரைதான் வீரமாங்குடி மண்ணின் மைந்தர்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-08.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-23. பார்க்கப்பட்ட நாள் 2013-04-08.
  6. 6.0 6.1 வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில்[தொடர்பிழந்த இணைப்பு]

அமைவிடம்

தொகு
  • தஞ்சையிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், ஐயாறப்பர் ஆலயம் அமைந்து உள்ள திருவையாற்றில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் வீரமாங்குடி கிராமம் அமைந்துள்ளது. வான் பொய்ப்பினும் தான் பொய்யாமல் ஒரு காலத்தில் பாய்ந்த காவிரியின் வடக்கிலும், கொள்ளிடம் ஆற்றின் தெற்கிலும் இடைப்பட்டு நிற்கிறது, இந்த எழிலார்ந்த கிராமம்.
  • திருவையாறுவிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியிலுள்ள சோமேஸ்வரபுரம் வளைவு பேருந்து நிறுத்தத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.
  • 2010ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 3025 பேர் அதில் ஆண்கள் : 1547 பெண்கள்: 1478
  • இதன் துணை கிராமமாக தேவன்குடி கிராமம் உள்ளது. அதாவது வீரமாங்குடி பஞ்சாயத்தில் வீரமங்குடி, புதுத்தெரு மற்றும் தேவன்குடி ஆகியன ஒரே குடையின் கீழ் உள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரமாங்குடி&oldid=4121724" இலிருந்து மீள்விக்கப்பட்டது