வெண்மார்புச் சிரிப்பான்
வெண்மார்புச் சிரிப்பான் என்பது சாம்பல் மார்பு சிரிப்பான் (Grey-breasted laughingthrush) என்றழைக்கப்படுகிறது. இப்போது இவை இரண்டு சிற்றினங்களாக பழனி சிரிப்பான் மற்றும் அசம்பு சிரிப்பான் பிரிக்கப்பட்டுள்ளன.
வெண்மார்புச் சிரிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. meridionale
|
இருசொற் பெயரீடு | |
Montecincla meridionale (Blanford, 1880) | |
பெயர்கள்
தொகுதமிழில் :வெண்மார்புச் சிரிப்பான்
ஆங்கிலப்பெயர் :Grey-breasted Laughingthrush
அறிவியல் பெயர் :Montecincla meridionale [2]
உடலமைப்பு
தொகு20 செ.மீ. - சிலேட் பழுப்பு நிறத்தலையும் ஆலிவ் பழுப்பு நிற உடலும் கொண்டது. தொண்டை, கன்னம், மார்பு ஆகியன சாம்பல் நிறம், வயிறு வெளிர் சிவப்பு.
காணப்படும் பகுதிகள்
தொகுநீலகிரி, கொடைக்கானல், ஆனைமலை சார்ந்த மலைப் பகுதிகளில் பசுமைமாறாக் காடுகளையும் மலைவாசிகள் குடியிருப்புகளையும் அடுத்துக் காணலாம். 6 முதல் 12 வரையான குழுவாகப் காணப்படும்.
உணவு
தொகு6 முதல் 12 வரையான குழுவாகப் புதர்களிடையே தாவித் திரிந்து புழபூச்சிகள், சிறுகனிகள் முதலியனவற்றை இரையாகத் தேடித் தின்னும்.
இனப்பெருக்கம்
தொகுஅச்சம் ஏற்பட்டால் பதுங்கி ஒளிந்து கொள்ளும். உரக்கச் சீழ்க்கை ஒலி எழுப்பியும் குழு முழுதும் ஒன்றாகச் சிரிப்பது போல கலகலத்தும் மாங்குயில் போல இனிய குரலில் கூவியும் தனது இருப்பை அறிவிக்கும். ஓடிப் புதர்களிடையே மறையும் போது விட்-விட்-விட் என சிறு குரலெழுப்பும். டிசம்பர் முதல் ஜூன் வரை தனித்து நிற்கும் புதர்களிடையே வெளியே தெரியாதபடி மறைவாகப் கோப்பை வடிவிலான கூடமைத்து 2 முட்டைகள் இடும். [3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Trochalopteron meridionale". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2017.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2017. பார்க்கப்பட்ட நாள் 26 August 2017.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "Grey-breasted_laughingthrushவெண்மார்புச் சிப்பான்". பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2017.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:126
- ↑ "Ashambu laughingthrush". பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2017.