வெமுலவாடா சட்டமன்றத் தொகுதி

வெமுலவாடா சட்டமன்றத் தொகுதி (Vemulawada Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதி ஆகும். இது ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் ஒன்றாகும். இது கோவில் நகரமான வெமுலவாடா மற்றும் கரீம்நகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.

வெமுலவாடா
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ராஜன்னா சிர்சில்லா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்1,67,490
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ஆதி சிறீனிவாசு
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பாரத இராட்டிர சமிதியைச் சேர்ந்த சென்னமனேனி ரமேஷ் 2009ஆம் ஆண்டு இத்தொகுதி தொடங்கப்பட்டதிலிருந்து 2023 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்ட ஆதி சிறீனிவாசு வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மண்டலங்கள்

தொகு

இச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல் மாவட்டங்கள்
வெமுலவாடா ராஜன்னா சிர்சில்லா
கோனாரோபேட்டா
சந்துர்த்தி
கத்லாபூர் ஜக்தியால்
மெடிபள்ளே
ருத்ராங்கி ராஜன்னா சிர்சில்லா
வெமுலவாடா கிராமம்

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2009 சென்னமனேனி ரமேஷ் தெலுங்கு தேசம் கட்சி
2010★ பாரத் இராட்டிர சமிதி
2014
2018
2023 ஆதி சிறீனிவாசு[1] இந்திய தேசிய காங்கிரசு

★இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு

தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல், 2023

தொகு
2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல்: வெமுலவாடா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆதி சிறீனிவாசு 71,451 41.03
பா.இரா.ச. சால்மேதா லட்சுமி நரசிம்மா ராவ் 56,870 32.66
பா.ஜ.க மருத்துவர் சென்னாமானென்னி ராவ் 29,710 17.06
பசக மருத்துவர் கோலி மோகன் 4,649 2.67
நோட்டா நோட்டா 1,280 0.74
வாக்கு வித்தியாசம் 14,581 8.37
பதிவான வாக்குகள் 1,74,145
காங்கிரசு gain from பா.இரா.ச. மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு