வெள்ளீய(II) சல்பேட்டு

வெள்ளீய(II) சல்பேட்டு (Tin(II) sulfate) SnSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மமானது, வெண்ணிறத் திண்மமாக உள்ளது. இச்சேர்மம் காற்றிலிருந்து தேவையான அளவு ஈரப்பதத்தை உறிஞ்சி முழுவதுமாக நீரில் கரைந்து விடும் அளவுக்கு நீர் உறிஞ்சு தன்மை உடையது. இப்பண்பு நீர் உறிஞ்சும் திறன் எனப்படுகிறது. இச்சேர்மமானது, உலோக நிலையில் உள்ள வெள்ளீயத்தால் தாமிர(II) சல்பேட்டில் [3] உள்ள தாமிரத்தை இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

வெள்ளீய(II) சல்பேட்டு
Tin(II) sulfate crystallizes in an heavily distorted barium sulfrate structure.
Unit cell of tin(II) sulfate.
பெயர்கள்
இதர பெயர்கள்
இசுட்டானசு சல்பேட்டு
இனங்காட்டிகள்
3D model (JSmol)
ChemSpider
ECHA InfoCard 100.028.457
EC Number 231-302-2
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
பண்புகள்
SnSO4
வாய்ப்பாட்டு எடை 214.773 கி/மோல்
தோற்றம் வெண்மை-மஞ்சள் நிறப் படிகத்திண்மம்
நீர் உறிஞ்சும் திறன்
அடர்த்தி 5.15 கி/செமீ3
உருகுநிலை 378 °செல்சியசு (712 °பாரன்ஃகைட்; 651 செல்வின்)
கொதிநிலை SnO2 மற்றும் SO2 வாயுக்களாக சிதைவடைகிறது
33 கி/100 மிலி (25 °செல்சியசு)
Structure[1]
முதனிலை செஞ்சாய்சதுரம்
புறவெளித்தொகுதி
Pnma, No. 62
படிகக்கூடு மாறிலி
a = 8.80 Å, b = 5.32 Å, c = 7.12 Å[1]
தீவிளைவுகள்
என்.எப்.பி.ஏ 704
NFPA 704 four-colored diamondFlammability code 0: Will not burn. E.g., waterHealth code 1: Exposure would cause irritation but only minor residual injury. E.g., turpentineReactivity code 0: Normally stable, even under fire exposure conditions, and is not reactive with water. E.g., liquid nitrogenSpecial hazards (white): no code
0
1
0
தீப்பற்றுநிலை எளிதில் தீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
LD50 (median dose)
2207 மிகி/கிகி (வாய்வழி, எலி)
2152 மிகி/கிகி (வாய்வழி, சுண்டெலி)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
இதர எதிரயனிகள்
டின்(II) குளோரைடு, வெள்ளீய(II) புரோமைடு, வெள்ளீய அயோடைடு
இதர நேரயனிகள்
காரீய(II) சல்பேட்டு
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒verify (what is ☑Y☒N ?)
Infobox references
Sn (s) + CuSO4 (aq) → Cu (s) + SnSO4 (aq)

வெள்ளீய(II) சல்பேட்டானது வெள்ளீய(IV) அயனிகளின் கலப்பு இல்லாத வெள்ளீய(II) அயனிகளுக்கான வசதியான மூலமாகும்.

அமைப்பு

தொகு

திட நிலையில் சல்பேட்டு அயனிகள் O-Sn-O பிணைப்புகளால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. வெள்ளீய அணுவானது பிரமிடு வடிவில் மூன்று ஆக்சிசன் அணுக்களைக் கொண்டுள்ளது. இந்த மூன்று ஆக்சிசன் அணுக்கள் 226 பிகோமீட்டர் தொலைவிலும், O-Sn-O பிணைப்புக் கோணங்கள் 79°, 77.1° மற்றும் 77.1° கொண்டும் அமைந்துள்ளன. இதர Sn-O பிணைப்பு நீளங்கள் 295பிகோ மீட்டர் முதல் 334பிகோமீட்டர் வரை உள்ள தொலைவுகளைக் கொண்டுள்ளன.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 doi:10.1107/S0567740872003322
  2. "Tin (inorganic compounds, as Sn)". Immediately Dangerous to Life and Health Concentrations (IDLH). National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. p. 451. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
  4. Donaldson, J. D.; Puxley, D. C. (1972). "The crystal structure of tin(II) sulphate". Acta Crystallographica Section B 28 (3): 864–867. doi:10.1107/S0567740872003322. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீய(II)_சல்பேட்டு&oldid=3946955" இலிருந்து மீள்விக்கப்பட்டது