வெள்ளைக் கொடி நிகழ்வு

இலங்கையில் நடந்த படுகொலை

வெள்ளைக் கொடி நிகழ்வு (White Flag incident) என்பது இலங்கை, வன்னி, முல்லைத்தீவு, முல்லைவாய்க்காலில், 2009. மே. 18 அன்று சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர், பாலசிங்கம் நடேசன், புலித்தேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக் கொண்டு ஐக்கிய நாடுகள் அவை, நோர்வே, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் ஆகியவறைத் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராசபக்ச, உத்தரவாதம் வழங்கினார். மேலும் பசில் ராஜபக்சவால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரணடையுமாறு அறிவுறுத்தப்பட்டனர். சரணடைவதை மேற்பார்வையிட மூன்றாம் தரப்பு சாட்சியம் வேண்டும் என்று விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவல்லை. விடுதலைப் புலிகள் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு 58ஆவது படைப்பிரிவினரிடம் (இலங்கை) சரணடைந்தனர், ஆனால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் 58 ஆவது படைப் பிரிவின் தளபதி சவேந்திர சில்வாவால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அப்போதய சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பின்னர் கூறினார். பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் அவரது மெய்க்காப்பாளர்களுடன் சரண்டைந்த பின்னர் கொல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய உத்தேசித்துள்ளதாக ஐ.நா குழு ஒன்று கூறுகிறது. இலங்கை அரசாங்கம் எந்த தவறும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.[1][2][3][4][5][6][7][8][9][10][11][12]

பின்னணி தொகு

இலங்கை உள்நாட்டுப் போரில், வீழ்ச்சியுற்ற காலத்தில் வெடிமருந்துகளும், ஆள்பலமும் குறைவாக இருந்த விடுதலைப் புலிகள், முள்ளிவாய்க்காலில் 3 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான பரப்பளவிலான இடத்தில் இலங்கை இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டனர். இலங்கை இராணுவம் அவர்களை நெருங்கும் நிலையில் விடுதலைப் புலிகளுடன் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்டனர். 14 மே 2009 அன்று சாத்தியமான சரணடைதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் சார்பில் அரசியல் தலைவர் பாலசிங்கம் நடேசன், மற்றும் சமாதானச் செயலகம் சீவரட்ணம் புலித்தேவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.[13]

போரின் இறுதி நாளில் சரணடைவது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நடேசன் பிரித்தானியப் பத்திரிகையாளரிடம் மேரி கொல்வினிடம், "எந்தவொரு வாக்கெடுப்பின் முடிவுக்கும் கட்டுப்படுகிறோம்" என்றனர். மேலும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட புலிகள், ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம், ஐரோப்பிய இராஜதந்திரிகள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன் சந்திர நேரு, மற்றும் தி சண்டே டைம்ஸ் நிருபர், கொல்வின் என அவர்களால் பேச முடிந்த அமைப்பு, நபர்கள் மூலமாகவும் தங்கள் கோரிக்கையை அனுப்பினர். இது 300 போராளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும். சரணடைவது குறித்த பேச்சுவார்த்தை பற்றி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அறிந்திருந்தார்.[14] மே 17, 2009 அன்று, நடேசனிடமிருந்து மேரி கொல்வினுக்கு அழைப்பு வந்தது, அவர் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார், "அவர்கள் [விடுதலைப் புலிகள்] தங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவார்கள், அமெரிக்கா அல்லது பெரிய பிரிட்டனிடமிருந்து பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அவர்கள் விரும்பினர், மேலும் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியல் செயல்முறைக்கு இலங்கை அரசாங்கம் உடன்படும் என்ற உறுதிமொழியை அவர்கள் விரும்பினர்." கொல்வினின் கூற்றுப்படி, அவர் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் முக்கிய அதிகாரி விஜய் நம்பியாருடன் தொடர்பை ஏற்படுத்தினார் மேலும் சரணடைவதற்கான புலிகளின் நிபந்தனைகளை தெரிவித்தார், அவர் அதை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாக ஒப்புக்கொண்டார்.[2]

நிகழ்வு தொகு

மே 17 இரவுக்குள், விடுதலைப் புலிகளிடம் அரசியல் கோரிக்கைகள் எதுவும் வரவில்லை ஆனால் சரணடைவதில் தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க நம்பியாரைக் கேட்டுக் கொண்டனர். சரணடையும் போராளிகளின் பாதுகாப்பை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதி செய்துள்ளதாகவும், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் "வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிப்பதுதான்" என்றும் விஜய் நம்பியார் கொல்வினிடம் கூறினார். ஜனாதிபதியின் உறுதிமொழியே போதுமானது என்றும் அவரது வருகை தேவையற்றது என்றும் நம்பியார் கெல்வினிடம் கூறினார்.[2] 2009 மே 18 அன்று அதிகாலை 1:06 மணிக்கு, நடேசன் தமிழ் எம்.பி சந்திரகாந்த் சந்திரநேருவிடம் தனது இறுதி தொலை தொடர்பு அழைப்பை விடுத்தார், தாங்கள் இலங்கை இராணுவத்தை நோக்கி நடந்து வருவதாகவும், "எங்களால் முடிந்தவரை வெள்ளைக் கொடியை உயர்த்தி பிடிப்போம்" என்றும் கூறினார். சாட்சிகளின் கூற்றுப்படி, நடேசனின் சிங்கள மனைவி சரணடைந்த தரப்பினரில் இருந்தார்.[13]

சில மணி நேரங்களுக்குப் பிறகு, நடேசன், புலிதேவன் மற்றும் அவர்களுடன் வந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. அன்று மாலை அவர்களின் உடல்களைக் காண்பித்தனர்.[2][13] சரணடைய மறுத்தனர் என்பதில் இருந்து சரணடைய வந்தவர்களின் ஆதரவாளர்களால் அவர்கள் முதுகில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது வரை இலங்கை அரசு பல்வேறு முரண்பாடான விளக்கங்களை அளித்துள்ளது. சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொல்ல பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ச 58 ஆவது படைத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக அப்போது இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார்.[7] சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை இலங்கை இராணுவம் கொன்றதாக பல சாட்சிகள் கூற்றுகளை முன்வைத்துள்ளன.[14] தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனரும் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிருடன், காயமின்றி, இராணுவத்தினரின் காவலில் உள்ளதாக படங்கள் வெளியாகின. சில மணிநேரங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒளிப்படத்தில், சிறுவனின் மார்பில் ஐந்து முறை சுடப்பட்டது தெரிகிறது.[8] தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் இசைப்பிரியா உயிருடன், இலங்கை இராணுவத்தின் காவலில் இருக்கும் மற்ற ஒளிப்படங்கள் வெளியாகின. சனல் 4 செய்திகளால் பெறப்பட்ட காட்சிகளில் இசைப்பிரியாவின் உடல்கள் உட்பட பல சடலங்கள் பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளதைக் காட்டுகின்றன. இப்படி வெளிவரும் நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகள், ஒளிப்படங்கள், காணொளிகள், போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படையினரிடம் பிடிபட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களின் ஒரு பகுதியாகும்.[15]

"வெள்ளைக் கொடி நிகழ்வு" ஐ.நா அறிக்கையில் பெரிதும் இடம்பெற்றது, இது இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போர்க்குற்ற குற்றச்சாட்டுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், முழு விசாரணையைத் தொடங்க வழிவகுத்தது மட்டுமல்லாமல், போரின் முடிவில் ஐ.நா.வின் நடவடிக்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கையும் எழுந்தது.[13]

மேற்கோள்கள் தொகு

  1. "Witnesses support claim that Sri Lanka army shot prisoners". The Independent. London. 24 February 2013. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  2. 2.0 2.1 2.2 2.3 "Slain Tamil chiefs were promised safety". The Australian. 25 May 2009. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  3. "War crime in the massacre of LTTE officials". Tamilnet. 19 May 2009. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  4. "Sri Lanka accused of killing Tamil leader in 'massacre'". The Telegraph. 4 March 2013. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  5. "REPORT OF THE SECRETARY-GENERAL'S PANEL OF EXPERTS ON ACCOUNTABILITY IN SRI LANKA" (PDF). United Nations. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  6. "Uncovering Sri Lanka's 'White Flag Incident'". Colombo Telegraph. 4 March 2013. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  7. 7.0 7.1 ""Gota Ordered Them To Be Shot" – General Sarath Fonseka". Sunday Leader. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  8. 8.0 8.1 "Handed a snack, and then executed: the last hours of the 12-year-old son of a Tamil Tiger". The Independent. London. 18 February 2013. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  9. "Channel 4 releases documentary evidence on SL war crime". Tamilnet. 19 February 2013. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  10. "Sri Lanka 'war crimes' soldiers ordered to 'finish the job'". Channel 4. 27 July 2011. பார்க்கப்பட்ட நாள் 4 March 2013.
  11. "Marie Colvin and Sri Lanka war crimes". BBC. 26 February 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2013.
  12. Harrison, Frances (24 February 2013). "Witnesses support claim that Sri Lanka army shot prisoners". The Independent. London. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  13. 13.0 13.1 13.2 13.3 "BBCSinhala.com | Sandeshaya | Marie Colvin and Sri Lanka war crimes". BBC. பார்க்கப்பட்ட நாள் 2015-08-13.
  14. 14.0 14.1 "The final atrocity: Uncovering Sri Lanka's 'white flag incident'". Francis Harrison. Asian Correspondent. 4 March 2013. பார்க்கப்பட்ட நாள் 13 August 2015.
  15. "Sri Lanka 'war crimes': the evidence". பார்க்கப்பட்ட நாள் 2015-08-13.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைக்_கொடி_நிகழ்வு&oldid=3939086" இலிருந்து மீள்விக்கப்பட்டது