வெள்ளைத் தீவு, நியூசிலாந்து

வெள்ளைத் தீவு (White Island) அல்லது அதிகாரபூர்வமாக வக்காரி/வெள்ளைத் தீவு (Whakaari/White Island) என்பது நியூசிலாந்தின் வடக்குத் தீவின் கிழக்குக் கரையில் இருந்து 48 கிமீ தொலைவில் பிளெண்டி விரிகுடாவில் அமைந்துள்ள ஒரு செயல்நிலை படிகப்பாறை வகை சுழல்வடிவ எரிமலை ஆகும். இது நியூசிலாந்தின் செயல்முறை அதிகமுள்ள கூம்பு எரிமலைகளில் ஒன்றாகும். 150,000 ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான எரிமலை நடவடிக்கைகளால் இது உருவாக்கப்பட்டுள்ளது.[1] இதற்கு அண்மையில் உள்ள நகரங்கள் வக்காட்டேன், தவுரங்கா ஆகியனவாகும். 1769 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் குக்கினால் அவதானிக்கப்பட்டதில் இருந்து ஏறத்தாழ தொடர்ந்து எரிமலை வளிமத்தை இது வெளியிட்டு வருகிறது.

வெள்ளைத் தீவு
வக்காரி (மாவோரி)
வக்காரி/வெள்ளைத் தீவு, பிளென்டி குடா, நியூசிலாந்து
உயர்ந்த புள்ளி
உயரம்321 மீ (1,053 அடி)
புடைப்பு321 மீ (1,053 அடி)
ஆள்கூறு37°31′12″S 177°10′57″E / 37.52000°S 177.18250°E / -37.52000; 177.18250
புவியியல்
வெள்ளைத் தீவு is located in நியூசிலாந்து
வெள்ளைத் தீவு
வெள்ளைத் தீவு
வெள்ளைத் தீவின் அமைவிடம்
அமைவிடம்பிளெண்டி விரிகுடா, வடக்குத் தீவு, நியூசிலாந்து
நிலவியல்
மலையின் வகைசுழல்வடிவ எரிமலை
Volcanic arc/beltடோப்போ எரிமலை வலயம்
கடைசி வெடிப்பு9 திசம்பர் 2019
Main vent of Whakaari / White Island in 2000

இத்தீவு 2 கிமீ விட்டத்துடன் ஏறத்தாழ வட்ட வடிவமானது. கடல் மட்டத்தில் இருந்து 321 மீட்டர் உயரத்திற்கு வளர்ந்துள்ளது. இது 325 எக்டேர் (800 ஏக்கர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2] இத்தீவில் 1930கள் வரை கந்தக சுரங்கத் தொழில் நடந்து வந்துள்ளது. 1914 ஆம் ஆண்டில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் எரிமலை வாயின் ஒரு பகுதி வெடித்ததில் உயிரிழந்தனர். இப்போது தீவின் முக்கிய நடவடிக்கைகளாக வழிகாட்டிகளுடன் கூடிய சுற்றுப்பயணங்களும் அறிவியல் ஆய்வுகளுமே இடம்பெற்று வருகின்றன.

கடைசியாக 2019 திசம்பர் 9, 14:11 மணி அளவில் பெரும் எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது.[3] இவ்வெடிப்பினால் குறைந்தது அறுவர் உயிரிழந்தனர், எட்டு பேர் காணாமல் போயுள்ளனர். எரிகாயங்களுடன் 34 பேர் மீட்கப்பட்டனர். எரிமலை வெடித்தபோது அத்தீவில் சுற்றுலாப் பயணிகளும் பணியாளர்களுமாக மொத்தம் 47 பேர் இருந்துள்ளனர்.[4] [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "White Island". GeoNet. பார்க்கப்பட்ட நாள் 30 December 2012.
  2. Scheffel, Richard L.; Wernet, Susan J., eds. (1980). Natural Wonders of the World. United States of America: Reader's Digest Association, Inc. pp. 412. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89577-087-5.
  3. "GeoNet White Island Crater Floor". www.geonet.org.nz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
  4. "People 'unaccounted for' after volcano erupts in NZ" (in en-GB). 2019-12-09. https://www.bbc.com/news/world-asia-50708727. 
  5. Jacobson, Seth; Zhou, Naaman (2019-12-09). "White Island volcano erupts: what we know so far" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2019/dec/09/white-island-eruption-what-we-know-so-far. 

வெளி இணைப்புகள்

தொகு