வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த வெள்ளோடு எனும் ஊரில் 77.85 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயமாகும்.[1] இது ஈரோட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் பெருந்துறை யிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள வெள்ளோட்டில் அமைந்துள்ளது.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் | |
---|---|
nature reserve | |
ஆள்கூறுகள்: 11°15′9″N 77°39′8″E / 11.25250°N 77.65222°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
நிறுவப்பட்டது | 1996 |
பரப்பளவு | |
• மொத்தம் | 0.8 km2 (0.3 sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அருகிலுள்ள நகரம் | ஈரோடு |
ஆட்சிக் குழு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா), இந்திய அரசு |
பறவைகள்
தொகுஇங்குள்ள பெரிய ஏரிக்கு ஆண்டின் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், இந்திய நாட்டிலுள்ள பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவைகள் வருகின்றன. இவை தவிர, வெளிநாடுகளிலிருந்தும் 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகள் பெருமளவில் இங்கு வருகின்றன. இங்கு வரும் பறவைகள் நான்கு மாத காலம் வரை தங்கியிருப்பதுடன் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து அவற்றுடன் திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.