வேலம்பட்டி, அரூர்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
வேலம்பட்டி (Velampatti), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
வேலம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 252 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 331 குடும்பங்களும் 1334 மக்களும் வசிக்கின்றனர். இதில் 666 ஆண்களும் 668 பெண்களும் அடங்குவர். கிராமத்தின் மொத்த கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 54.9 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
மேற்கோள்
தொகு- ↑ "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
- ↑ "Velampatti Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.