எம். வேலுகுமார்
எம். வேலுகுமார் (பிறப்பு: 16 சனவரி 1973) இலங்கை, மலையகத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்..[1]
எம். வேலு குமார் M. Velu Kumar | |
---|---|
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2015 | |
கண்டி மாவட்ட மத்திய மாகாணசபை உறுப்பினர் | |
பதவியில் 2013 – ஆகத்து 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 சனவரி 1973 |
அரசியல் கட்சி | ஜனநாயக மக்கள் முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய மக்கள் சக்தி |
வாழிடம் | கண்டி |
முன்னாள் கல்லூரி | கொழும்புப் பல்கலைக்கழகம் |
வேலை | ஆசிரியர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுவேலுகுமார் 1973 சனவரி 16 இல் பிறந்தார்.[1] தலத்துஓயா தமிழ் மகா வித்தியாலயம், கண்டி அசோகா வித்தியாலயம், கண்டி சில்வெஸ்டர் கலூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர்[2] பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்று,[2] ஆசிரியராகப் பணியாற்றினார்.
அரசியலில்
தொகுவேலுகுமார் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஆவார்.[3][4] இவர் 2015 இல் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.[5]
வேலுகுமார் 2013 மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு மத்திய மாகாணசபை உறுப்பினரானார்.[6][7] பின்னர் இவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[8][9][10] மீண்டும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகக் கண்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்..[11][12]
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2013 மாகாணசபை[7] | கண்டி மாவட்டம் | ஜனநாயக மக்கள் முன்னணி | ஐக்கிய தேசிய முன்னணி | 18,159 | தெரிவு | ||
2015 நாடாளுமன்றம்[9] | கண்டி மாவட்டம் | ஜனநாயக மக்கள் முன்னணி | ஐக்கிய தேசிய முன்னணி | 62,556 | தெரிவு | ||
2020 நாடாளுமன்றம்[12] | கண்டி மாவட்டம் | ஜனநாயக மக்கள் முன்னணி | ஐக்கிய மக்கள் சக்தி | 57,445 | தெரிவு |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Directory of Members: Velu Kumar". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 13 September 2020.
- ↑ 2.0 2.1 "New members of Parliament". Sunday Times (Colombo, Sri Lanka). 30 August 2015. http://www.sundaytimes.lk/150830/news/after-the-polls-the-calm-remains-except-for-a-few-incidents-say-monitors-162447.html. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ "Tamil Progressive Alliance Ties Up With UNP In Lankan Polls". Asian Mirror. 11 July 2015 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304114842/http://www.asianmirror.lk/news/item/9981-tamil-progressive-alliance-ties-up-with-unp-in-lankan-polls. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ "I will visit Valigamam North high security zone if army shoot me. I’m proud to die on this land: Wigneswaran". Lankasri News. 6 December 2013 இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304061353/http://eng.lankasri.com/view.php?24cAYnPd224oKBnbde2coOd7ec02CWA40ed04AMeC2aae7lAc324bnZmA430cdP5OKc2.
- ↑ "Tamil Progressive Alliance elects working committee". Eye Sri Lanka. 5 June 2015. http://www.eyesrilanka.com/2015/06/05/tamil-progressive-alliance-elects-working-committee/. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - Provincial Councils Elections Act, No. 2 OF 1988 - Central Province Provincial Council" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1829/33. Colombo, Sri Lanka. 25 September 2013. p. 2A. பார்க்கப்பட்ட நாள் 1 September 2020.
- ↑ 7.0 7.1 "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Central Province". Daily Mirror (Colombo, Sri Lanka). 25 September 2013. http://www.dailymirror.lk/article/provincial-council-elections-2013-results-and-preferential-votes-central-province-36076.html. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - The Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 1928/3. Colombo, Sri Lanka. 19 August 2015. p. 3A. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015.
- ↑ 9.0 9.1 "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981 3" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 3A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
- ↑ 12.0 12.1 "General Election 2020: Preferential votes of Kandy District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027095336/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-kandy-district. பார்த்த நாள்: 13 September 2020.