வேல்சு பல்கலைக்கழகம்
உவேல்சு பல்கலைக்கழகம் (University of Wales; (உவெல்சு: Prifysgol Cymru) என்பது ஐக்கிய இராச்சியம் உவேல்சு மாநிலத்தில் கார்டிஃப் நகரில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சிப் பல்கலைக்கழகம் ஆகும். 1893 ஆம் ஆண்டில் அபெரிசுவித், பங்கோர், கார்டிஃப் ஆகிய மூன்று கல்லூரிகளின் கூட்டமைப்பில் அரச சாசனம் மூலம் இது ஆரம்பிக்கப்பட்டது. உவேல்சில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் இதுவாகும்.
வேல்சு: Prifysgol Cymru | |||||||||||||
குறிக்கோளுரை | வேல்சு: Goreu Awen Gwirionedd | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | உண்மையே சிறந்த உத்வேகம் | ||||||||||||
வகை | கூட்டாட்சி, உறுப்பினரல்லாத பல்கலைக்கழகம்[1] | ||||||||||||
உருவாக்கம் | 1893 | ||||||||||||
வேந்தர் | சார்லசு, வேல்சு இளவரசர் | ||||||||||||
துணை வேந்தர் | மெத்வின் இயூசு | ||||||||||||
அமைவிடம் | , | ||||||||||||
நிறங்கள் | |||||||||||||
சேர்ப்பு | பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு | ||||||||||||
இணையதளம் | www |
2007 இல், உவேல்சு பல்கலைக்கழகம் நடுவண் அமைப்பில் இருந்து கூட்டாட்சி அமைப்புக்கு மாறியது. இதனால் இதனோடு இணைந்த கல்லூரிகள் சுயாதீனப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டன. 2000களின் பிற்பகுதியில் வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள், ஏமாற்றுதல் மற்றும் மாணவர் விசாக்கள்[2] போன்ற பல சர்ச்சைகளைத் தொடர்ந்து, இப்பல்கலைக்கழகத்தை அப்போது இருந்த அமைப்பின்படியே ஒழிக்க முடிவு செய்யப்பட்டது.
2017 ஆகத்து முதல், இப்பல்கலைக்கழகம் உவேல்சு டிரினிட்டி புனித தாவீது பல்கலைக்கழகத்துடன் செயல்பாட்டு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டது. உயர்கல்வி புள்ளியியல் நிறுவனம் 2018/19 இல் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள உவேல்சு பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை சுழியமாகப் பதிவு செய்துள்ளது,[3] ஆனால் 3,345 மாணவர்கள் ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியே உள்ள நாடுகடந்த கல்விப் படிப்புகளில் பதிவுசெய்துள்ளனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Registrar's Office". Bangor.ac.uk. Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2012-04-29.
- ↑ "University of Wales degree and visa scam exposed by BBC". BBC. 5 October 2011. https://www.bbc.co.uk/news/uk-wales-15171830.
- ↑ "Where do HE students study?". HESA. பார்க்கப்பட்ட நாள் 15 August 2020.
- ↑ "Where do HE students come from?: Transnational education". HESA. பார்க்கப்பட்ட நாள் 15 August 2020.