வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், தார்வாடு

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், தார்வாடு என்பது கர்நாடக அரசால் நிறுவப்பட்ட ஒரு மாநில வேளாண் பல்கலைக்கழகமாகும். இது விவசாயம், காட்டியல், உணவு அறிவியல், வேளாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் மனை அறிவியல் ஆகிய துறைகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், தார்வாடு
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்அக்டோபர் 1, 1986
துணை வேந்தர்மகாதேவ் பி. செட்டி
அமைவிடம்
தார்வாடு
,
இந்தியா

15°29′21″N 74°59′03″E / 15.489085°N 74.984264°E / 15.489085; 74.984264
சேர்ப்புஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்
இணையதளம்www.uasd.edu

அமைவிடமும் இணைவு கல்லூரிகளும்

தொகு

தார்வாடு, வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் தார்வாட்-பெல்காம் சாலையில் அமைந்துள்ளது. வயல்களில் மரங்கள் வளர்ப்பதற்கும் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குப் பொருத்தமான வளாகத்தில் இப்பல்கலைக்கழக்ம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள வேளாண் கல்லூரிகளை இணைவுக் கல்லூரிகளாகக் கொண்டு செயல்படுகிறது.

  • விவசாயக் கல்லூரி, தார்வாட்
  • விவசாயக் கல்லூரி, விஜயபூர் (பிஜப்பூர்)
  • ஹனுமன்மட்டி விவசாயக் கல்லூரி (ஹாவேரி மாவட்டம்)
  • தார்வாடு கிராமப்புற மனை அறிவியல் கல்லூரி
  • சிர்சி வனவியல் கல்லூரி
  • உணவு தொழில்நுட்பக் கல்லூரி, தார்வாடு

அதிகார வரம்பு

தொகு

தார்வாடு, வடகன்னட மாவட்டம், கதக்-பெட்டகேரி, ஆவேரி, பெளகாவி, பாகல்கோட் மற்றும் பிஜாப்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள வேளாண்மைத் தொடர்பான கல்லூரிகள் இப்பல்கலைக்கழக அதிகார வரம்பின் கீழ் வருகின்றன.

தரவரிசைகள்

தொகு

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பு 2019-ல் பல்கலைக்கழகங்களில் 83வது இடத்தினைப் இப்பல்கலைக்கழகம், பெற்றது.

கௌரவ டாக்டர் பட்டங்கள்

தொகு

இப்பல்கலைக்கழகம் 2014[1] ஆண்டு வரை பதினாறு கெளரவ முன்பைவர் பட்டங்களை வழங்கியுள்ளது.

வ. எண். பட்டம் பெற்றவர் பட்டமளிப்பு விழா தேதி
01 கே. ஆர். ஆலூர் 4வது பட்டமளிப்பு 16.04.1990
02 மன்மோகன் அத்தவர் 4வது பட்டமளிப்பு 16.04.1990
03 மனோபாய் தேசாய் 4வது பட்டமளிப்பு 16.04.1990
04 பிரபுல்ல சந்திரா 9வது பட்டமளிப்பு விழா 28.03.1998
05 உதய சங்கர் அவஸ்தி 20வது பட்டமளிப்பு விழா 25.04.2006
06 மல்லண்ண நகரல் 20வது பட்டமளிப்பு விழா 25.04.2006
07 அப்துல் ரவூப் அ. ஷேக் 20வது பட்டமளிப்பு விழா 25.04.2006
08 ஜி. எஸ்.விஜய் ராகவன் 24வது பட்டமளிப்பு விழா 27.12.2010
09 எஸ். எல்.மேத்தா 24வது பட்டமளிப்பு விழா 27.12.2010
10 எஸ். அய்யப்பன் 25வது பட்டமளிப்பு விழா 03.03.2012
11 வில்லியம் ரோனி காஃப்மோன் 25வது பட்டமளிப்பு விழா 03.03.2012
12 ஸ்ரீ அசோக் மலகௌடா பாட்டீல் 25வது பட்டமளிப்பு விழா 03.03.2012
13 ரிச்சர்ட் ஜோன்ஸ் 26வது பட்டமளிப்பு விழா 22.03.2013
14 ஆர்.எஸ்.பரோடா 26வது பட்டமளிப்பு விழா 22.03.2013
15 மார்க் ஏ. ஹஸ்ஸி 27வது பட்டமளிப்பு விழா 22.05.2014
16 ராஜேந்திர சிங் 27வது பட்டமளிப்பு விழா 22.05.2014

மேலும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு