ஷீலா குஜ்ரால்
சீலா குஜ்ரால், (1924-2011) இந்தியாவைச் சேர்ந்த கவிஞரும் இந்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் எழுதிய எழுத்தாளரும் சமூக சேவகருமாவார். இவர் இந்தியாவின் 12 வது பிரதமரான இந்தர் குமார் குஜராலின் மனைவியுமாவார்.[1][2]
சீலா குஜ்ரால் | |
---|---|
இந்தியப் பிரதமரின் மனைவி | |
பதவியில் 21 ஏப்பிரல் 1997 – 19 மார்ச்சு 1998 | |
பிரதமர் | ஐ. கே. குஜரால் |
முன்னையவர் | சென்னம்மா தேவகவுடா |
பின்னவர் | குர்சரன் கவுர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லாகூர்<nowiki>, பிரித்தானிய இந்தியா | 24 திசம்பர் 1924
இறப்பு | 11 சூலை 2011 தில்லி, இந்தியா | (அகவை 86)
துணைவர் | ஐ. கே. குஜரால் (தி. 1945) |
பிள்ளைகள் | 2, நரேஷ் குஜ்ரால், விசால் குஜ்ரால் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசீலா குஜ்ரால், லாகூரில் 24 ஜனவரி 1924 ஆம் ஆண்டில் பிறந்தவர். 26 மே 1945 அன்று அரசியல்வாதியான அவதார் நரேன் குஜ்ராலின் மகனான இந்தர் குமார் குஜ்ராலை திருமணம் செய்துள்ளார்.[3] இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள், ஒருவர் நரேஷ் குஜ்ரால் (பிறப்பு 19 மே 1948), அகாலிதளம் கட்சியின் சார்பாக ராஜ்யசபா எம்பியாக இருந்தவர், மற்றவர் விஷால் குஜ்ரால்.[4][5]
அவரது மைத்துனரும் ஐ.கே குஜ்ராலின் சகோதரருமான சதீஷ் குஜ்ரால் ஓர் இந்திய ஓவியர் மற்றும் கட்டிடக் கலைஞராவார்.[6]
இறப்பு
தொகு11 ஜூலை 2011 அன்று, அவரது 87 ஆம் வயதில் ஷீலா புது டெல்லியில் உள்ள தனது வீட்டில் திடீரென மரணமடைந்தார்..[7]
விருதுகள்
தொகுஅவர் சர்வதேச கவிஞர்கள் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் தங்க கவிஞர்கள் விருது ஆகியவற்றை அவரின் கவிதைகளுக்காகப் பெற்றுள்ளார்.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shri Inder Kumar Gujral | Prime Minister of India". Prime Minister of India. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
- ↑ International Who's Who in Poetry 2004. Taylor & Francis. 2003.
- ↑ International Who's Who in Poetry 2005. Taylor & Francis. 2004.
- ↑ "Shri Inder Kumar Gujral | Prime Minister of India".
- ↑ International Who's Who in Poetry 2004.
- ↑ "முன்னாள் பிரதமர் ஐகே குஜ்ரால் காலமானார்". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
- ↑ "Sheila Gujral passes away". 2011-07-11. https://www.thehindu.com/news/national/sheila-gujral-passes-away/article2219383.ece. பார்த்த நாள்: 2022-09-27.
- ↑ "Sheila Gujral Dead". India TV (in ஆங்கிலம்). 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
- ↑ "Sheila Gujral no more". The Indian Express (in ஆங்கிலம்). 2011-07-11. பார்க்கப்பட்ட நாள் 2022-09-27.
வெளி இணைப்புகள்
தொகு- கவிதா கோஷில் ஷீலா குஜ்ரால் கவிதை