ஷைலி சோப்ரா
ஷெய்லி சோப்ரா (Shaili Chopra ) இவர் ஓர் இந்திய வணிகப் பத்திரிகையாளரும், எழுத்தாளரும் மற்றும் தொழில்முனைவோரும் ஆவார். பெண்களை மையமாகக் கொண்ட ஒரு இந்திய டிஜிட்டல் செய்தி வலைத்தளமான ஷீதபீப்புள்டிவி என்பதின் நிறுவனர் ஆவார். இது முன்மாதிரிகளின் கதைகளுடன் பெண்களை மேம்படுத்துவதற்கும், பெண்கள் பற்றிய மாறிவரும் உரையாடலையும், அவர்களுக்கு என்ன முக்கியம் என்பதையும் ஊக்குவிக்கும் தளமாகும். ஒரு வணிகப் பத்திரிகையாளராக, இவர் என்.டி.டி.வி-பிராபிட் மற்றும் ஈடி நௌ என்ற தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தவர். மேலும் வணிக பத்திரிகையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் 2012 ராம்நாத் கோயங்கா விருது போன்ற பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இவர் ஒரு தொழில்முனைவோராக மாறி நான்கு புத்தகங்களை எழுதினார். இவரது முயற்சிகள் இந்தியாவின் பெண்கள் தொலைக்காட்சியான ஷீதபீப்புள்டிவி மற்றும் கோல்ஃப்இண்டியன்.காம். போன்றவை. இவரது புத்தகங்களில் பென்குயின் புத்தக நிறுவனம் வெளியிட்ட ஃபெமினிஸ்ட் ராணி, ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் வென் ஐ வாஸ் 25, பிக் கனெக்ட்- சோஷியல் மீடியா மற்றும் இன்டியன் பாலிடிக்ஸ், மற்றும் டைம்ஸ் புக்ஸ் வெளியிட்ட பர்தீஸ் இன் பிசினஸ் ஆகியவை அடங்கும்.
ஷைலி சோப்ரா | |
---|---|
பிறப்பு | 21 சூலை 1981 ஜலந்தர், பஞ்சாப் (இந்தியா) |
கல்வி | ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சியில் முதுகலை |
பணி | தொழில்முனைவோர், ஆசிரியர் (முன்பு பத்திரிகையாளர்) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஷெய்லி சோப்ரா 1981 ஜூலை 21 அன்று பஞ்சாபின் ஜலந்தரில் அனில் சோப்ரா மற்றும் சுமன் ஆகியோருக்குப் பிறந்தார். அனில் சோப்ரா இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற போர் விமானி ஆவார். 1998 ஆம் ஆண்டில், சோப்ரா புதுடெல்லியின் விமானப்படை கோல்டன் ஜூபிலி நிறுவனத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சோப்ரா சென்னை, ஆசிய இதழிலியல் கல்லூரியில், 2002இல் ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் பிபிசி உடன் பத்திரிகை பள்ளியில் ஒளிபரப்பு சார்ந்த பயிற்சியினைப் பெற்றார். இவர் சிஎன்பிசி, என்டிடிவி மற்றும் எடிநௌ போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் .[1]
தொழில் வாழ்க்கை
தொகுஇவர் என்.டி.டி.வி 24 x 7 என்ற தொலைகாட்சியுடன் சந்தைகள் மற்றும் பெருநிறுவன விவகார ஆசிரியராகவும், என்.டி.டி.வி பிராபிட்டின் மூத்த செய்தி ஆசிரியராகவும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். பின்னர் மூன்று ஆண்டுட்கள் ஈடி நௌ என்ற தொலைகாட்சியில் பணிபுரிந்தார். ஜி -20, டாவோஸ், உலகப் பொருளாதர மன்றம் தி பிரெட்டன் வூட்ஸ் மாநாடு 2011, இந்தியா பொருளாதார உச்சி மாநாடு மற்றும் உலக சில்லறை காங்கிரசு போன்ற சர்வதேச நிகழ்வுகளையும் இவர் உள்ளடக்கியுள்ளார். இம்பாக்ட் இதழால் ஊடகங்கள், சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் ஆகியவற்றில் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க 50 பெண்களில் ஒருவராக இவர் பெயர் பெற்றார்.
சோப்ரா மற்றும் இவரது கணவர் சிவ்நாத் துக்ரால் ஆகிய இருவரும் 26/11 பயங்கரவாத தாக்குதலின் போது மும்பையில் உள்ள தாஜ்மஹால் விடுதிக்கு வெளியே இருந்து நேரலையில் ஒளிபரப்பினர்.[2] இவர் ஒரு தொழில்முனைவோராக மாறுவதற்கு முன்பு ஈடி நௌ நிறுவனத்தின் முன்னணி தொகுப்பாளராக இருந்தார். கோல்ஃப்இண்டியன்.காம். நிகழ்ச்சியில் "டீ டைம் வித் ஷைலி" என்ற நிகழ்ச்சியையும் இவர் கொண்டிருந்தார்.
இவர் 2015 ஆம் ஆண்டில் 'ஷீ த பீப்புள் என்ற டிஜிட்டல் வலைத்தளத்தைத் தொடங்கினார். இது பெண்கள் பத்திரிகையை மையமாகக் கொண்டுள்ளது.[3] ஆனந்த் மஹிந்திரா இதில் முதலீடு செய்துள்ளார். " ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா " மற்றும் " மேக் இன் இந்தியா " போன்ற அரசாங்க முயற்சிகளுக்கு இது ஒரு உத்தியோகபூர்வ பங்காளியாக இருந்தது.[4]
விருதுகள்
தொகு2007 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் சிறந்த ஆங்கில நிருபருக்கான செய்தி தொலைக்காட்சி விருதை வென்றார் [5] பின்னர் 2008 ஆம் ஆண்டில், இவரது கோல்ஃப்இண்டியன்.காம். நிகழ்ச்சியான பிசினஸ் ஆன் கோர்ஸ், சிறந்த நிகழ்ச்சி விருதை வென்றது.[6] மார்ச் 2010 இல், சோப்ரா சிறந்த வணிகர் விருதை வென்றார். மேலும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் பெண் சாதனையாளர் விருதைப் பெற்றார்.[7] இந்தியன் எக்சுபிரசு ராம்நாத் கோயங்கா விருதுகள் 2012 இல் சோப்ராவுக்கு வணிக இதழியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.[8]
குறிப்புகள்
தொகு- ↑ "Sawf.org". Sawf.org. Archived from the original on 26 July 2013. பார்க்கப்பட்ட நாள் 5 September 2013.
- ↑ "TV's hits and misses of terror attacks". Hindustan Times. 5 December 2008. பார்க்கப்பட்ட நாள் 5 September 2013.
- ↑ "SheThePeople is India's First Platform For Stories of Women". www.shethepeople.tv (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-07-16.
- ↑ PTI (2016-05-23). "Anand Mahindra invests in SheThePeople.TV". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-19.
- ↑ "CNN-IBN, NDTV India win 9 out of 47 at the Indian News Television Awards, CNN-IBN wins best English news channel, Rajdeep Sardesai Newsmaker of the year, Prannoy Roy lifetime achievement, Barkha Dutt best TV news anchor". Dancewithshadows.com. Archived from the original on 26 July 2013. பார்க்கப்பட்ட நாள் 5 September 2013.
- ↑ [1] பரணிடப்பட்டது 11 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Nitesh Estates launches 'Nitesh Long Island' at Bangalore". Indiainfoline.com. 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 5 September 2013.
- ↑ Shaili Chopra bags Ramnath Goenka Award | The Economic Times Video | ET Now, பார்க்கப்பட்ட நாள் 2016-11-18
வெளி இணைப்புகள்
தொகுபேட்டிகள்
தொகு- Women for action: http://www.womenforaction.org/2017/03/interview-with-prolific-journalist-in.html பரணிடப்பட்டது 2019-04-23 at the வந்தவழி இயந்திரம்
- Indian CEO: https://indianceo.in/interviews/shaili-chopra-founder-shethepeople-talks-indianceo/
- Personal Life and goals: https://thehauterfly.com/women-on-top/women-in-digital-shaili-chopra-she-the-people/ பரணிடப்பட்டது 2019-07-18 at the வந்தவழி இயந்திரம்
- Feminist Rani: https://penguin.co.in/news-and-press-releases/womens-day-penguin-excited-announce-acquisition-feminist-rani-meghna-pant-shaili-chopra/