ஷ்வாஸ்
ஷ்வாஸ் (Shwaas, மராத்தி : श्वास ) என்பது 2004 இல் வெளியான ஒரு மராத்தி திரைப்படம் ஆகும். இது 2004 ஆஸ்கார் விருதுக்காக இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பபட்டது. அங்கு சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதில் 6 வது இடத்தைப் பிடித்தது. இதன் கதைக்களம் புனேவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. [2] இப்படம் குறைந்த செலவில் ரூபாய் 30 லட்சம் (3 மில்லியன்) செலவில் தயாரிக்கபட்டது. [3] ஷ்வான் 2004 ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு மராத்திய திரைப்படம் பெற்ற தேசிய விருது இதுவாகும். [2] அறிமுக இயக்குனர் சந்தீப் சாவந்த் இயக்கிய, இப்படம் 30 நாட்களில் சிந்துதுர்க், கொங்கண், புனே, மும்பையில் உள்ள கே.இ.எம் மருத்துவமனை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளை முடிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது. ஷ்வாஸ் "மராத்தி திரையுலகின் குறிப்பிடத்தக்க திருப்பம்" என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் வெற்றிக்குப் பிறகு, இந்தி, வங்காளி, தமிழ் மொழிகளில் வெளியிடப்பட்டது. [4]
ஷ்வாஸ் | |
---|---|
இயக்கம் | சந்தீப் சாவந்த் |
தயாரிப்பு | அருண் நலவாடே சந்தீப் சாவந்த் தேவிதாஸ் பாபட் ராஜன் சேவுல்கர் மோகன் பராப் நரேஷ்சந்திர ஜெயின் வி. ஆர். நாயக் தீபக் சௌத்ரி |
கதை | திருமதி மாதவி ஓ.கார்பூர் |
இசை | பாஸ்கர் சந்தாவார்கர் |
நடிப்பு | அருண் நலவாடே அஷ்வின் சித்தலே சந்தீப் குல்கர்னி அம்ருதா சுபாஷ் |
ஒளிப்பதிவு | சஞ்சய் மனனே |
படத்தொகுப்பு | நீரஜ் வோராலியா |
விநியோகம் | கத்தி ஆர்ட்ஸ் |
வெளியீடு | 2004 |
ஓட்டம் | 107 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மராத்தி |
ஆக்கச்செலவு | ₹0.60 கோடி (US$75,000) [1] |
மொத்த வருவாய் | மதிப்பீடு. ₹2.75 கோடி (US$3,40,000) [1] |
நடிப்பு
தொகு- அஷ்வின் சித்தலே (பரசுராம் விசாரே, விழித்திரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்)
- அருண் நலவாடே (பரசுராமின் தாத்தா அவனை மும்பைக்கு அழைத்துச் செல்கிறார்)
- சந்தீப் குல்கர்னி (பரசுராமின் மருத்துவர் மிலிந்த் சானே)
- அம்ருதா சுபாஷ் ( அசவரி என்ற மருத்துவ சமூக சேவகர்)
- கணேஷ் மஞ்ச்ரேக்கர் ( பரசுராம் மற்றும் தாத்தாவுடன் மும்பைக்கு வரும் பரசுராமின் மாமா திவாகர்)
- அஷ்வினி கிரி (கிராமத்தில் தங்குகியுள்ள பரசுராமின் தாய்).
- விபாவாரி தேஷ்பாண்டே வரவேற்பாளராக
கதை
தொகுமிக அரிதான கண் புற்றுநோயால் பாதிக்கபட்ட தன் பேரனை காப்பாற்றப் போராடுகிறார் அவன் தாத்தா. ஆனால் அவன் உயுரோடு வாழவேண்டுமானால் அவன் கண்கள் இரண்டையும் நீக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அவரிடம் கூறுகின்றனர். இந்த உண்மையை எப்படி தன் பேரனிடம் சொல்லி புரியவைப்பது என்று தாத்தா தவிக்கிறார். இறுதியில் இது அவருக்கு எவ்வாறு சாத்தியமானது என்பதே கதையாகும்.
விருதுகள்
தொகுஇந்த படம் தேசிய மற்றும் மாநில அளவில் பல விருதுகளை பெற்றது. ஷ்வாஸ் மகாராஷ்டிரா அரசு திரைப்பட விருதையும், பின்னர் இந்தியாவின் மிக உயர்ந்ததான தேசிய திரைப்பட விருதையும் வென்றது. 1954 க்குப் பிறகு முதல் முறையாக மராத்தி திரைப்படத்துக்கு விருதைக் கொண்டுவந்தது. அஸ்வின் சித்தாலே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை வென்றான்.
- 2003: சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
- 2003: சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய திரைப்பட விருது - அஷ்வின் சிடலே
ஆஸ்கார் விருதுக்கான போட்டியில்
தொகுஷ்வாஸ் 77 வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்), 2004 இல் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்காக இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டது. ஆஸ்கார் விழாவில் தங்கள் படத்தைக் காட்சிப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் படக்குழு குழு நிதி சிக்கல்களை எதிர்கொண்டது. அனைத்து தரப்பு மக்களும் நிதிச் சிக்கலைத் தீர்க்க முன் வந்தனர். ஜோகேஸ்வரியில் உள்ள ஒரு பள்ளி தனது குழந்தைகளை விளக்குகள் தயாரித்து விற்க ஏற்பாடு செய்து ரூ. 30,000 அளிதது. மற்றொரு குழுவில் உள்ள மாணவர்கள் பணத்தை திரட்ட கார்களை சுத்தம் செய்தனர். நாசிக்கில் உள்ள ஒரு மாணவர் குழு ஒவ்வொருவரிடமும் ரூ 10 என வசூலித்தனர். மேலும் அவர்களின் ஆசிரியர் ரூ. 1001 அளிதார். ஒரு மராத்தி நாடகக் குழு மராத்தி நாடகமான யாதா கடாச்சித் மூலமாக திரட்டிய சுமார் ரூ. 65,000 நிமியை அளிதது. [5]
படக்கழுவினர் நிதி உதவிக்கு பன்னாட்டு நிறுவனங்களையும், பெரு நிறுவனங்களையும் அணுகினர். [6] கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஏலம் நடத்தினார். [7] பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடையை அளித்தார். [8] மும்பையின் சித்திவிநாயகர் கோவில் ஆஸ்கார் விழாவில் ஷ்வாஸ் படம் கலந்து கொள்ள தேவைப்படும் தொகையை மக்கள் நன்கொடை வழங்க ஏதுவாக ஒரு உண்டியலை நிறுவியது. [9] கோவா அரசு ரூபாய் 21 இலட்சம் (2.1 மில்லியன்) வழங்கியது. [10] இந்திய ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ரூ .50,000 மற்றும் மகாராஷ்டிரா அரசு ரூ .15 இலட்சம் (1.5 மில்லியன்) நிதியை அளித்தது . [7] சிவசேனா போன்ற அரசியல் கட்சிகள் கூட விளம்பரங்களுக்கு உதவின. [11]
ஷ்வாஸ் படக் குழுவின் இயக்குனர் சந்தீப் சாவந்த், வணிக மேலாளர் அனில் பஸ்தவாடே, ஆடை வடிவமைப்பாளரும், சாவந்தின் மனைவியாமான நீரஜா பட்வர்தன் ஆகியோர் ஆஸ்கார் விருதுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள மராத்திய மக்களை ஈர்க்க முயன்றனர். மன்ஹாட்டனில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர்கள் நியூ ஜெர்சியில் உள்ள மகாராட்டிரா விசுவ பரிசத்தின் 12,000 உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றினர். ஆஸ்கார் விருதுக்கு முந்தைய காட்சிப்படுத்தலின் போது அமெரிக்காவில் ஷ்வாஸ் 14 முறை திரையிடப்பட்டது. படக் குழுவினர் அட்லாண்டிக் நகரத்துக்கு பயணம் மேற்கொண்டு மகாராட்டிரா மண்டல்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றனர். [12] இருப்பினும், இந்த படம் ஆஸ்கார் விருதைப் பெறத் தவறி 6 வது இடத்தைப் பிடித்தது. [13]
குறிப்புகள்
தொகு
- ↑ 1.0 1.1 "How India's regional cinema is breaking boundaries - Forbes India".
- ↑ 2.0 2.1 Pawar, Leela (29 September 2004). "Shwaas: A must watch!". rediff.com/movies. rediff.com. பார்க்கப்பட்ட நாள் 5 June 2008.
- ↑ Pendse, Sanjay (26 October 2004). "Politicians leave Shwaas breathless". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/articleshow/899205.cms.
- ↑ Neha (29 April 2008). "Marathi movie "Shwaas" in Hindi". bollywood-buzz.com. Archived from the original on 15 September 2008. பார்க்கப்பட்ட நாள் 5 June 2008.
- ↑ PINGLAY, PRACHI (15–28 January 2005). "Beyond applause". Frontline. hinduonnet.com. Archived from the original on June 30, 2006. பார்க்கப்பட்ட நாள் 12 June 2008.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ .
- ↑ 7.0 7.1 "Sachin promises to raise funds for 'Shwaas' through auction". cricketzone.com. 13 November 2004 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041115211039/http://www.cricketzone.com/news/off_the_field/20041113-0.html.
- ↑ "Bachchan donates Rs 1,00,000". The Press Trust of India Ltd.. 25 November 2004. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-5214426_ITM.
- ↑ "Divine help for 'Shwaas' on Oscar road.". 17 October 2004. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-14088515_ITM.
- ↑ "'Shwaas' producer gets a cheque". 21 December 2004 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103161910/http://www1.timesofindia.indiatimes.com/articleshow/946301.cms.
- ↑ "Sena chief hits out at cricketer's gesture". Newsline. 12 November 2004. http://cities.expressindia.com/fullstory.php?newsid=106491.
- ↑ Suhasini, Lalitha (21 November 2004). "Maharashtrians across America to go Jai Shwaas". expressindia.com இம் மூலத்தில் இருந்து 9 செப்டம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090909112658/http://www.expressindia.com/news/fullstory.php?newsid=38667#compstory.
- ↑ "Shwaas fails at Oscars.". The Press Trust of India Ltd.. 25 January 2005. http://www.accessmylibrary.com/coms2/summary_0286-1080673_ITM.