நுண்ணறி அட்டை

(ஸ்மார்ட் கார்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையானது தரவுப் பரிமாற்றத்திற்கு உலோகத் தொடர்புகளைப் பயன்படுத்துகின்ற நுண்ணறி அட்டைகள் பற்றியது. ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்தும் நுண்ணறி அட்டைகளுக்கு தொடர்புகளற்ற நுண்ணறி அட்டையைக் காண்க

நுண்ணறி அட்டை, சில்லு அட்டை அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று அட்டை (ICC ) என்பது தரவைச் செயலாக்க முடிந்த உட்பொதிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சுற்றுக்களைக் கொண்ட பாக்கெட் அளவிலான அட்டை ஆகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று அட்டை பயன்பாடுகள் மூலமாக செயலாக்குவதற்கான உள்ளீட்டைப் பெறமுடியும் — வெளியீட்டையும் வழங்க முடியும் என்பதைக் குறிக்கிறது. இரண்டு பரந்த வகையான ஒருங்கிணைக்கப்பட்ட சுற்று அட்டைகள் உள்ளன. நினைவக அட்டைகள் மாறுபாடற்ற நினைவுச் சேமிப்புக் கூறுகளையும் மற்றும் சாத்தியமான சில குறிப்பிட்ட பாதுகாப்பு தர்க்கத்தையும் கொண்டிருக்கின்றன. நுண்செயலி அட்டைகள் மாறும் நிலையான நினைவையும் நுண்செயலி கூறுகளையும் கொண்டிருக்கின்றன. அட்டையானது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருக்கின்றது. பொதுவாக பி.வி.சி, ஆனால் சில நேரங்களில் ஏ.பி.எஸ் (ABS) கொண்டு செய்யப்படுகின்றன. அட்டையானது மோசடி செய்தலைத் தவிர்ப்பதற்காக ஹாலோகிராம் உட்பொதிக்கப்பட்டிருக்கலாம். நுண்ணறி அட்டை பயன்படுத்தலானது மிகப்பெரிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் ஒற்றை உள்நுழைவுக்காக வலிமையான பாதுகாப்பு உறுதிப்பாடாகவும் உள்ளது.

பல வேறுபட்ட பேடு தளவமைப்புகள் ஒரு நுண்ணறி அட்டையைத் தொடர்பு கொள்வதில் பயன்படுத்த முடியும்

மேலோட்டப் பார்வை

தொகு

ஒரு "நுண்ணறி அட்டை" பின்வருமாறும் விவரிக்கப்படுகிறது:

  • பரிமாணங்கள் இயல்பாக கடன் அட்டை அளவில் உள்ளன. ISO/IEC 7810 இன் ID-1 தரநிலை அவற்றை 85.60 × 53.98 மி.மீ என வரையறுக்கின்றது. மற்றொரு பிரபலமான அளவான ID-000, 25 × 15 மி.மீ (பொதுவாக சிம் கார்டுகளில் பயன்படுத்தப்படுகின்றது) உள்ளது. இரண்டும் 0.76 மி.மீ தடிமனாக உள்ளன.
  • குறுக்கீடு எதிர்ப்புள்ள பண்புகளை (உ.ம். பாதுகாப்பு கிரிப்டோசெயலி, பாதுகாப்பு கோப்பமைப்பு, மனிதரைப்-படிக்கத்தக்க அம்சங்கள்) கொண்ட பாதுகாப்பு அமைப்பைக் கொண்டிருக்கின்றது. மேலும் பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் திறனுடையதாகவும் உள்ளது (உ.ம். நினைவகத்தில் உள்ள தகவல்களின் ரகசியத்தன்மை).
  • பாதுகாப்பு அமைப்பு மூலமாக அட்டையைக் கொண்டு தகவல் மற்றும் உள்ளமைவு அமைப்புகளைப் பரிமாற்றுகின்ற பொது நிர்வாகத்தின் மூலமாக நிர்வகிக்கப்படுகின்ற சொத்து. உள்ளமைவு அமைப்பானது பயன்பாட்டுத் தரவுக்கான புதுப்பிக்கின்ற, அட்டை ஹாட்லிஸ்ட் செய்தலைக் கொண்டிருக்கின்றது.
  • அட்டைத் தரவானது, பயணச்சீட்டு படிப்பான்கள், ஏ.டி.எம் கள் மற்றும் பலசாதனங்களைப் போன்ற அட்டையைப் படிக்கும் சாதனங்கள் வழியாக பொது நிர்வாகத்திற்குப் பரிமாற்றப்படுகின்றது.

நன்மைகள்

தொகு

நுண்ணறி அட்டைகளை அடையாளம் காணுதல், நம்பகத் தன்மையை உறுதிசெய்தல் மற்றும் தரவு சேமிப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்த முடியும்.[1]

நுண்ணறி அட்டைகள் நெகிழ்தன்மையுள்ள, பாதுகாப்பான, தரமான வழியில் குறைவான மனிதத் தலையீட்டுடன் சிறந்த வணிகப் பரிவர்த்தனைகளை வழங்குகின்றன.

கணினிகள், மடிக்கணினிகள், குறியாக்கம் கொண்ட தரவு, SAP போன்ற நிறுவன வளத் திட்டமிடல் தளங்கள், இன்னும் பலவற்றிற்கு ஒற்றை உள்நுழைவுக்காக அல்லது நிறுவன ஒற்றை உள்நுழைவுக்காக வலிமையான அங்கீகரிப்பை நுண்ணறி அட்டைகள் வழங்க முடியும்.

வரலாறு

தொகு

தானியங்கு சில்லு அட்டையானது ஜெர்மன் ராக்கெட் விஞ்ஞானி ஹெல்மட் க்ரோட்ரப் மற்றும் அவரது சக பணியாளர் ஜர்ஜென் டெத்லோஃப் ஆகியோரால் 1968 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது; இறுதியாக 1982 ஆம் ஆண்டில் காப்புரிமை வழங்கப்பட்டது. அட்டைகளின் முதல் பெரும் பயன்பாடு பிரான்ஸ் நாட்டின் கட்டணத் தொலைபேசிகளில் பணம் செலுத்த 1983 ஆம் ஆண்டில் (Télécarte) தொடங்கப்பட்டது.

பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் ரோலேண்ட் மொரேனோ, உண்மையில் 1974 ஆம் ஆண்டில் நினைவக அட்டை பற்றிய தனது முதல் கருதுகோளின் காப்புரிமையைப் பெற்றிருந்தார். 1977 ஆம் ஆண்டில், ஹனிவெல் புல்லைச் சேர்ந்த மைக்கேல் யூகன் முதல் நுண்செயலி நுண்ணறி அட்டையைக் கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டில், புல் நிறுவனம் SPOM (சுய நிரலாக்கக்கூடிய ஒற்றை-சில்லு நுண்கணினி) இன் காப்புரிமையைப் பெற்றது. அது தானியங்கு-நிரல் சில்லுக்குத் தேவையான கட்டமைப்பை வரையறுக்கின்றது. மூன்று ஆண்டுகள் கழித்து, மோட்டோரோலா நிறுவனத்தால் இந்தக் காப்புரிமை அடிப்படையிலான முதன் முதல் "CP8" தயாரிக்கப்பட்டது. அந்த நேரத்தில், புல் நிறுவனம் நுண்ணறி அட்டைகள் தொடர்பான 1200 காப்புரிமைகளைக் கொண்டிருந்தது. 2001 ஆம் ஆண்டில், புல் நிறுவனம் ஸ்க்லம்பெர்ஜர் நிறுவனத்திற்கு அதன் அனைத்துக் காப்புரிமைகளுடன் அதன் CP8 பிரிவை விற்றது. அதன் தொடர்ச்சியாக, ஸ்க்லம்பெர்ஜர் நிறுவனம் அதன் நுண்ணறி அட்டை பிரிவையும் CP8 ஐயும் இணைத்து அக்ஸல்டோவை உருவாக்கியது. 2006 ஆம் ஆண்டில், அந்த நேரத்தில் உலகின் 2 ஆவது மற்றும் 1 ஆவது நுண்ணறி அட்டை உற்பத்தியாளர்களாக இருந்த அக்ஸல்டோ மற்றும் ஜெம்ப்ளஸ் இணைக்கப்பட்டு ஜெமல்ட்டோ உருவானது.

நுண்சில்லுகளின் தொகுப்புடன் இருந்த இரண்டாவது பயன்பாடு அனைத்து பிரெஞ்சு பற்று அட்டைகளில் (கார்டே ப்ளூ) 1992 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. கார்டே ப்ளூ கொண்டு பிரான்சில் பணம் செலுத்தும் போது, பரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளும் முன்னர் ஒருவர் வியாபாரியின் POS முனையத்தில் அட்டையைச் செருகி, பின்னர் PIN ஐ தட்டச்சு செய்கின்றார். மிகவும் வரம்புக்குட்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே (சிறிய ஆட்டோ பாதை சுங்கவரிகளைச் செலுத்துதல் போன்றவை) PIN இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

நுண்ணறி-அட்டை-அடிப்படையிலான மின்னணு பர்ஸ் அமைப்புகள் (இதில் மதிப்பானது அட்டையின் சில்லில் சேமிக்கப்படுகின்றது, வெளிப்புறம் பதிவுசெய்யப்பட்ட கணக்கில் சேமிக்கப்படுவதில்லை. எனவே அந்த இயந்திரங்கள் எந்த நெட்வொர்க் இணைப்பின் தேவையுமின்றி அட்டையை ஏற்றுக்கொள்கின்றன) 1990களின் மத்தியிலிருந்து ஐரோப்பா முழுவதும் செயல்பாட்டில் உள்ளன. ஜெர்மனி (ஜெல்ட்கார்டே), ஆஸ்திரியா (க்விக்), பெல்ஜியம் (புரோட்டான்), பிரான்ஸ் (மணியோ), நெதர்லாந்து (சிப்னிப் மற்றும் சிப்பர்), சுவிட்சர்லாந்து ("கேஷ்"), நார்வே ("மாண்டக்ஸ்"), ஸ்வீடன் ("கேஷ்"), பின்லாந்து ("அவந்த்"), ஐக்கிய இராச்சியம் ("மாண்டக்ஸ்"), டென்மார்க் ("டன்மண்ட்") மற்றும் போர்ச்சுக்கல் ("போர்டா-மோடாஸ் மல்டிபேங்கோ") ஆகிய நாடுகளில் மிகவும் குறிப்பிடும்படியாக உள்ளன.

ஐரோப்பாவில் GSM மொபைல் தொலைபேசியில் பயன்படுத்தப்படும் நுண்ணறி அட்டை அடிப்படையிலான சிம் அறிமுகத்துடன் 1990களில் நுண்ணறி அட்டை பயன்பாட்டில் முக்கிய வளர்ச்சியிருந்தது. ஐரோப்பாவில் மொபைல் தொலைபேசிகள் எங்கும் நிறைந்திருந்ததால், நுண்ணறி அட்டைகள் மிகவும் பொதுவானதாக மாறின.

சர்வதேச பணம் செலுத்துதலின் வர்த்தகச் சின்னங்களான மாஸ்டர்கார்டு, விசா மற்றும் யூரோபே ஆகியவை 1993 ஆம் ஆண்டில், பணம் செலுத்தும் அட்டைகளை பற்று அல்லது கடன் அட்டைகளாகப் பயன்படுத்துதலில் நுண்ணறி அட்டைகளின் பயன்பாட்டிற்கான விவரக்குறிப்புகளை உருவாக்குவதில் இணைந்து பணிபுரிய ஒப்புக்கொண்டன. EMV அமைப்பின் முதல் பதிப்பு 1994 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் விவரக்குறிப்புகளின் நிலையான வெளியீடு கிடைத்தது. EMVco, இது அந்த அமைப்புக்கான நீண்டகால நிர்வகித்தலுக்கான பொறுப்பைக் கொண்டுள்ள நிறுவனம். இது 2000 ஆம் ஆண்டிலும் மற்றும் மிகவும் சமீபத்தில் 2004 ஆம் ஆண்டிலும் விவரக்குறிப்பை மேம்படுத்தியது. பல்வேறுபட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு 1998 பதிப்புடனான இணக்கத்தை விவரக்குறிப்புகள் திரும்பக் கொண்டுவருதலை உறுதிப்படுத்துவதே EMVco வின் நோக்கமாகும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற விதிவிலக்கான நாடுகளில் EMV ஐ ஈடுபடுத்துதலில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருந்தது - உபகரண விற்பனை மற்றும் பற்று அல்லது கடன் அட்டைகள் வழங்கல் ஆகியவற்றின் இணக்கப் புள்ளியானது EMV விவரக்குறிப்புகளைக் கடைப்பிடிக்கின்றது. பொதுவாக, ஒரு நாட்டின் தேசிய பணம் செலுத்தல் கூட்டமைப்பானது, மாஸ்டர்கார்டு இண்டர்நேஷனல், விசா இண்டர்நேஷனல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் JCB ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, ஈட்டுபட்டுள்ள பல்வேறு உரிமைதாரர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட விளைவை உறுதிப்படுத்துகின்ற விவரமான செயலாக்கத் திட்டங்களை உருவாக்குகின்றது.

EMV இன் நிதி ஆதாரங்கள், இதை பணம் செலுத்துதல் அமைப்புகளில் தோன்றிய உருவக மாதிரி எனக் கூறுகின்றன. சில நாடுகளில் உள்ள வங்கிகள் பல்வேறு கணக்கு வகைகளை ஆதரிக்கும் திறனுடைய ஒற்றை அட்டையை தற்போது வழங்குவதில்லை. அந்த இடங்களில் இந்தக் கூற்றுக்கு சிறப்பு இருக்கக் கூடும். எனவே இந்த நாடுகளில் உள்ள சில வங்கிகள் ஒரே அட்டை பற்று அட்டையாகவும் கடன் அட்டையாகவும் செயல்பட வழங்குவதைக் கருதுகின்றன. இதற்கான வணிக காரணங்கள் இன்னமும் சற்று மழுப்பலாக உள்ளன. EMV இல் பயன்பாட்டுத் தேர்வு என்றழைக்கப்படும் கருதுகோளானது விற்பனைப் புள்ளியில் வாங்கியதற்கான பணம் செலுத்துவதற்கு நுகர்வோர் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை வரையறுக்கின்றது.

வங்கிகளுக்கு நுண்ணறி அட்டைகளை அறிமுகப்படுத்துவதில் உள்ள அளவிடக்கூடிய நன்மை, குறிப்பாக மோசடி, இழப்பு மற்றும் திருடப்படுதல்களில் ஏமாற்று மோசடிகளைக் குறிப்பிடத்தகுந்த அளவில் குறைக்க முன்கூட்டியே தெரிவிக்கும் திறன் மட்டுமே. ஒரு நாடு சந்தித்த ஏமாற்று மோசடியின் தற்போதைய அளவு, நாட்டின் சட்டம் மோசடியின் விளைவை வாடிக்கையாளருக்கு ஒதுக்கியதா இல்லை வங்கிக்கா என்பதை அறிவதுடன் இணைந்துள்ளது. இவை நிதி நிறுவனங்களுக்கு வணிக வழக்கு உள்ளதா எனக் கண்டறிகின்றன. சில விமர்சகர்கள், சேமிப்புகள் EMV செயலாக்க மதிப்புகளை விட மிகவும் குறைவாக உள்ளன. ஆகவே பல நம்பிக்கை அமெரிக்க பணம் செலுத்துதல் துறையானது புதிய தொடர்பற்ற தொழில்நுட்பத்தை செயலாக்குவதன் பொருட்டு தற்போதைய EMV சுழற்சி முறையின் வெளியே காத்திருக்கின்றன என்று கூறுகின்றனர்.

தொடர்பற்ற இடைமுகங்களுடனான நுண்ணறி அட்டைகளின் பணம் செலுத்துதல் மற்றும் மாஸ் ட்ரான்சிஸ்ட் போன்ற டிக்கெட் வழங்கும் பயன்பாடுகளுக்காக, அதன் பிரபலம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விசா மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை அமெரிக்காவில் (2004-2006) செயலாக்க எளிதான பதிப்பு தற்போது பரவலாக அமைக்கப்பட ஒப்புக்கொண்டுள்ளன. உலகம் முழுவதும், தொடர்பற்ற கட்டணச் சேகரிப்பு அமைப்புகள் பொது பரிமாற்றத்தில் திறம்படச் செயல்பட செயலாக்கப்பட இருக்கின்றன. வெளிவந்துள்ள பல்வேறு தரநிலைகள் குறுகிய நோக்கமுடையதாகவும் இணக்கமற்றதாகவும் உள்ளன. எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பிலிப்ஸ் நிறுவனத்திடமிருந்து வந்த MIFARE தரநிலை அட்டை கருதப்படக்கூடிய சந்தைப் பங்கு மதிப்பாக உள்ளது.

நுண்ணறி அட்டைகள் மண்டலம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் தனிநபர் அடையாளம் காணுதல் மற்றும் உரிமை வழங்கல் ஆகியவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. குடிமகன் அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் நோயாளி அடையாள அட்டைத் திட்டங்கள் பெரும்பாலும் வழக்கிலுள்ளவை; உதாரணமாக மலேசியாவில், MyKad என்ற கட்டாய தேசிய ID திட்டமானது 8 வேறுபட்ட பயன்பாடுகளை உள்ளடக்கியது. மேலும் அது 18 மில்லியன் பயனாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்பற்ற நுண்ணறி அட்டைகள் சர்வதேசப் பயணத்திற்கான பாதுகாப்பை மேம்படுத்த ICAO உயிர்புள்ளியியல் கடவுச்சீட்டுகளில் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றன.

தொடர்பு உள்ள நுண்ணறி அட்டை

தொகு

தொடர்பு உள்ள நுண்ணறி அட்டைகள் உள்ளடக்கப்பட்ட பல தங்க-பூச்சு இடப்பட்ட தொடர்பு பேடுகளை உடைய தொடர்புப் பகுதியைக் கொண்டிருக்கின்றன. அது சுமார் 1 சதுர செ.மீ இருக்கின்றது. படிப்பான் உள்ளே செருகப்பட்ட போது, சில்லிருந்து தகவலைப் படித்து திரும்பவும் அதில் தகவலை எழுதக்கூடிய மின் இணைப்பிகளுடன் சில்லானது தொடர்பை உண்டாக்குகின்றது.[2]

தரநிலை வரிசைகள் ISO/IEC 7816 மற்றும் ISO/IEC 7810 வரையறுப்பது:

  • இயல்பு வடிவம்
  • மின் இணைப்பிகளின் நிலைகள் மற்றும் வடிவங்கள்
  • மின் பண்புகள்
  • தகவல்தொடர்புகள் நெறிமுறைகள், அட்டைக்கு அனுப்பட்ட கட்டளைகள் மற்றும் அட்டையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட மறுமொழிகள் ஆகியவற்றின் வடிவத்தை உள்ளடக்குகின்றன.
  • அட்டையின் உறுதித்தன்மை
  • செயலம்சம்

அட்டைகள் மின்கலங்களைக் கொண்டிருப்பதில்லை; மின்சக்தியானது அட்டைப் படிப்பானால் வழங்கப்படுகின்றது.

மின்சார சமிக்ஞைகள் விளக்கம்

தொகு
 
ஸ்மார்ட் கார்டின் பின்அவுட்

VCC : மின்வழங்கல் உள்ளீடு

RST : தானாகவோ (இடைமுகச் சாதனத்திலிருந்து வழங்கப்பட்ட சமிக்ஞையை மீட்டமைக்கின்றது) அல்லது அக மீட்டமைப்பு கட்டுப்பாட்டுச் சுற்றுடன் இணைந்தோ (அட்டையால் விருப்பத்தேர்வாகப் பயன்படுகின்றது) பயன்படுத்தப்படுகிறது. அக மீட்டமைப்பு செயலாக்கப்பட்டால், மின்வழங்கல் உள்ளீட்டில் மின்னழுத்த வழங்கல் கட்டாயமாகும்.

CLK : கால அளவு அல்லது நேரச் சமிக்ஞை (அட்டையால் விருப்பத்தேர்வாகப் பயன்படுகின்றது).

GND : கிரவுண்ட் (குறிப்பு மின்னழுத்தம்).

VPP : நிரலாக்க மின்னழுத்த உள்ளீடு (தடுக்கப்பட்டது / அட்டையால் விருப்பத்தேர்வாகப் பயன்படுகின்றது).

I/O : அட்டையின் உள்பகுதியின் ஒருங்கிணைந்த சுற்றில் வரிசைத் தரவுக்கான உள்ளீடு அல்லது வெளியீடு.

NOTE - இரண்டு எஞ்சிய தொடர்புகளின் பயன்பாடு நேர்த்தியான பயன்பாட்டுத் தரநிலைகளில் விவரிக்கப்படும்.

படிப்பான்

தொகு

தொடர்பு நுண்ணறி அட்டை படிப்பான்கள் நுண்ணறி அட்டைக்கும் ஹோஸ்ட்க்கும் இடையேயான தகவல்தொடர்புகள் ஊடகமாகப் பயன்படுகின்றன. உ.ம். கணினி, விற்பனை முனையம் அல்லது மொபைல் தொலைபேசி.

நிதி ஆதார அட்டைகளில் உள்ள சில்லுகள் மொபைல் தொலைபேசியில் பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர் அடையாளத் தொகுதிக்கூறு (SIM) அட்டைகளைப் போன்றே உள்ளன. அவை வேறுபட்ட வடிவில் நிரலாக்கப்பட்டும், வேறுபட்ட வடிவிலான பி.வி.சி பகுதிகளில் உட்பொதிக்கப்பட்டும் உள்ளன. சில்லு உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் தேவைப்படுகின்ற GSM/3G தரநிலைகளைக் கட்டமைக்கின்றனர். உதாரணமாக, EMV அதன் முனையத்திலிருந்து சில்லு அட்டையை 50 mA வரை இழுத்துக்கொள்ள அனுமதித்தாலும், அட்டைகள் பொதுவாக தொலைபேசித் துறையில் அனுமதிக்கப்பட்ட 6mA வரையறையைப் பயன்படுத்துகின்றன. இது நிதி ஆதார அட்டை முனையங்களை சிறியதாகவும் மலிவாகவும் மாற்ற அனுமதிக்கின்றது. மேலும் இந்த மாற்றங்கள் அட்டை படிப்பானுடன் கூடிய ஒவ்வொரு வீட்டுக் கணினிக்கும் தேவையானவற்றை வழங்கவும் மற்றும் இணையத்தில் வாங்குதலை மேலும் பாதுக்காப்பானதாக உருவாக்கும் மென்பொருளையும் நடைமுறைப்படுத்துகின்றன.[மேற்கோள் தேவை]

தொடர்பற்ற நுண்ணறி அட்டை

தொகு

இரண்டாவது வகை தொடர்பற்ற நுண்ணறி அட்டை ஆகும். இதில் சில்லானது அட்டை படிப்பானுடன் (106 முதல் 848 கி.பிட்/வி என்ற தரவு வீதங்களில்) RFID என்ற அறிமுகத் தொழில்நுட்பத்தின் வழியாக தொடர்பு கொள்ளுகின்றது. இந்த அட்டைகளுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்ய ஆண்டென்னாவிற்கு நெருக்கமான இடம் மட்டுமே தேவைப்படுகிறது. பெரும் பரிமாற்ற அமைப்புகள் போன்றவற்றில் உள்ளது போல, பரிமாற்றங்கள் வேகமாகச் செயல்படுத்தப்பட வேண்டிய அல்லது கைகளின் பயன்பாடின்றி செயல்படுத்தப்பட வேண்டிய நேரத்தில் அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையில் நுண்ணறி அட்டைகளை வாலெட்டில் இருந்து எடுக்காமலேயே கூட பயன்படுத்த முடியும்.

ISO/IEC 14443 என்பது தொடர்பற்ற நுண்ணறி அட்டை தகவல்தொடர்பிற்கான தரநிலையாகும். இது 10 செ.மீ தொலைவில் தகவல் தொடர்பை அனுமதிக்கின்ற இரண்டு வகையான தொடர்பற்ற அட்டைகளை ("A" மற்றும் "B") வரையறுக்கின்றது. C, D, E, F மற்றும் G ஆகிய வகைகள் ISO/IEC 14443 க்கான முன்மொழிவுகளாக இருந்தன. அவை தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பால் நிராகரிக்கப்பட்டன.[மேற்கோள் தேவை] ISO 15693 என்பது தொடர்பற்ற அட்டைகளுக்கான ஒரு மாற்று தரநிலையாகும். இது 50 செ.மீ வரையிலான தொலைவுகளில் தகவல்தொடர்புகளை அனுமதிக்கின்றது.

ஹாங்காங்கின் ஆக்டோபஸ் கார்டு, தென்கொரியாவின் T-மணி (பேருந்து, சுரங்கப்பாதை, டாக்ஸி), மெல்போர்னின் மைக்கி, லண்டனின் ஓய்ஸ்டர் கார்டு, தாமஸ் டிட்டனில் சிறிய பணம் செலுத்துதல்களுக்குப் பயன்படும் லண்டனின் எஸ்கொயிட்கார்டு, போட்டன் மற்றும் டண்டீ, ஜப்பான் ரெயில்வேயின் சூயிகா கார்டு மற்றும் ISO/IEC 14443 தரநிலையின் முன் தேதியிட்ட மும்பையில் பேருந்து அனுமதிச்சீட்டுக்களுக்காகப் பயன்படுத்தப்படும் மும்பை பேருந்து போக்குவரத்து சேவையின் பெஸ்ட் (BEST) நுண்ணறி அட்டை ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படும் தொடர்பற்ற நுண்ணறி அட்டைகளுக்கான உதாரணங்கள் ஆகும். அவை அனைத்தும் பொதுப் போக்குவரத்து பணம் செலுத்தல் மற்றும் பிற மின்னணுப் பணப்பை பயன்பாடுகள் ஆகியவற்றிற்காக முக்கியமாக வடிவமைக்கப்பட்டன.

RFID (ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணுதல்) என்பது இதனுடன் தொடர்புடைய மற்றொரு தொடர்பற்ற தொழில்நுட்பம் ஆகும். குறிப்பிட்ட நிகழ்வுகளில், மின்னணு சுங்கவரி வசூலிப்புக்கானவை போன்ற தொடர்பற்ற நுண்ணறி அட்டைகளை ஒத்த பயன்பாடுகளுக்காகவும் இதைப் பயன்படுத்த முடியும். RFID சாதனங்கள் பொதுவாக தொடர்பற்ற நுண்ணறி அட்டைகளைப் போன்று எழுதக்கூடிய நினைவகம் அல்லது நுண்கட்டுப்படுத்தி (மைக்ரோகண்ட்ரோலர்) செயலாக்கத் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.

சில பகிரப்பட்ட சேமிப்பு மற்றும் செயலாக்கத்துடன் தொடர்பற்ற மற்றும் தொடர்பு இடைமுகங்களை ஒற்றை அட்டையில் செயலாக்கும் இரட்டை இடைமுக அட்டைகள் உள்ளன. ஆண்டண்டே என்று அழைக்கப்படும் போர்ட்டோவின் பல-பயன்பாடு போக்குவரத்து அட்டை ஓர் உதாரணமாகும். இது தொடர்பு மற்றும் தொடர்பற்ற தொழில் நுட்பத்தில் (ISO/IEC 14443 வகை B) சில்லைப் பயன்படுத்துகின்றது.

தொடர்புடைய நுண்ணறி அட்டைகளைப் போன்று, தொடர்பற்ற அட்டைகள் மின்கலத்தைக் கொண்டிருக்கவில்லை. பதிலாக, அவை சில உடனடியான ரேடியோ அதிர்வெண் குறுக்கும் நெடுக்குமான சமிக்ஞையைப் பெறுவதற்கும், அதை சீராக்குவதற்கும் உள்கட்டமைக்கப்பட்ட மின்தூண்டியைப் பயன்படுத்துகின்றன. மேலும் அதை அட்டையின் மின்னணுவிற்கு மின்சக்தியைப் பெறவும் பயன்படுத்துகின்றன.

தகவல்தொடர்பு நெறிமுறைகள்

தொகு
தகவல்தொடர்பு நெறிமுறைகள்
பெயர் விளக்கம்
T=0 எழுத்துக்குறி-நிலை பரிமாற்ற நெறிமுறை, ISO/IEC 7816-3 இல் வரையறுக்கப்பட்டுள்ளது
T=1 பகுதி-நிலை பரிமாற்ற நெறிமுறை ISO/IEC 7816-3 இல் வரையறுக்கப்பட்டுள்ளது
ISO/IEC 14443 தொடர்பற்ற இடைமுக வழியான APDU பரிமாற்றம், ISO/IEC 14443-4 இல் வரையறுக்கப்பட்டுள்ளது

கடன் அட்டை தொடர்பற்ற தொழில்நுட்பம்

தொகு

இவை நன்கு அறியப்பட்ட பணம் செலுத்துதல் அட்டைகள் (முதல்தர பிளாஸ்டிக் அட்டை):

  • விசா: தொடர்புகளற்ற விசா, க்விக் VSDC - "qVSDC", விசா வேவ், MSD, பேவேவ்
  • மாஸ்டர்கார்டு: பேபாஸ் மேக்ஸ்ட்ரிப், பேபாஸ் எம்சிப்
  • அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்: எக்ஸ்பிரஸ்பே
  • சேஸ்: ப்ளிங் (கடன் மற்றும் பற்று அட்டைகள்)

இவை அமெரிக்காவில் 2005 ஆம் ஆண்டில் பிரபலமாகத் தொடங்கின (ஆசியா மற்றும் ஐரோப்பா - 2006). தொடர்பற்ற (PIN அற்ற) பரிவர்த்தனைகள் பணம் செலுத்துதல் வரம்பு~$5–50 ஐக் கொண்டிருந்தன. அது ஒரு ISO/IEC 14443 பேபாஸ் செயலாக்கம். அனைத்து பேபாஸ் செயலாக்கங்களையும் EMV இலும் EMV அல்லாதவையிலும் பிரிக்கலாம்.

EMV-அற்ற அட்டைகள் காந்தப் பட்டை அட்டைகளைப் போன்று செயல்படுகின்றன. அமெரிக்காவில் இது ஒரு பொதுவான அட்டைத் தொழில்நுட்பம் (பேபாஸ் மேக்ஸ்ட்ரைப் மற்றும் VISA MSD) ஆகும். இந்த அட்டைகள் மீதியுள்ள தொகையைக் கட்டுப்படுத்துவதில்லை. அனைத்து பணம் செலுத்துதலும் PIN இன்றியும், வழக்கமாக ஆஃப்-லைன் பயன்முறையிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது போன்ற பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு நிலையானது முதல்தர காந்தப்பட்டை அட்டை பரிவர்த்தனையுடன் ஒப்பிடும்படி குறிப்பிடும்படி இல்லை.

EMV அட்டைகள் இரண்டு இடைமுகங்களைக் கொண்டுள்ளன (தொடர்பு மற்றும் தொடற்பற்ற), மேலும் அவை தொடர்பு இடைமுகம் வழியாக இயல்பு EMV அட்டையாகச் செயல்படுகின்றன. தொடர்பற்ற இடைமுகம் வழியாக அவை பெரும்பாலும் EMV போன்றே செயல்படுகின்றன (அட்டை கட்டளை தொடர் தொடர்பற்ற அம்சத்தில் குறைந்த மின்சக்தி மற்றும் குறைந்த பரிவர்த்தனை நேரமாக ஏற்கப்பட்டது).

தகவல்மறைப்பியல் நுண்ணறி அட்டைகள்

தொகு

தகவல்மறைப்பியல் நுண்ணறி அட்டைகள் பெரும்பாலும் ஒற்றை உள்நுழைவிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் மேம்படுத்தப்பட்ட நுண்ணறி அட்டைகள் தனிச்சிறப்பு வாய்ந்த தகவல்மறைப்பு செய்யப்பட்ட வன்பொருளைக் கொண்டு வழங்கப்பட்டுள்ளன. அது உங்களுக்கு போர்டில் RSA மற்றும் DSA வழிமுறைகளைப் பயன்படுத்தச் செய்கின்றது. இன்றைய தகவல்மறைப்பு நுண்ணறி அட்டைகள் குறிச்சொல்லின் ஒன்றுக்கு மேற்பட்ட நகலைக் கொண்டிருப்பதால் உண்டாகும் ஆபத்தை தவிர்க்க போர்டில் குறிச்சொல் இணைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன (எனவே வடிவமைப்பின் மூலமாக நுண்ணறி அட்டையிலிருந்து தனிப்பட்ட குறிச்சொற்களை கவருதல் இயலாத ஒன்றாகும்).

இது போன்ற நுண்ணறி அட்டைகள் முக்கியமாக டிஜிட்டல் கையெழுத்து மற்றும் பாதுகாப்பு அடையாளங்காணுதல் ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன (பயன்பாடுகள் பிரிவைக் காண்க).[3]

ஒரு கணினியில் தகவல்மறைப்பு நுண்ணறி அட்டை செயல்பாடுகளை அணுகுவதற்கு விற்பனையாளரால் வழங்கப்பட்ட PKCS#11 நூலகத்தைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவான வழி ஆகும். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) தளங்களின் CSP API உம் ஏற்கப்பட்டுள்ளது.

ட்ரிபிள் DES மற்றும் RSA ஆகியவை நுண்ணறி அட்டைகளில் ("கிரிப்டோ வழிமுறை" என்று அழைக்கப்படும் GSM தவிர) பெரும்பாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் ஆகும். குறிச்சொல் அமைப்பு தனிப்பயனாக்கப்பட்ட நிலையில் அட்டையில் வழக்கமாக ஏற்றப்படுகிறது (DES) அல்லது உருவாக்கப்படுகிறது (RSA).

பயன்பாடுகள்

தொகு

கணினிப் பாதுகாப்பு

தொகு

பாதுகாப்பான வலை உலாவலில் பயன்படுத்துவதற்கான சான்றிதழ்களைச் சேமிக்க Mozilla Firefox வலை உலாவியானது நுண்ணறி அட்டைகளைப் பயன்படுத்தலாம்[4].

FreeOTFE, TrueCrypt மற்றும் மைக்ரோசாப்ட் Windows 7 BitLocker போன்ற சில வட்டு குறியாக்க முறைமைகள் நுண்ணறி அட்டைகளை குறியாக்கப்பட்ட குறிச்சொற்களை பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தலாம். மேலும் பாதுகாக்கப்பட்ட வட்டின் சிக்கலான பகுதிக்கு மற்றொரு அடுக்கு குறியாக்கத்தைச் சேர்க்க முடியும்[5].

கணினிகளில் உள்நுழைய ஒற்றை உள்நுழைவு செய்வதற்காகவும் நுண்ணறி அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன

Windows Live பாஸ்போர்ட்டுகளுக்கு நுண்ணறி அட்டைகள் ஆதரவுச் செயல்பாடு சேர்க்கப்பட்டிருக்கின்றது.

நிதித்துறை

தொகு

கடன் அல்லது ஏ.டி.எம் அட்டைகளாக நுண்ணறி அட்டைகளின் பயன்பாடுகள், எரிபொருள் அட்டையில், மொபைல் தொலைபேசிகளுக்கான சிம்கள், கட்டணத் தொலைக்காட்சிகளுக்கான அங்கீகரிப்பு அட்டைகள், வீட்டு உபயோகப்பொருட்களில் முன்னதாக-பணம் செலுத்துகின்ற உபகரணங்கள், உயர்-பாதுகாப்பு அடையாளங்காணல் மற்றும் அணுகல் கட்டுப்பாட்டு அட்டைகள் மற்றும் பொது போக்குவரத்து மற்றும் பொது தொலைபேசி பணம்செலுத்துதல் அட்டைகள் உள்ளிட்டவை நுண்ணறி அட்டைகளின் பயன்பாடுகள் ஆகும்.

நுண்ணறி அட்டைகளை மின்னணு வாலெட்டுகளாகவும் பயன்படுத்தலாம். நுண்ணறி அட்டை சில்லானது வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பணமளிக்கும் இயந்திரங்களில் அல்லது பல்வேறு வணிக நிறுவனங்களில் செலவிடக்கூடிய நிதியை நிரப்பிக்கொள்ளப் பயன்படுத்தக் கூடியது. தகவல்மறைப்பு நெறிமுறைகள் நுண்ணறி அட்டைக்கும் ஏற்கும் இயந்திரத்திற்கும் இடையேயான பணப்பரிமாற்றத்தை பாதுகாக்கின்றது. வழங்கப்பட்ட வங்கியின் தொடர்பு அவசியமில்லாததால், அட்டையை வைத்திருப்பவர் அதைப் பயன்படுத்த முடியும். அவர் அதற்கு உரிமையாளராக இருக்க வேண்டியதில்லை. புரோட்டான், ஜெல்ட்கார்டே, சிப்னிப் மற்றும் மாங்கோ ஆகியவை உதாரணங்கள் ஆகும். ஜெர்மனிய ஜெல்ட்கார்டே சிகரெட்டுகளை அளிக்கும் இயந்திரங்களில் வாடிக்கையாளரின் வயதை பரிசோதிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

உடல்நலம் (மருத்துவம்)

தொகு

சில உடல்நல அட்டைகளால், நோயாளி பற்றிய தகவலின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்தவும், எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய மருத்துவப் பதிவுகளுக்கான பாதுகாப்பான எடுத்துச்செல்லும் வசதியை வழங்கவும், உடல்நல பாதுகாப்பு மோசடியைக் குறைக்கவும், எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய மருத்துவப் பதிவுகளுக்காக புதிய செயலாக்கங்களை ஆதரிக்கவும், அவசர மருத்துவ தகவலுக்கு பாதுகாப்பு அணுகலை வழங்கவும், அரசாங்க முனைப்புகள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றுடன் இணக்கத்தை செயலாக்கவும் மற்றும் உடல்நல பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான பிற பயன்பாடுகளைச் செயலாக்கத் தேவையான தளத்தை வழங்கவும் முடியும்.[6]

அடையாளம் காணுதல்

தொகு

டிஜிட்டல் அடையாளம் காணுதல் கார்டுகளில் வேகமாக வளர்ச்சியடைகின்ற பயன்பாடு காணப்படுகிறது. இந்தப் பயன்பாட்டில், அட்டைகள் அடையாளத்தை அங்கீகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் பொதுவான உதாரணம் PKI உடன் இணைந்துள்ளதாகும். நுண்ணறி அட்டையானது அட்டைதாரர் பற்றிய மற்ற தொடர்புடைய அல்லது அவசியமான தகவலுடன் PKI வழங்கிய குறியாக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழைச் சேமிக்கும். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (DoD) பொது அணுகல் அட்டை (CAC) மற்றும் பல அரசாங்கங்களால் அவர்களின் குடிமக்களுக்காக அடையாள அட்டைகளாக வழங்கப்பட்ட பல்வேறு நுண்ணறி அட்டைகளின் பயன்பாடு உள்ளிட்டவை உதாரணங்களாகும். உயிர் புள்ளியியலுடன் நுண்ணறி அட்டைகள் இணையும் பொழுது இரண்டு அல்லது மூன்று காரணி அங்கீகரிப்பை வழங்க முடியும். நுண்ணறி அட்டைகள் எப்போதும் அட்டைதாரர் பற்றிய குற்றச்சாட்டு சாத்தியக்கூறுள்ள தகவலைக் கொண்டு செல்லுவதில் தனியுரிமை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாக இல்லை. தொடர்பற்ற நுண்ணறி அட்டைகளைப் பயன்படுத்துவதால், வாலெட் அல்லது துணியின் உள்ளிருந்தாலும் அட்டையை வெளியே எடுக்காமல் அவற்றைப் படிக்க முடியும், அட்டைகளைக் கொண்டு செல்லும் மனிதர்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அங்கீகரிப்பு மதிப்புகளை ஒருவர் சேர்க்க முடியும்.

உலகில் முதல் நுண்ணறி அட்டை ஓட்டுநர் உரிமம் முறை 1995 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா நாட்டின் மெண்டோஸா மாகாணத்தில் வழங்கப்பட்டது. மெண்டோஸா அதிகப்படியான சாலை விபத்துக்கள் அளவையும், வாகன ஓட்டுதல் தொடர்பான குற்றங்களையும் மற்றும் நிலுவை அபராதங்கள் வசூலிப்பிலும் மோசமான பதிவுகளையும் கொண்டிருக்கின்றது.[மேற்கோள் தேவை] ஸ்மார்ட் உரிமங்கள் வாகன ஓட்டுதல் தொடர்பான குற்றங்கள் மற்றும் செலுத்தப்படாத அபராதங்கள் ஆகியவற்றின் பதிவுகளை இன்றைய தேதிவரையில் புதுப்பித்து வைத்திருக்கின்றன. அவை தனிநபர் தகவல், உரிம வகை மற்றும் எண் ஆகியவற்றையும் உரிமதாரரின் புகைப்படத்தையும் சேமிக்கின்றன. இரத்த வகை, ஒவ்வாமைகள் மற்றும் புள்ளியியல் (கைரேகைகள்) போன்ற அவசர மருத்துவத் தகவலை சில்லில் அட்டைதாரர் விரும்பினால் சேமிக்க முடியும். இந்த புதிய முறையானது ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர்களுக்கு மேலாக அபராதங்களை வசூலிக்க உதவும் என்று அர்ஜென்டினா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

1999 ஆம் ஆண்டில் இந்தியாவில் நுண்ணறி அட்டை உரிம முறையை பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம் அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக குஜராத் இருந்தது. இன்றைய தேதி வரையில் குஜராத் அரசாங்கம் அதன் மக்களுக்கு 5 மில்லியன் நுண்ணறி அட்டை ஓட்டுநர் உரிமங்களை வழங்கியிருக்கின்றது.[மேற்கோள் தேவை] இந்த அட்டையானது அடிப்படையில் ISO/IEC 7810 சான்றிதழையும் ஒருங்கிணைச் சுற்றையும் கொண்ட ஒரு பிளாஸ்டிக் அட்டையாகும். இது அதன் நிரலாக்கத்தைப் பொறுத்து தகவலை சேமிக்கும் மற்றும் சரிபார்க்கும் திறனைக் கொண்டது.

“தேசிய ID அட்டையானது 1,024-பிட் குறிச்சொல் குறியீட்டால் பாதுக்காக்கப்பட்டது. இதை "ஒரு சூப்பர்கணினியைக் கொண்டு நூறு ஆண்டுகள் பணிபுரிந்தாலும்" தகர்ப்பது சாத்தியமற்றது. [7]

2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் நாடுகளின் மக்கள் ஒரு மின் ID அட்டையைக் கொண்டிருப்பர். அது ஒவ்வொருவரையும் தனியாக அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்த ஸ்பானிஷ் மற்றும் பெல்ஜிய அரசாங்கங்களால் வழங்கப்பட்டது. இந்த அட்டைகள் கொண்டிருக்கும் 2 சான்றிதழ்கள்: ஒன்று அங்கீகரிப்பிற்கானது மற்றொன்று கையெழுத்துக்கானது. இந்த கையெழுத்தானது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள மென்மேலும் சேவைகள் இந்த மின் ID அட்டையை அங்கீகரிப்பு டோக்கனாகப் பயன்படுத்துகின்றன. மேலும் தகவல் [1] மற்றும் [2] இல் உள்ளன

மற்றவை

தொகு

நுண்ணறி அட்டைகளானவை டிஜிட்டல் தொலைக்காட்சி ஓடைகளைப் பாதுகாக்கப் பரவலாகப் பயன்படுகின்றன. மேலோட்டமான பார்வைக்கு தொலைக்காட்சி குறியாக்கத்தை காண்க. மேலும் வீடியோஅட்டை என்பது நுண்ணறி அட்டை பாதுகாப்பு எவ்வாறு செயல்பட்டது (மற்றும் கிராக் செய்யப்பட்டது) என்பதற்கு குறிப்பிடத்தகுந்த உதாரணம் ஆகும்.

மலேசிய அரசாங்கம் அனைத்து மலேசிய குடிமக்கள் மற்றும் தங்கியுள்ள குடியுரிமை இல்லாதவர்களால் பயன்படுத்தக்கூடிய அடையாள அட்டைகளில் நுண்ணறி அட்டை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. ஸ்மார்ட் கார்டின் (MYKAD என்று அழைக்கப்படுகின்றது) உள்ளிருக்கும் தனிநபர் தகவலை சிறப்பு APDU கட்டளைகளைப் பயன்படுத்தி படிக்க முடியும்.MYKAD SDK பரணிடப்பட்டது 2009-02-16 at the வந்தவழி இயந்திரம்

பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காகிதத்தைக் கொண்டு Toppan Printing Company (凸版印刷 Toppan insatsu?) உருவாக்கிய நுண்ணறி அட்டையானது, மீண்டும் பயன்படுத்தக்கூடியது. மேலும் இதை எரித்து சாம்பலாக்க வேண்டியதில்லை அல்லது அழித்த பின்னர் மண்ணில் புதைக்க வேண்டியதில்லை. இந்த காகித அடிப்படையிலான நுண்ணறி அட்டை 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் சந்தைக்கு வந்தது.[8] இது பணப் பரிமாற்றத்திற்கும் பயன்படுகின்றது.

பாதுகாப்பு

தொகு

நுண்ணறி அட்டைகள் தனிநபர் அடையாளம் காணுதல் பணிகளுக்குப் பொருத்தமானதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன, ஏனெனில் சேதப்படுத்த முடியாத விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நுண்ணறி அட்டையின் உட்பொதிக்கப்பட்ட சில்லானது இயல்பாக சில தகவல்மறைப்பு வழிமுறையை செயலாக்குகின்றது. இருப்பினும், சில வழிமுறைகளின் அக நிலையை மீட்டெடுக்க பல முறைகள் உள்ளன.

வேறுபட்ட மின்சக்தி பகுப்பாய்வு

தொகு

வேறுபட்ட மின்சக்தி பகுப்பாய்வு[9] என்பது குறிப்பிட்ட குறியாக்கம் அல்லது குறியீடு நீக்க செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் சரியான கால அளவு மற்றும் மின்சார அழுத்தம் ஆகியவற்றை அளவிடுதலில் ஈடுபடுகின்றது. இது பெரும்பாலும் ஆன்-சிப் தனிப்பட்ட குறிச்சொல்லை ஊகித்து உணர்வதன் அடிப்படையிலான RSA போன்ற பொது குறிச்சொல் வழிமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றது. இருந்தாலும் சிம்மெட்ரிக் சைபர்களின் சில செயலாக்கங்கள் கால அளவு அல்லது அதே போன்று மின்சக்தி தாக்குதல்களுக்கு ஊறுவிளைவிக்கும்.

கட்டமைப்பு ஒருங்கிணைப்பின்மை

தொகு

அமிலத்தை பயன்படுத்துதலால், உராய்வால், அல்லது நேரடியாகப் பெறக்கூடிய பிற தொழில்நுட்பத்தால், போர்டிலுள்ள நுண்செயலிக்கான கட்டுப்படுத்தப்படாத அணுகலால் நுண்ணறி அட்டைகள் கட்டமைப்பு ஒருங்கிணைப்பின்மையைப் பெற முடியும். இருந்தாலும் இது போன்ற தொழில்நுட்பங்கள் சில்லுக்கு நிரந்தர பாதிப்பின் அதிகபட்ச ஆபத்தை வழங்குவதில் ஈடுபடுவது வெளிப்படையாகின்றது. அவை மிகவும் அதிகமான விரிவாக்கப்பட்ட தகவலை (உ.ம். குறியீடாக்க வன்பொருளின் போடோமைக்ரோகிராப்கள்) வெளிக்கொணர அனுமதிக்கின்றன.

சிக்கல்கள்

தொகு

தோல்வி வீதம் நுண்ணறி அட்டைகளின் மற்றொரு சிக்கலாக இருக்கலாம். சிப் உட்பொதிக்கப்பட்ட பிளாஸ்டிக் அட்டை மிகவும் நெகிழ்தன்மையுடையதாகவும் சிப்பை விட பெரியதாகவும் உள்ளது. மேலும் உடைதலுக்கான அதிகபட்ச சாத்தியக்கூறையும் கொண்டுள்ளது. நுண்ணறி அட்டைகள் பெரும்பாலும் வாலெட்கள் அல்லது பைகளில் கொண்டு செல்லப்படுகின்றன — இது சிப்புக்கான மிகவும் உறுத்தலான சூழல் ஆகும். இருப்பினும், மிகப்பெரிய வங்கியியல் அமைப்புகளுக்கு தோல்வி-மேலாண்மை செலவினமானது, மோசடி குறைப்பினால் ஈடுசெய்யப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும். அட்டை உறை நல்ல யோசனையாக இருக்கக்கூடும்.

பெரும் திரளான பரிவர்த்தனைக்கு நுண்ணறி அட்டையைப் பயன்படுத்துதல் தனியுரிமைக்கான ஆபத்தை அளிக்கின்றது. ஏனெனில் இது போன்ற அமைப்பு பெரும்திரள் பரிவர்த்தனை ஆபரேட்டர் (மற்றும் அதிகாரிகள்) தனிநபர்களின் இயக்கத்தைத் தடமறிய உதவுகிறது. பின்லாந்தில், தரவு பாதுகாப்பு விசாரணையாளர் இது போன்ற தகவலை போக்குவரத்து ஆபரேட்டர் YTV சேகரிப்பதிலிருந்து தடைசெய்தார். இருப்பினும் அட்டையின் உரிமையாளர் அந்த அட்டையுடனான பயணத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தின் பட்டியலைப் பெறும் உரிமையை கொண்டுள்ளார் என YTV இன் வாதம் இருந்தது. இதற்கு முன்னர், மைர்மன்னி குண்டுவெடிப்பின் விசாரணையில் இது போன்ற தகவல் பயன்படுத்தப்பட்டது.

கிளையண்ட் பக்க அடையாளம் காணல் மற்றும் அங்கீகரிப்பிற்காகப் பயன்படுத்தப்படும் நுண்ணறி அட்டைகள் மிகவும் பாதுகாப்பான வழியாக உள்ளன. உதாரணமாக இணைய வங்கியியல் பயன்பாடுகளைக் கூறலாம், ஆனால் அந்தப் பாதுகாப்பு ஒருபோதும் 100% நம்பத்தகுந்தது இல்லை. இணைய வங்கியியல் உதாரணத்தில், கணினி ஏதாவது வகை தீம்பொருள் கொண்டு பாதிக்கப்பட்டிருந்தால், பாதுகாப்பு மாதிரி உடைந்திருக்கும். தீம்பொருளானது பயனர் மற்றும் இணைய வங்கியியல் பயன்பாடு (உ.ம் உலாவி) இடையே (விசைப்பலகை வழியாக உள்ளீடு மற்றும் பயன்பாட்டுத் திரை வழியாக வெளியீடு ஆகிய இரண்டிலும்) தகவல்தொடர்பை ரத்து செய்ய முடியும். இது தீம்பொருளால் பரிமாற்றங்கள் திருத்தப்படுவதை விளைவிக்கும் மற்றும் பயனரால் கவனிக்கப்படாது. தீம்பொருளானது இந்தத் திறனைக் கொண்டு கட்டுப்பாடற்றதாக உள்ளது (உ.ம். டிரோஜன். சைலண்ட்பேங்கர்). பெல்ஜியத்திலுள்ள ஃபோர்டிஸ் மற்றும் டெக்ஸியா போன்ற வங்கிகள் இந்த சிக்கலைத் தவிர்க்க நுண்ணறி அட்டையுடன் தொடர்பற்ற அட்டை படிப்பானை இணைத்துள்ளது. வாடிக்கையாளர் வங்கியின் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட அவரது PIN மற்றும் அட்டை படிப்பானில் உள்ள பரிவர்த்தனை தொகை ஆகியவற்றை உள்ளிடுகின்றார். அட்டை படிப்பான் ஒரு 8-இலக்க கையெழுத்தை அளிக்கின்றது. இந்த கையெழுத்து கணினிக்கு கைமுறையாக நகலெடுக்கப்படுகின்றது மற்றும் வங்கியால் சரிபார்க்கப்படுகின்றது. இந்த முறையானது தீம்பொருள் பரிவர்த்தனைத் தொகை மாற்றப்படுவதைத் தடுக்கின்றது.

இன்னும் கூடுதலாக தொழில்நுட்ப இடையூறுகள் நுண்ணறி அட்டை செயல்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிக்கான தரநிலைகளின் குறைபாடாக உள்ளன. இந்த சிக்கலைத் தீர்க்க, "நுண்ணறி அட்டை அடிப்படையிலான ஊடாடல் புள்ளி (POI) உபகரணத்திற்காக புதிய செயல்பாடு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு" ஒரு கருத்துருவை உருவாக்க த பெர்லின் குரூப் நிறுவனத்தால் ERIDANE திட்டம் துவங்கப்பட்டது. சாதனமானது சில்லறை விற்பனைச் சூழலில் மாற்றாக பயன்படுத்தக்கூடியது.[10]

சொல்லியல்

தொகு
ATR
மீட்டமைக்கும் பதில்
BCD
இருமக் குறிமுறை தசமம்
CHV
அட்டைதாரர் சரிபார்ப்பு
COS
அட்டை இயக்க முறைமை
DF
அர்ப்பணிக்கப்பட்ட கோப்பு
IC
ஒருங்கிணைச் சுற்று
PC/SC
தனிநபர் கணினி / நுண்ணறி அட்டை
MF
முதன்மைக் கோப்பு
PPS
நெறிமுறை மற்றும் அளவுரு தேர்வு
RFU
எதிர்காலப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது

மேலும் காண்க

தொகு
  • அணுகல் முத்திரை
  • அணுகல் கட்டுப்பாடு
    • விசைக்காப்பு
    • வட்டு மறையாக்கம்
    • புறநிலைப் பாதுகாப்பு
  • BasicCard
  • உயிர் புள்ளியியல்
  • பொது அணுகல் அட்டை
  • நற்சான்று
  • மின் பணம்
  • மின் கடவுச்சீட்டு
  • EMV கடன் அட்டைகள்
  • GlobalPlatform தரநிலை
  • ID அட்டை
  • ஜாவா அட்டை
  • காந்தப் பட்டை அட்டை
  • MULTOS
  • PCI DSS
  • புரோக்ஸிமிட்டி அட்டை
  • RFID
  • பாதுகாப்பு பொறியியல்
  • ஒற்றை உள்நுழைவு
  • ஸ்நாபி
  • SIM
  • ஸ்வைப் அட்டை
  • தொலைபேசி அட்டை

குறிப்புகள்

தொகு
  1. Multi-application Smart Cards. Cambridge University Press. 2007.
  2. Smart Cards: More or 'Less'. ABI/INFORM Global database.
  3. டிஜிட்டல் கையெழுத்துக்கள் மற்றும் ஒற்றை உள்நுழைவில் ஆகியவற்றுக்கான நுண்ணறி அட்டைகள் பயன்படுத்துதலில் வெள்ளைத் தாள்கள்
  4. மோஸில்லா சான்றிதழ் ஸ்டோர்
  5. FreeOTFE ஆல் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு டோக்கன்/ஸ்மார்ட்கார்டு ஆதரவு
  6. http://www.smartcardalliance.org/pages/smart-cards-applications-healthcare
  7. Yes They Certainly Will. ABI/INFORM Global database.
  8. "development of the "KAMICARD" IC card made from recyclable and biodegradable paper". Toppan Printing Company இம் மூலத்தில் இருந்து 2009-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090501215413/http://www.toppan.co.jp/english/news/newsrelease883.html. பார்த்த நாள்: 2009-03-27. 
  9. Power Analysis Attacks. Springer. 2007.
  10. "Related Initiatives". Home web for The Berlin Group. The Berlin Group. 2005-08-01. Archived from the original on 2006-05-07. பார்க்கப்பட்ட நாள் 2007-12-20. The aim of ERIDANE is therefore to propose a new functional and security framework for smart-card based Point of Interaction (POI) equipment to be used in a wide variety of retail environment : Point Of Sales (POS) devices in small shops, POS equipment integrated in supermarkets and department stores, card readers to be used on the move (e.g. taxis, etc.), vending machines and other unattended related terminals.

குறிப்புதவிகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Smart cards
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணறி_அட்டை&oldid=3849035" இலிருந்து மீள்விக்கப்பட்டது