ஸ்ரீஹரிக்கோட்டை
ஸ்ரீஹரிக்கோட்டை (தெலுங்கு: శ్రీహరికోట) வங்காள விரிகுடா கரையோரம் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அரண் தீவு ஆகும். சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள இங்கு இந்தியாவின் விண்கல ஏவு நிலையமான சதீஸ் தவான் விண்வெளி மையம் உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் தன் விண்கலங்களை இங்கிருந்து ஏவுகிறது. 2008 அக்டோபர் 22 இல் சந்திரயான்-1 இங்கிருந்து ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிக்கோட்டை
శ్రీహరికోట (தெலுங்கு) | |
---|---|
ஆந்திர பிரதேசத்தில் அமைவிடம் இந்தியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 13°43′04″N 80°12′00″E / 13.7178°N 80.2000°E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை |
மாவட்டம் | திருப்பதி |
ஏற்றம் | 1 m (3 ft) |
மொழி | |
• அலுவல்மொழி | தெலுங்கு |
அஞ்சல் குறியீட்டு எண் | 524 124 |
வாகனப் பதிவு | AP |
அருகில் உள்ள நகரம் | சூலூர் பேட்டை |
தட்பவெப்ப நிலை (கோப்பென்) | வறண்ட மற்றும் ஈர வெப்பமண்டலம் (வெப்பமண்டல சவன்னா காலநிலை) |
ஸ்ரீஹரிக்கோட்டை , பழவேற்காடு ஏரியை வங்காள விரிகுடாவிலிருந்து பிரிக்கிறது. ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தைச் சார்ந்த புலிக்காடு நகரம் இத்தீவிலுள்ளது. அருகிலுள்ள நகரான சூலூர் பேட்டை 20 கிமீ தொலைவிலுள்ளது. இங்கு தொடர் வண்டி நிலையம் உள்ளது. சூலூர் பேட்டை சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை 5 ஆல் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்பு
தொகுவிக்கிப்பயணத்தில் சிறீ ஹரிக்கோட்டா என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- சிறீ ஹரிக்கோட்டாவைப் பற்றிய காணொளிகள் மற்றும் படிமங்கள் பரணிடப்பட்டது 2008-12-14 at the வந்தவழி இயந்திரம்