ஹக்கீம் சையத் ஜில்லூர் ரஹ்மான்
ஹக்கீம் சையத் ஜில்லூர் ரஹ்மான் யுனானி மருத்துவத்தின் இந்திய அறிஞர். 2000 ஆம் ஆண்டில் இப்னு சினா அகாடமி ஆஃப் இடைக்கால மருத்துவம் மற்றும் அறிவியல் நிறுவனத்தை நிறுவினார். இவர் இதற்கு முன்பு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU) கீழ் இயங்கும் அஜ்மல் கான் திப்பியா கல்லூரியில் பேராசிரியர் மற்றும் துறை தலைவராக இருந்துள்ளார்.
ஹக்கீம் சையத் ஜில்லூர் ரஹ்மான் | |
---|---|
பிறப்பு | 1 சூலை 1940 போபால், போபால் மாநிலம், பிரித்தானிய இந்தியா (தற்போது மத்திய பிரதேசம், இந்தியா) |
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், தாருல் உலூம் நத்வதுல் உலமா |
அறியப்படுவது | யுனானி மருத்துவம் & மருந்துக்களின் வரலாறு |
பெற்றோர் | ஹக்கீம் சையத் ஃபஜலூர் ஜில்லூர் ரஹ்மான், ஹனீஃபா காத்தூன் |
வாழ்க்கைத் துணை | அஹ்மதி பேகம் |
பிள்ளைகள் | சப்யாக அக்தர், செய்யத் ஜியவூர்ரஹ்மான்,, சோபியா அக்தர்,ஆசிபா ஹனிஃபா |
உறவினர்கள் | ஹக்கீம் சையத் கரம் ஹுசேன் (தாத்தா) |
அலிகார் யுனானி மருத்துவம் பீடாதிபதி ஆசிரிய போன்ற பதவிகளில் 40 ஆண்டுகள் பணியாற்றி பிறகு ஓய்வுபெற்றார்.
தற்போது, இவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழத்தில் "கெளரவ பொருளாளராக" உள்ளார். [1] 2006 ஆம் ஆண்டில், யுனானி மருத்துவத்தில் இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது . [2]
வாழ்க்கை வரலாறு
தொகுஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுரகுமான் 1940 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று பிரித்தானிய ஆட்சிக்கு கீழ் இருந்த இந்தியாவின் போபால் மாநிலம் போபாலில்(இப்போது மத்தியப் பிரதேசம்) பிறந்தார். இவரது தாத்தா ஹக்கீம் சையத் கரம் ஹுசைன், தந்தை ஹக்கீம் சையத் ஃபஸ்லூர் ரஹ்மான் மற்றும் மாமா ஹக்கீம் சையத் அதிகுல் காதிர் ஆகியோர் டிஜாரா / போபாலில் யுனானி மருத்துவர்கள். [ மேற்கோள் தேவை ] ரகுமான் லக்னோவில் தாருல்-உலூம் நத்வதுல் உலமாவில் கல்வி பயின்றார். பின்னர் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் அஜ்மல் கான் திப்பியா கல்லூரியில் பட்டம் பெற்றார். [சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]
தொழில்
தொகுரஹ்மான் 1961 ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் அஜ்மல் கான் திபியா கல்லூரியில் ஒரு செயல்முறை விளக்குபவராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் டெல்லியின் ஜாமியா திபியாவில் விரிவுரையாளரானார். அங்கு அவர் 1973 இல் வாசகராகவும், 1983 இல் பேராசிரியராகவும் ஆனார். இவர் 18 ஆண்டுகள் இல்முல் அத்வியா துறையின் தலைவராகவும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் யுனானி மருத்துவ துறையின் தலைவராகவும் இருந்தார். [3] [4]
அசாம்கார், பீனாபாராவில் இப்னு சினா திபியா கல்லூரியை நிறுவ உதவியனார். அதற்கு 1981 ஆம் ஆண்டு ஜனவரி 25, அன்று அடிக்கல் நாட்டினார்.[சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]
படைப்புகள்
தொகுஇவரது மருத்துவத்தின் வரலாறு ஆய்வு குறிப்பாக இடைக்கால மருத்துவம் மற்றும் இடைக்கால இஸ்லாத்தில் மருத்துவத்தின் பகுப்பாய்வு செய்கிறது. [சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]
- ↑ "Honorary Treasurer". Aligarh Muslim University. 2018. பார்க்கப்பட்ட நாள் December 6, 2018.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Brief Biography". Germany.
- ↑ "Biography" (PDF). International Institute of Islamic Medicine, USA. Archived from the original (PDF) on 2022-02-23. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.