ஹசன் அலி (துடுப்பாட்டக்காரர்)
ஹசன் அலி( Hasan Ali (பிறப்பு: 2 சூலை,1994) பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்[1].அக்டோபர் 2013 ஆம் ஆண்டில் சியல்கோட் அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] ஆகஸ்டு, 2016 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[3] 2017 ஐசிசி வாகையாளர் கோப்பைத் தொடரில் பாக்கித்தான் அணியில் இடம்பெற்றார்.[4] இந்தத் தொடரில் 13 இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார்.[5] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 50 இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தானிய வீரர்கள்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.[6]
சர்வதேசப் போட்டிகள்
தொகு2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி மற்றும் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடருக்கான பாக்கித்தான் அணியில் இவர் இடம் பெற்றார்.[7] ஆகஸ்டு 18 , 2016 இல் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார்.[8] செப்டம்பர் 2016 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[9]
2017 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[10]
ஏப்ரல் 2017 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்கான பாக்கித்தான் அணியில் இவர் இடம்பெற்றார்.[11] மே 10, 2017 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடினார்.[12]
2017 ஐசிசி வாகையாளர் கோப்பைத் தொடரில் விளையாடினார்[4]. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி 13 இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 180 ஓட்டங்களில் வெற்றி பெற உதவினார் [13] மேலும் அந்தத் தொடரின் ஆட்டநாயகன் விருது மற்றும் தங்கப்பந்து விருதினையும் பெற்றார்.[14] 13 இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் வாகையாளர் கோப்பைத் தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜெரோம் டெய்லருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.[15][16]
அக்டோபர் 2017 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இலக்கினை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 50 இலக்குகளை வீழ்த்திய பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார். அதே மாதத்தில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அறிமுகமான 426 நாட்களில் இவர் முதலிடம் பிடித்தார.[17][18][19] இதன்மூலம் விரைவாக முதலிடம் பிடித்த பாக்கித்தானிய வீரர் மற்றும் சர்வதேச அளவில் நானகவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[20][21]
2017 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 45 இலக்குகளை வீழ்த்தினார்[22]. இதன்மூலம் அந்த ஆண்டில் அதிக இலக்குகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் எனும் சாதனை படைத்தார். மேலும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் அந்த ஆண்டிற்கான சிறந்த வீரர் விருதினை இவருக்கு வழங்கியது[23].மேலும் அதே ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்[24].பின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2017 ஆண்டிற்கான சிறந்த வளர்ந்து வரும் வீரர் எனும் விருதினை இவருக்கு வழங்கியது.[25]
சான்றுகள்
தொகு- ↑ "Hasan Ali". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
- ↑ "Quaid-e-Azam Trophy, Group I: Lahore Ravi v Sialkot at Lahore, Oct 23–25, 2013". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 June 2017.
- ↑ "Pakistan tour of England and Ireland, 1st ODI: Ireland v Pakistan at Dublin (Malahide), Aug 18, 2016". ESPNcricinfo (ESPN Sports Media). 18 August 2016. http://www.espncricinfo.com/ci/engine/match/913649.html. பார்த்த நாள்: 18 August 2016.
- ↑ 4.0 4.1 "Pakistan recall Azhar, Umar Akmal". ESPNcricinfo. 25 April 2017. http://www.espncricinfo.com/pakistan/content/story/1094602.html. பார்த்த நாள்: 25 April 2017.
- ↑ "ICC Champions Trophy, Final: India v Pakistan at The Oval, Jun 18, 2017". ESPNcricinfo (ESPN Sports Media). 18 June 2017. http://www.espncricinfo.com/ci/engine/match/1022375.html. பார்த்த நாள்: 18 June 2017.
- ↑ "Fastest to 50 One Day International wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ "Umar Gul returns to Pakistan's ODI squad tour". ESPNcricinfo (ESPN Sports Media). 9 August 2016. http://www.espncricinfo.com/england-v-pakistan-2016/content/story/1044231.html. பார்த்த நாள்: 9 August 2016.
- ↑ "Pakistan tour of England and Ireland, 1st ODI: Ireland v Pakistan at Dublin (Malahide), Aug 18, 2016". ESPNcricinfo (ESPN Sports Media). 18 August 2016. http://www.espncricinfo.com/ci/engine/match/913649.html. பார்த்த நாள்: 18 August 2016.
- ↑ "Pakistan tour of England and Ireland, Only T20I: England v Pakistan at Manchester, Sep 7, 2016". ESPNcricinfo (ESPN Sports Media). 7 September 2016. http://www.espncricinfo.com/ci/engine/match/913663.html. பார்த்த நாள்: 7 September 2016.
- ↑ "Pakistan tour of Australia, 4th ODI: Australia v Pakistan at Sydney, Jan 22, 2017". ESPN cricinfo. http://www.espncricinfo.com/australia-v-pakistan-2016-17/engine/match/1000893.html.
- ↑ "Shadab Khan breaks into Pakistan Test squad". ESPN Cricinfo.
- ↑ "Pakistan tour of West Indies, 3rd Test: West Indies v Pakistan at Roseau, May 10–14, 2017". ESPN Cricinfo.
- ↑ "ICC Champions Trophy, Final: India v Pakistan at The Oval, Jun 18, 2017". ESPNcricinfo (ESPN Sports Media). 18 June 2017. http://www.espncricinfo.com/ci/engine/match/1022375.html. பார்த்த நாள்: 18 June 2017.
- ↑ "New champions: Zaman, Amir and Pakistan raze India for title". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
- ↑ "Pakistan hand India biggest loss in ICC finals". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
- ↑ "Cricket Records | Records | ICC Champions Trophy (ICC KnockOut) | Most wickets in a series | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/most_wickets_series.html?id=44;type=trophy.
- ↑ "Hasan Ali Breaks Waqar Younis' Record in Sri Lanka ODI". Cricketnext. http://www.news18.com/cricketnext/news/hasan-ali-breaks-waqar-younis-record-in-sri-lanka-odi-1550773.html. பார்த்த நாள்: 18 October 2017.
- ↑ "Double feat for Hasan! Becomes 2017’s top bowler, completes 50 ODI wickets". GeoNews. http://www.geo.tv/latest/163376-double-feat-for-hasan-becomes-2017s-top-bowler-completes-50-odi-wickets. பார்த்த நாள்: 18 October 2017.
- ↑ "Hasan five-for, Imam debut ton sink Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 October 2017.
- ↑ "De Villiers, Hasan Ali move up to top of ODI rankings". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
- ↑ "Hasan's phenomenal rise to the top". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 October 2017.
- ↑ "Most One Day International Wickets in 2017". Stats.espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 31 December 2017.
- ↑ "Sarfaraz bags outstanding player of the year at PCB awards 2017". Dawn News. 14 September 2017. பார்க்கப்பட்ட நாள் 29 October 2017.
- ↑ "De Villiers, Hasan Ali move up to top of ODI rankings". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
- ↑ "Hasan Ali bursts out of the shadows". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.
வெளியிணைப்புகள்
தொகு- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ஹசன் அலி (துடுப்பாட்டக்காரர்)
- Player Profile: ஹசன் அலி (துடுப்பாட்டக்காரர்) கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து