ஹம்மிரதேவன்

ஹம்மிராதேவன் (Hammiradeva) : ஹம்மாராதேவன்; ஆட்சிக் காலம் 1283-1301) இரண்தம்பபுரத்தின் (நவீன இரந்தம்பூர் ) வட இந்திய இராஜபுத்திர அரச குலங்களில் ஒன்றான சௌகான் வம்சத்தின் கடைசி மன்னனாவான். முஸ்லிம் பதிவுகளிலும், வடமொழி இலக்கியங்களிலும் இவனை ஹமீர்தேவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்மிரதேவன்
ரந்தம்பூர் கோட்டையில் ஹம்மிரதேவனின் அரண்மனை
ஆட்சிக்காலம்1283-1301
இறப்பு10 சூலை 1301[1]

இன்றைய ராஜஸ்தானில் இரன்தம்பூரை மையமாகக் கொண்ட ஒரு இராச்சியத்தை இவன் ஆட்சி செய்தான். 1280களில், இவன் பல அண்டை இராச்சியங்களைக் கைப்பற்றி தனது பகுதியுடன் சேர்த்துக் கொண்டான். இதனால் இவனுக்கு கூட்டாளிகள் எவருமில்லாமல் போய்விட்டது. 1290களில், தில்லி சுல்தானகத்தின் ஜலாலுதீன் கில்ஜிக்கு எதிராக இவன் தனது இராச்சியத்தை வெற்றிகரமாக பாதுகாத்தான். 1299ஆம் ஆண்டில், தில்லியைச் சேர்ந்த சில மங்கோலிய கிளர்ச்சியாளர்களுக்கு புகலிடம் கொடுத்தான். இது ஜலாலுதீனின் வாரிசான அலாவுதீன் கில்ஜியை இவன் மேல் படையெடுக்கத் தூண்டியது. அலாவுதீனின் தளபதிகளான உலுக் கானுக்கும், நுஸ்ரத் கானுக்கும் எதிராக இவனது படைகள் சில வெற்றிகளைப் பெற்றன. ஆனால் இறுதியில் 1301 இல் நீண்ட முற்றுகைக்குப் பின்னர் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவன், சௌகான் மன்னன் ஜெய்த்ரசிம்மன் (ஜெய்த்ரா சிங்) என்பவனுக்கும், அவனது இராணி ஹிரா தேவிக்கும் மகனாகப் பிறந்தான். [2] "ஹம்மிரா" என்ற பெயர் அமீர் என்ற அரபு தலைப்பின் சமசுகிருத வடிவமாகும்.[3] இவன் இறந்து சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிஞரால் எழுதப்பட்ட இவனைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அதன் நம்பகத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.[4] [5] இவனுக்கு சூரத்ரானா மற்றும் விராமா என்ற இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தனர். [4]

மேற்கோள்கள் தொகு

நூலியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்மிரதேவன்&oldid=3378349" இலிருந்து மீள்விக்கப்பட்டது