ஹரஹர மஹாதேவகி

ஹரஹர மஹாதேவகி (Hara Hara Mahadevaki) என்பது 2017 ஆண்டைய இந்தியத் தமிழ் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆவார். படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் திரை நட்சத்தரங்களான கௌதம் கார்த்திக் மற்றும் நிக்கி கல்ரானி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு பாலமுரளி பாபு இசையமைத்துள்ளார். தங்கம் சினிமாஸ் தயாரித்த இப்படத்தை புளூ கோஸ்ட் பிக்சர்ஸ் வெளியிட்டது, படத்தின் தயாரிப்புப் பணிகள் 2016 நவம்பரில் துவங்கின.

ஹரஹர மஹாதேவகி
இயக்கம்சந்தோஷ் பி ஜெயக்குமார்
தயாரிப்புஎஸ். தங்கராஜ்
கதைசந்தோஷ் பி ஜெயக்குமார்
இசைபாலமுரளி பாலு
நடிப்புகௌதம் கார்த்திக்
நிக்கி கல்ரானி
ஒளிப்பதிவுசிவகுமார் எஸ்கே
கலையகம்தங்கம் சினிமாஸ்
விநியோகம்புளூ கோஸ்ட் பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 29, 2017 (2017-09-29)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து ஒப்பனைப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று ஆளுங்கட்சியால் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அதே கட்சியில் இருக்கும் முக்கிய தலைவரான ரவிமரியா அந்த ஒப்பனைப் பைகளில் ஒன்றில் வெடிகுண்டை வைத்து அதனை கருணாகரன், மொட்டை ராஜேந்திரனிடம் ஆகியோரிடம் கொடுத்து தன்னுடைய கட்சித் தலைவர்கள் பங்குபெறும் கூட்டத்தில் வைத்து வெடிக்கச் சொல்கிறார்.

நாயகன் கவுதம் கார்த்திக், துக்க வீட்டில் நடக்கும் இறுதிசடங்குகளை முன்நின்று நடத்தும் ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கவுதம் கார்த்திக்கும் அவரது காதலியான நிக்கி கல்ராணிக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். இதையடுத்து காதலித்த போது இருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்த பரிசுப் பொருட்களை திரும்பப் பெறுவதாக முடிவு செய்கின்றனர். அந்த பொருட்களை தேர்தலின் போது வழங்கப்பட்ட பையில் போட்டு எடுத்துச் செல்கின்றனர்.

ஹரஹரமஹாதேவகி என்ற விடுதியில் வந்து தங்கும் பணக்கார தம்பதியின் பெண் குழந்தை கடத்தப்படுகிறது. காவல் துறையை நாடாமல் ஒரு கோடி பணத்தை ஒப்படைத்தால் குழந்தையை ஒப்படைப்போம் என்று கடத்தல் பேர்வழி லிங்கா மிரட்டல் விடுக்கிறார். அதனால் கேட்ட பணத்தை அரசியல் கட்சி பையில் சொன்ன இடத்தில் வைத்து விட்டு வந்து விடுகின்றனர்.

கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றினால் தரகு தொகை கிடைக்கும் என்ற ஆசையில் பாலசரவணன் இரண்டு லட்சத்தை அரசியல் கட்சி பையில் வைத்து மாற்றுவதற்காக எடுத்து வரும் போது தொலைந்து விட பையைத் தேடி அலைகிறார்.

இந்நிலையில், சம்பந்தமில்லாத இந்த நான்கு சம்பவங்களும் ஹரஹரமஹாதேவகி என்ற விடுதியில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சம்பவத்தின் போதுதான் காவல் அதிகாரியாக ஆர்.கே. சுரேஷ் வருகிறார். ராஜேந்திரனிடம் இருக்கும் வெடிகுண்டு பை, கௌதம், நிக்கி கொடுத்த பொருட்களை எடுத்து வைத்திருக்கும் பை, பாலா சரவணனிடம் இருக்கும் கள்ள நோட்டுப் பை, லிங்கா கேட்கும் ஒரு கோடிப் பை, உச்சக்கட்டத்தில் வரும் பாம்புப் பை என ஒவ்வொரிடமும் கைமாறி செல்ல இறுதியில் யார் கைக்கு பணம் கிடைத்தது, உண்மையான வெடிகுண்டு வெடித்ததா, ரவி மரியா முதலமைச்சர் ஆனாரா, பால சரவணனின் பணம் என்ன ஆனது, அதன் பின்னணியில் என்ன நடந்தது, கடத்தல் பேர்வழியிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டதா, கடைசியில் கவுதம் கார்த்திக் - நிக்கி கல்ராணியின் காதல் என்ன ஆனது, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்ற வினாக்களுக்கு விடையாக அமைகிறது படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் பணிகள் துவங்கின. ஸ்டுடியோ கிரீன் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகியன சேர்ந்து இந்தத் திரைப்படப் பணிகளைத் துவங்கின. அறிமுக இயக்குநரான சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கிய இப்படத்தில், கௌதம் கார்த்திக் மற்றும் நிக்கி கல்ரானி ஆகியோரின் முன்னணி பாத்திரங்களில் நடித்தனர்.[1] படத்தின் பெயரான ஹரா ஹரா மஹாதேவக்கி என்ற பெயரை அறிவிக்கும் நிகழ்ச்சியில், ராஜேந்திரன் மற்றும் ரவி மரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Gautham Karthik and Nikki Galrani pair up for Hara Hara Mahadevaki". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
  2. "Hara Hara Mahadevaki (aka) Hara Hara Mahadevki photos stills & images". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரஹர_மஹாதேவகி&oldid=3661005" இலிருந்து மீள்விக்கப்பட்டது