ஹருஹிசா ஹண்டா

ஹருஹிசா ஹண்டா (Haruhisa Handa) இவர் ஒரு ஜப்பானிய மதத் தலைவரும் ஒரு தொழிலதிபரும் ஆவார். ஹிண்டா ஷின்டோவை அடிப்படையாகக் கொண்ட உலகத்துணை என்ற மதத்திற்கு உலகலாவிய ஆன்மீகத் தலைவராகவும் உள்ளார்.[1] அவர் தோஷு புகாமி என்ற பெயரிலும் அறியப்படுகிறார். அத்துடன் டோட்டோ அமி என்ற புனை பெயரை அவரது கலை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார். அவர் லியோனார்டோ தோஷு என்ற புனைப்பெயரையும் பயன்படுத்துகிறார், இது அவரது வானொலி ஆளுமைக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஹண்டா, ஜப்பானிய பார்வையற்றோர் கோல்ஃப் சங்கத்தின் நிறுவனர் ஆவார்.[2] இவர் கம்போடியா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பேராசிரியராகவும், ஜெஜியாங் கோங்ஷாங் பல்கலைக்கழகத்தில்[3] ஜப்பான் கலாச்சார ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியராகவும், ஜப்பானின் ஃபுகுயோகாவில் உள்ள கம்போடியா இராச்சியத்தின் கௌரவ தூதராகவும் உள்ளார்.[4]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ஹண்டா, 1951 ஆம் ஆண்டில், சப்பானின் ஹைகோ மாவட்டத்தின், நிஷினோமியாவில் [5] பல தலைமுறையாக பீப்பாய் உற்பத்தி செய்யும் குடும்பத்தில் பிறந்தார். [6] இவரது இளம் பருவத்தில், ஹண்டா ஏறக்குறைய ஒரு நாளொன்றுக்கு ஒரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்.[7] இவர் கியோத்தோவில் உள்ள தோஷிஷா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். சர்வதேச பொருளாதாரத்திலும் நுபுணத்துவம் பெற்றார். 1998 ஆம் ஆண்டில் அவர் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் (ஈசியு) வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அகாதமி ஆஃப் பெர்பார்மிங் ஆர்ட்ஸில் (WAAPA) சேர்ந்தார். டிசம்பர் 2002 இல்,தனது 51 வயதில், அவர் படிப்பை முடித்தார் மற்றும் அங்கு முதுகலை பட்டம் மற்றும் நுண்கலை மற்றும் படைப்புக் கலை பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.[8] 2006 ஆம் ஆண்டில் சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் வடிவமைப்பு அகாதமியில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை முடித்தார். மேலும் சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் சீன பாரம்பரியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[9] அவரது தொழில் வாழ்க்கையில் அவர் தி ஜுலியார்ட் பள்ளியில் இருந்து மனித நேயத்திற்கான கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கார்பஸ் கிறிஸ்டி கல்லூரியின் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[10] மேலும், ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் கௌரவ உறுப்பினர், லண்டன் பல்கலைக்கழகம் (SOAS),[11] மற்றும் க்ளூசெஸ்டர்ஷைர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.[12] மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், கர்டின் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.[13]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இளங்கலைப் பள்ளிக்குப் பிறகு, டோக்கியோவில் அமைந்துள்ள டைவா ஹவுஸில் ஹண்டா தனது பணியைத் தொடங்கினார். 1978 ஆம் ஆண்டில், அவர் பதவியில் இருந்து விலகி மிசுசூ கம்பெனி லிமிடெட் நடத்தும் மிசுசூ காகுயென் என்ற ஒரு தனியார் பள்ளியை நிறுவினார்.[14]

சர்வதேச நிறுவனங்கள்

தொகு

1980 களின் முற்பகுதியில், மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் ஹண்டா வணிகங்களை உருவாக்கத் தொடங்கினார்.[1] 1988 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் பார்வையற்றோருக்கான கோல்ஃப் விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டு அதை உருவாக்கியவர்களை சந்த்தித்தார். பின்னர் அவர் அந்த விளையாட்டை சப்பானுக்கு கொண்டு வந்து சப்பானிய பார்வையற்றோர் கோல்ஃப் சங்கத்தை நிறுவினார்.[15] மேலும், 1997 இல், அவர் சர்வதேச பார்வையற்றோர் கோல்ஃப் சங்கத்தை (ஐபிஜிஏ) தொடங்கினார்.[16] 1996 இல் அவர் கலை மற்றும் கலாச்சாரத்திற்கான சர்வதேச அறக்கட்டளையை (IFAC) நிறுவினார்.[17] கம்போடியாவின் புனோம் பென்னில் உள்ள சிஹானூக் மருத்துவமனையின் துணை நிறுவனராகவும் ஹண்டா உள்ளார்.[18]

கல்வி நடவடிக்கைகள்

தொகு

வேந்தர் மற்றும் பேராசிரியர் - கம்போடியா பல்கலைக்கழகம்

தொகு

அவர் 2003 இல் திறக்கப்பட்ட கம்போடியா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணியாற்றுகிறார்.[19] அவர் ஜனவரி 2006 முதல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.[20] 2004 ஏப்ரல் 30 அன்று இந்த வளாகத்திலுள்ள நூலகத்தின் பெயர் தோஷு புகாமி நூலகம் என மாற்றப்பட்டது. கம்போடியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றான இந்த நூலகத்தில் சுமார் 50,000 புத்தகங்களின் தொகுப்பு உள்ளது.[21] பிரதம மந்திரி ஹுன் சென் மற்றும் உலகத்துணை மதம் நிதி வழங்குகிறது. இந்த உதவித்தொகை விண்ணப்பித்த 500 மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக கல்வி பயிலுவதற்கு கட்டணமில்லாமல் சேரவும் இளங்கலை பட்டம் பெறவும் உதவுகிறது. 2007 முதல் 2009 வரை ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவித்தொகை 500 மாணவர்களுக்கு மொத்தம் 1,500 மாணவர்களுக்கு நிதியளித்தது.[22][23] அவர் 2012 இல் வேந்தர் கௌரவ உதவித்தொகை என்ற நிதியத்தை நிறுவி கல்வியில் முன்னேறிய மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் வழங்கி வருகிறார்.[24]

டிசம்பர் 2008 இல், கலை மற்றும் கலாச்சாரத்திற்கான சர்வதேச அறக்கட்டளையின் பிரதிநிதியாக அவருக்கு மோனிசராபோனின் ராயல் ஆர்டரின் கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டது.[25]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 http://www.theaustralian.com.au/arts/review/haruhisa-handa-talks-opera-and-shinto-in-rare-interview/news-story/97fb026a10a663f3a6119150fd1aeb1b
  2. "Olympics-Father of blind golf pushing for Paralympic place". சிங்கப்பூர்: Reuters. June 29, 2012. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Qin, Sun (September 19, 2014). "在都厅观大薪能剧义演" [Charity Performance of the Tokyo Dai Takigi Noh]. Xinmin News (in Chinese). சாங்காய், China. Retrieved 2017-09-08.
  4. "駐日外国公館リスト アジア" [List of Embassies and Consulates-General in Japan Asia] (in Japanese). Ministry of Foreign Affairs of Japan. Retrieved 2017-09-08.
  5. "アカスリ半田劇場1" [Akasuri Handa Theater 1]. Sports Nippon (in Japanese). Tokyo. August 28, 2013.
  6. Sirō & Isozaki 1991.
  7. "アカスリ半田劇場2" [Akasuri Handa Theater 2]. Sports Nippon (in Japanese). Tokyo. September 11, 2013.
  8. "「アニメソングと予備校経営、 何でもボーダーレスになった経緯(いきさつ)」" [Cartoon Songs and Cram School Management: How Everything Became Borderless (Details)] (in Japanese). Tokyo: Misuzu Gakuen. Retrieved 2017-09-08.
  9. https://www.ed.ac.uk/news/2015/151104-hondegreejapanesebenefactor
  10. "Corpus Christi College Oxford – News" பரணிடப்பட்டது 2019-05-11 at the வந்தவழி இயந்திரம். Corpus Christi College, Oxford. Retrieved 2017-09-08.
  11. "SOAS Honorary Fellows:Haruhisa Handa" பரணிடப்பட்டது 2020-08-15 at the வந்தவழி இயந்திரம். SOAS, University of London. Retrieved 2017-09-08.
  12. "University announces honorary awards" பரணிடப்பட்டது 2017-09-08 at the வந்தவழி இயந்திரம். University of Gloucestershire. Retrieved 2017-09-08.
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-10-12. பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
  14. "欧米の要人招聘などの功績も 半田晴久・怪人物が疑惑と中傷に応える" [Entertaining the Greats of Europe: Haruhisa Handa / Mystery Man Responds to Doubts and Defamation]. THEMIS (in Japanese). Tokyo. 23: 84–85. January 1, 2014.
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-12. பார்க்கப்பட்ட நாள் 2019-11-30.
  16. Leibs, Andrew (December 2012). Encyclopedia of Sports & Recreation for People with Visual Impairments. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781623960421.
  17. Inken Prohl. Religiöse Innovationen: die Shintō-Organisation World Mate in Japan.
  18. http://www.phnompenhpost.com/lifestyle/provincial-surgical-hospital-saved
  19. "UC AND GUANGDONG UNIVERSITY SEEK ACADEMIC TIES". The Southsast Asia Weekly. The South East Asia Weekly. 2011-02-07. Retrieved 2017-09-08.
  20. "学術プロフィール" பரணிடப்பட்டது 2018-06-25 at the வந்தவழி இயந்திரம் [Academic Profile] (in Japanese). Japan: Haruhisa Handa. Retrieved 2017-09-08.
  21. Ismail Abdullahi, ed. (2009). Global Library and Information Science: A Textbook for Students and Educators. IFLA Publications. pp. 167–168.
  22. "Hun Sen-Handa Scholarships 2008". University of Cambodia. Retrieved 2013-12-22.
  23. "Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen-Haruhisa Handa National Scholarships 2009". The University of Cambodia. Retrieved 2017-09-08.
  24. "SCHOLARSHIP POLICY". The University of Cambodia. Retrieved 2017-09-08.
  25. "福祉、教育、スポーツ、学術、芸術などの公益活動" [Public activities such as social welfare, education, sports, academics, arts, etc.] (in Japanese). World Mate. Archived from the original on 2011-04-21. Retrieved 2017-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹருஹிசா_ஹண்டா&oldid=3860759" இலிருந்து மீள்விக்கப்பட்டது