ஹரோல்ட் கிம்பிளெட்

ஹரோல்ட் கிம்பிலிட் (Harold Gimblett, பிறப்பு: அக்டோபர் 19, 1914, இறப்பு: மார்ச்சு 30, 1978) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 368 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1936 - 1939 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஹரோல்ட் கிம்பிலிட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹரோல்ட் கிம்பிலிட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 290)சூன் 27 1936 எ. இந்தியா
கடைசித் தேர்வுசூன் 24 1939 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 368
ஓட்டங்கள் 129 23007
மட்டையாட்ட சராசரி 32.25 36.17
100கள்/50கள் 0/1 50/122
அதியுயர் ஓட்டம் 67* 310
வீசிய பந்துகள் 3949
வீழ்த்தல்கள் 41
பந்துவீச்சு சராசரி 51.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு –/– 4/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 247/1
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 31 2009

1982 ஆம் ஆண்டில் சோமர்செட் வரலாற்று அறிஞர் மற்றும் துடுப்பாட்ட எழுத்தாளரான டேவிட் புட் என்பவர் சாமர்செட்டின் மிகச் சிறந்த வீரர் ஹரோல்ட் கிம்பிலிட் எனத் தெரிவித்தார்.[1]

துவக்கத்தில் விரைவாக ஓட்டங்களை எடுப்பதின் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டார். இவர் 265 ஆறு ஓட்டங்களை எடுத்துள்ளார். இதனை துவக்க வீரர் ஒருவர் அடிப்பதில் நிச்சயம் சாதனையாக இருக்கும் என எரிக் ஹில் என்பவர் தெரிவித்தார். இவர் சாமர்செட் அணியின் துவக்க வீரரும் எழுத்தாளரும் ஆவார். ஹரோல்ட் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட இவர் விளையாடவில்லை. பின் மனநலப்பிரச்சினை காரணமாக இவர் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவர் 3 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 129 ஓட்டங்களை 32.25 எனும் சராசரியோடு எடுத்துள்ளார். அதில் அதிகப்டசமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 67*ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும் 368 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 23007 ஓட்டங்களையும் 41 இலக்குகளையும் கைப்பற்றியுள்ளார். அதில் 50 நூறுகளையும் 122 முறை ஐம்பது ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.அதிகபட்சமாக 310 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும் 10 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றியதே இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஹரோல்ட் கிம்பிளட் அக்டோபர் 19, 1914 இல் மேற்கு சாமர்செட்டில் உள்ள பிக்னலோரில் பிறந்தார்.இவர்கள் 15 ஆம் நூற்றாண்டு முதல் விவசாயம் செய்து வருகின்றனர். [2] இவர்களின் பெற்றோர்களின் மூன்று குழந்தைகளில் இவர் இளையோர் ஆவார். இவர் வில்லிடனில் உள்ள உள்ளூர்ப்பள்ளியில் இவர் பள்ளிப் படிப்பினைப் பயின்றார். பின்பு தேவன் எல்லைப் பகுதியில் உள்ள மேற்கு பக்லாந்துப் பள்ளியில் பயின்றார்.[3]

தேர்வுத் துடுப்பாட்டம்

தொகு
 
1943-08-02 இங்கிலாந்து அணி

1936 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூன் 27 இல் இலார்ட்சு மைதானத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்ட்டியில் இவர் அறிமுகமானார். இங்கிலாந்தின் துவக்க வீரரான ஜேக் லீ காயம் காரணமாக வெளியேற இவர் துவக்க வீரராக களமிறக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் கூறினார்.[4] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 11 ஓட்டங்களை எடுத்த இவர் அமர்சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 67 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 இலக்குகளில் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்ததாக ஓல்டு டிரஃபோடுவில் லங்காசயர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் முதல் ஆட்டப்பகுதியில் 93 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 160 ஓட்டங்களையும் எடுத்தார்.[5]

1939 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .சூன் 24 இல் இலார்ட்சு மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இங்கிலாந்தின் துவக்க வீரராக களமிறக்க இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 22 ஓட்டங்களை எடுத்த இவர் கேமரான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 20 ஓட்டங்கள் எடுத்துமார்ட்டின் தலே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 இலக்குகளில் வெற்றி பெற்றது. [6]


சான்றுகள்

தொகு
  1. Foot, p. 1.
  2. Foot, p. 41.
  3. Foot, pp. 43–48.
  4. "Somerset v Indians". www.cricketarchive.com. 9 May 1936. பார்க்கப்பட்ட நாள் 8 October 2009.
  5. "Lancashire v Somerset". www.cricketarchive.com. 16 May 1936. பார்க்கப்பட்ட நாள் 9 October 2009.
  6. "இறுதிப் போட்டி". www.cricketarchive.com. 16 May 1936. பார்க்கப்பட்ட நாள் 9 October 2009.

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரோல்ட்_கிம்பிளெட்&oldid=3581087" இலிருந்து மீள்விக்கப்பட்டது