ஹைபி ஈடன்
ஹைபி ஈடன் (Hibi Eden) (பிறப்பு: ஏப்ரல் 19, 1982) கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினருமாவார். எர்ணாகுளம் தொகுதியைச் சேர்ந்த நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த ஜார்ஜ் ஈடன் என்பவரின் மகனாவார்.
ஹைபி ஈடன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் எர்ணாகுளம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | கே. வி. தாமஸ், இந்திய தேசிய காங்கிரசு |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011–2019 | |
தொகுதி | எர்ணாகுளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 ஏப்ரல் 1983 எர்ணாகுளம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | அண்ணா லிண்டா |
பிள்ளைகள் | கிளாரா |
வாழிடம் | புது தில்லி / கொச்சி |
சுயசரிதை
தொகுஇவர், எர்ணாகுளம் மாவட்டத்திலிருந்து கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக 2011 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்திய தேசிய காங்கிரசின் தேசிய மாணவர் பிரிவின் தலைவராகவும் இவர் உள்ளார்.[2][3]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர், கேரளாவின் எர்ணாகுளம் மக்களை உருப்பினரான மறைந்த ஜார்ஜ் ஈடன் என்பவருக்குப் பிறந்தார்.[3] (2003இல் அவர் பதவியிலிருக்கும் போதே இறந்தார்.)[4][5] 19 ஏப்ரல் 1982 இல். இவர் சிறு வயதிலேயே தனது தாயை இழந்தார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இவர்கள் இருவரையும் இவரது அத்தை வளர்த்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர், மலையாளத் தொலைக்காட்சித் தொகுப்பாளரான அன்னா லிண்டா என்பவரை 2012 சனவரி 30 அன்று கலூர் புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில் 4 வருட காதலுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கிளாரா ஈடன் என்ற ஒரு மகள் 2012 நவம்பர் 27 அன்று பிறந்தார். மேலும் இவர், கத்தோலிக்க லத்தீன் சடங்கு வெராபோலி மறைமாவட்டம், எர்ணாகுளம் ஆகியவற்றின் பக்தியுள்ள உறுப்பினர் ஆவார்.
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர், தேவராவின் தூய இருதயக் கல்லூரியில் கேரள மாணவர் ஒன்றியத்தின் தலைமையிலான சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.[6] பின்னர் இவர் 2009 வரை நடைபெற்ற கேரள மாணவர் ஒன்றியத்தின் மாநிலக் குழுத் தலைவரானார். இந்தியாவின் தேசிய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். 2009 இந்திய பொதுத் தேர்தலுக்கான எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக நிற்க இவர் மிகவும் விரும்பினார்.
2011 கேரள சட்டமன்றத் தேர்தலில் 32,437 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர் எர்ணாகுளம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள சட்டமன்றத்தின் இளைய உறுப்பினரானார். 2016 சட்டமன்றத் தேர்தலில், எர்ணாகுளம் தொகுதியிலிருந்து கேரள சட்டப்பேரவை உறுப்பினராக இரண்டாவது முறையாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் [7] இவர், 21949 வாக்குகள் வித்தியாசத்தில் [8] வெற்றி பெற்றார். 2019 லோக்சபா தேர்தலில் இவர் மீண்டும் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். தனக்கு எதிராகப் போட்டியிட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிம் (எம்) வேட்பாளர் பி ராஜீவுக்கு எதிராக 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archive News". The Hindu.
- ↑ "Share/Stock Market News - Latest NSE, BSE, Business News, Stock/Share Tips, Sensex Nifty, Commodity, Global Market News & Analysis". Moneycontrol.
- ↑ 3.0 3.1 Basheer, K.P.M. (March 16, 2009). "Archbishop's letter draws criticism. Rooting for Hibi termed interference in the political affairs of a party". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107093259/http://www.hindu.com/2009/03/16/stories/2009031654280400.htm. பார்த்த நாள்: 17 March 2014.
- ↑ "George Eden an outstanding politician". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (Kochi). 29 July 2012. http://www.newindianexpress.com/cities/kochi/article578696.ece#.Uyc4OoWDmMU. பார்த்த நாள்: 17 March 2014.
- ↑ "Dr Sebastian Paul _ Ernakulam MP/More a journalist than a politician". 1 November 2009. Archived from the original on 2009-03-13. பார்க்கப்பட்ட நாள் 17 March 2014.
- ↑ "The Hindu : 'Netagiri' on the shelf?". www.thehindu.com. Archived from the original on 2003-03-24. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Eranakulam Candidates Kerala Assembly Election 2016 & Results". Zee News. Archived from the original on 24 May 2016. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
- ↑ "Ernakulam Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in.