ஹொன்னம்மன ஏரி

கர்நாடகாவில் உள்ள ஒரு பட்டணம்
(ஹோன்னமானா ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹொன்னம்மன கெரெ எனப்படும் ஹொன்னம்மன ஏரி (கன்னடம்: ಹೊನ್ನಮ್ಮನ ಕೆರೆ) கர்நாடகாவில் குடகிலுள்ள சோமவாரப்பேட்டை நகரிலிருந்து ஆறு (6) கி.மீ. தொலைவில் உள்ள சூலிமாலத்தே சிற்றூருக்கருகே இருக்கும் தொட்டமாலத்தேவில் இருக்கும் ஒரு ஏரியும் புனிதமான இடமுமாகும். இது குடகிலிருக்கும் மிகப்பெரிய ஏரியாகும்.[1] ஆண்டுக்கு ஒருமுறை, கவுரி ஹப்பா திருவிழாவின் போது, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது, மேலும் 'பாகினா'[2] எனப்படும் ஹொன்னம்மா தெய்வத்துக்குரித்தான படையல் இந்த ஏரிக்கு அளிக்கப்படுகிறது.[3]

ஹொன்னம்மன ஏரி
ஹொன்னம்மன கெரெ
நகர்
ஹொன்னம்மன ஏரி is located in கருநாடகம்
ஹொன்னம்மன ஏரி
ஹொன்னம்மன ஏரி
ஹொன்னம்மன ஏரி is located in இந்தியா
ஹொன்னம்மன ஏரி
ஹொன்னம்மன ஏரி
ஹொன்னம்மன ஏரி (இந்தியா)
ஆள்கூறுகள்:
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்குடகு
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

வரலாறு

தொகு

கெரெகே ஹாரா என்ற கதை ஹொன்னம்மன கெரெவை உருவாக்கியதிலிருந்து பெறப்பட்டது. தொன்மக்கதைப்படி, பெருவணிகர் ஒருவரின் கடைசி மருமகளான ஹொன்னம்மா, மக்கள் நலனுக்காக தனது உயிரை ஈந்ததன் மூலம் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவரைச் சிறப்பிக்க ஒரு கோவில் அமைக்கப்பட்டது, மேம்பட்ட வசதிகளை வழங்குவதற்காகப் பின்னர் அது புதுப்பிக்கப்பட்டது.[3]

நிலவெளி

தொகு

ஹொன்னம்மன கெரெ பல மலைகளாலும், முகடுகளாலும், காபித் தோட்டங்களாலும் சூழப்பட்டுள்ளது.

தங்குமிடங்கள்

தொகு

ஹொன்னம்மன கெரெவுக்கு அருகில் ஒரு சில தங்குமிடங்கள் உள்ளன. டிரோப்பிக்கல் ரெய்ன் என்ற தங்குமிடம் (பண்ணை) இந்த ஏரிக்கு ஒரு (1) கிமீ தொலைவில் உள்ளது.

காலநிலை

தொகு

ஹொன்னம்மன கெரெவின் வெப்பநிலை, குடகு மாவட்டத்தின் பிற பகுதிகளைப் போலவே ஆண்டு முழுவதும் 16 முதல் 27 °C அளவில் இருக்கின்றது.

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Deccan Herald - Honnammana Kere full". Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 18 August 2009.
  2. Valli, Pundreeka (2022-08-22). "Gowri Bagina Items, How to Prepare and How to Give". பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
  3. 3.0 3.1 "Heaps of broken images". Deccan Herald Spectrum. 26 November 2012. http://www.deccanherald.com/content/294534/heaps-broken-images.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொன்னம்மன_ஏரி&oldid=3510722" இலிருந்து மீள்விக்கப்பட்டது