1,2-இருகுளோரோபுரொப்பேன்

வேதியியல் கலவை

1,2-இருகுளோரோபுரொப்பேன் (1,2-Dichloropropane) என்பது C3H6Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்றதும் எளிதில் தீப்பற்றக்கூடியதுமான இச்சேர்மம் ஒரு குளோரோகார்பன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இனிய மணம் கொண்ட இச்சேர்மம், கரிம குளோரின் சேர்மமான எபிகுளோரோவைதரின் தயாரிக்கும்போது உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது.[4]

1,2-இருகுளோரோபுரொப்பேன்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-டைகுளோரோபுரொப்பேன்
வேறு பெயர்கள்
புரொப்பைலீன் இருகுளோரைடு
இனங்காட்டிகள்
78-87-5 Y
ChEMBL ChEMBL44641 Y
ChemSpider 6316 Y
InChI
  • InChI=1S/C3H6Cl2/c1-3(5)2-4/h3H,2H2,1H3 Y
    Key: KNKRKFALVUDBJE-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H6Cl2/c1-3(5)2-4/h3H,2H2,1H3
    Key: KNKRKFALVUDBJE-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19034 N
பப்கெம் 6564
  • ClCC(Cl)C
UNII RRZ023OFWL Y
பண்புகள்
C3H6Cl2
வாய்ப்பாட்டு எடை 112.98 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் குளோரோஃபார்ம் நெடி
அடர்த்தி 1.156 கி/செ.மீ3
உருகுநிலை −100 °C (−148 °F; 173 K)
கொதிநிலை 95 முதல் 96 °C (203 முதல் 205 °F; 368 முதல் 369 K)
0.26 கி/100 மி.லி 20 °செ இல்
ஆவியமுக்கம் 40 மி.மீ.பாதரசம் (20°செ)[2]
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R11 R20/22
S-சொற்றொடர்கள் S16 S24
தீப்பற்றும் வெப்பநிலை 16 °C (61 °F; 289 K)
Autoignition
temperature
557 °C (1,035 °F; 830 K)
வெடிபொருள் வரம்புகள் 3.4%-14.5%[2]
Lethal dose or concentration (LD, LC):
860 mg/kg (mouse, oral)
1947 mg/kg (rat, oral)
2000 mg/kg (guinea pig, oral)[3]
2000 ppm (rat, 4 hr)
720 ppm (mouse, 10 hr)
2980 ppm (rat, 8 hr)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 75 ppm (350 mg/m3)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[2]
உடனடி அபாயம்
Ca [400 ppm][2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பயன்கள்

தொகு

பெர்குளொரோயெத்திலீன் மற்றும் குளோரினேற்றம் பெற்ற[4] பிற வேதிப்பொருட்கள் தயாரிக்கும் போது இடைநிலைப் பொருளாகவும் 1,2-இருகுளோரோபுரொப்பேன் கிடைக்கிறது. மண்புகை நஞ்சாகவும் வேதியியல் இடைநிலையாகவும் இது ஒருகாலத்தில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது தொழிலகக் கரைப்பான், சாயம் நீக்கி, மெருகுப் பூச்சு மற்றும் மரப்பூச்சு நீக்கி போன்ற பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. தற்பொழுது இவற்றில் சில பயன்கள் வழக்கொழிந்துவிட்டன.[5]

புற்றுநோய் ஊக்கி

தொகு

யப்பானின் அச்சிடும் நிறுவன ஊழியர்கள் மத்தியில், காணப்பட்ட பித்த நாளப்புற்றுநோயை தொடர்ந்து ஆராய்ந்த யப்பான் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலன் அமைச்சகம் மார்ச்சு 2013 இல் ஒர் அறிக்கையை வெளியிட்டது. அச்சிடும்நிறுவனத் தொழிலாளர்கள் பயன்படுத்திய தூய்மையாக்கிகளில் 1,2-இருகுளோரோபுரொப்பேன் கலந்திருக்கிறது. 1,2-இருகுளோரோபுரொப்பேனை ஒரு புற்றுநோய் ஊக்கி என்பதற்கு இவையே நியாயமான ஆதாரமாகும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது[6][7]

கல்லீரல் மற்றும் மடிச்சுரப்பிகளில்[8] கட்டி வளர்ச்சிக்கும் 1,2-இருகுளோரோபுரொப்பேன் காரணமகிறதென விலங்குகள் குறித்த ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் காட்டுகின்றன. மேலும், விலங்குகள் குறித்த தொடர் ஆய்வுகளின் நச்சுத்தன்மை சுவாசத் தரவுகளும் இதை உறுதிப்படுத்துவதாக தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம் தெரிவிக்கிறது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1,2-Dichloropropane at Sigma-Aldrich
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0534". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 "Propylene dichloride". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. 4.0 4.1 Manfred Rossberg, Wilhelm Lendle, Gerhard Pfleiderer, Adolf Tögel, Eberhard-Ludwig Dreher, Ernst Langer, Heinz Rassaerts, Peter Kleinschmidt, Heinz Strack, Richard Cook, Uwe Beck, Karl-August Lipper, Theodore R. Torkelson, Eckhard Löser, Klaus K. Beutel, Trevor Mann "Chlorinated Hydrocarbons" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a06_233.pub2.
  5. ToxFAQs for 1,2-Dichloropropane
  6. Report by the Japanese Ministry of Health, Labour and Welfare
  7. Article in the Yomiuri Shinbun
  8. CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards
  9. Documentation for Immediately Dangerous To Life or Health Concentrations (IDLHs)
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-இருகுளோரோபுரொப்பேன்&oldid=4058650" இலிருந்து மீள்விக்கப்பட்டது