1729 (எண்)
எண்
ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பது அல்லது இராமானுச எண் அல்லது 1729 (One Thousand Seven Hundred and Twenty-Nine அல்லது Ramanujan Number) என்பது தமிழ் எண்களில் ௧௭௨௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] 1729 என்பது 1728 இற்கும் 1730இற்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பது | |||
வரிசை | 1729ஆவது ஆயிரத்து எழுநூற்று இருபத்தொன்பதாவது | |||
காரணியாக்கல் | 7 · 13 · 19 | |||
காரணிகள் | 1, 7, 13, 19, 91, 133, 247, 1729 | |||
ரோமன் | MDCCXXIX | |||
கிரேக்க முன்குறி | ,αψκθ | |||
இரும எண் | 110110000012 | |||
முன்ம எண் | 21010013 | |||
நான்ம எண் | 1230014 | |||
ஐம்ம எண் | 234045 | |||
அறும எண் | 120016 | |||
எண்ணெண் | 33018 | |||
பன்னிருமம் | 100112 | |||
பதினறுமம் | 6C116 | |||
இருபதின்மம் | 46920 | |||
36ம்ம எண் | 1C136 |
சீ. எச்சு. ஆரிடி சீனிவாச இராமானுசன் நோய்வாய்ப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்க்கச் சென்றபோது தனது வாகன இலக்கமான 1729 என்பது சுவாரசியமற்ற இலக்கம் என்றார்.[2] உடனே, சீனிவாச இராமானுசன் அவ்வெண் சுவாரசியமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார்.[3]
அவ்விரு வழிகளும் பின்வருமாறு:-
காரணிகள்
தொகு1729இன் நேர்க் காரணிகள் 1, 7, 13, 19, 91, 133, 247, 1729 என்பனவாகும்.[5]
இயல்புகள்
தொகு- 1729 ஓர் ஒற்றை எண்ணாகும்.
- 1729 என்பது இரண்டு நேர்க் கனங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகவும் சிறிய எண் ஆகும்.
- 1729 ஒரு கார்மைக்கேல் எண்ணாகும்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஹார்டி-இராமானுசன் எண் (ஆங்கில மொழியில்)
- ↑ 1729 (எண்) (ஆங்கில மொழியில்)
- ↑ ஜி. எச். ஹார்டியின் மேற்கோள்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஹார்டி-இராமானுஜன் எண் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2013-05-28. பார்க்கப்பட்ட நாள் 2012-04-03. ஹார்டி-இராமானுஜன் எண் (ஆங்கில மொழியில்)]
- ↑ ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
- ↑ வொல்பிராம் அல்பா (ஆங்கில மொழியில்)