1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி
1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி (Ceylonese coup d'état attempt, அல்லது Colonels coup) என்பது இலங்கையில் 1962 சனவரி 27 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு தோல்வியடைந்த இராணுவப் புரட்சியைக் குறிக்கும். கிறித்தவ உயர்குடி மூத்த இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வன்முறை மூலம் கவிழ்க்கத் திட்டமிட்டனர்.[1] 1962 சனவரி 27 இரவு புரட்சி முன்னெடுக்கப்படும் முன்னரேயே முக்கிய கிளர்ச்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.[2][3][4][5]
பின்னணி
தொகுஇலங்கை பிரித்தானியாவிடம் இருந்து 1948 ஆம் ஆண்டில் விடுதலை பெற்று "இலங்கை மேலாட்சி" என இலங்கை அழைக்கப்பட்டது. இது உள்ளூர் மக்களின் சுயாட்சிக்கு வழிவகுத்தது. ஆனாலும், நாட்டின் முக்கிய அரசியல், அரச, மற்றும் இராணுவப் பதவிகள் 1948 இற்கு முன்னர் பிரித்தானியருக்கு விசுவாசமாகப் பணியாற்றிய இலங்கை கிறித்தவ மேல்குடித் தலைவர்களிடம் பிரித்தானியரால் கைமாறப்பட்டது.[சான்று தேவை]
1956 ஆம் ஆண்டில் ஆங்கிலிக்கக் கிறித்தவத்தில் இருந்து பௌத்தத்திற்கு மதம் மாறிய சாலமன் பண்டாரநாயக்கா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். நாட்டின் பெரும்பான்மை பௌத்த, சிங்கள மக்களின் ஆதரவுடன் இவர் தேசியவாத இயக்கத்தைப் பரப்ப்னார். கிறித்தவ சிறுபான்மையினரை விட இவர்கள் தாம் சமுதாய அடிநிலையில் இருப்பதாக நம்பினர். தேர்தல் வெற்றியை அடுத்து, பண்டாரநாயக்கா அரசின் அனைத்துத் துறைகளிலும் தீவிர சிங்களமயமாக்கலை அறிமுகப்படுத்தினார். சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் படுத்தினார்.[6] இலங்கையில் இருந்த கடைசிப் பிரித்தானிய படைத்தளத்தையும் மூடினார்.
இராணுவ உயர் பதவிகளில் ஐந்தில் மூன்று பங்கு கிறித்தவர்களும், ஐந்தில் ஒன்று தமிழரும், ஐந்தில் ஒன்று பரங்கியரும் இருந்த நிலையை பண்டாரநாயக்கா மாற்றி அமைத்தார். பௌத்த சிங்கள அதிகாரிகளை நியமித்தார். மூன்று கிறித்தவ உயர் அதிகாரிகள் பணியில் இருந்த போதிலும், ஒரு பௌத்தரை காவல்துறை மா அதிகாரியாக நியமித்தார்.[6]
1961 அளவில் தாம் திட்டமிட்டு ஒடுக்கப்படுவதாக உயர்குடி கிறித்தவர்கள் மனதில் மனக்கசப்பு வளர்ந்தது. இலங்கை அரசு சிறுபான்மையினரின் கத்தோலிக்கப் பாடசாலைகளை அரசுமயப்படுத்தினர். அதே வேளையில் சில உயர்குடி ஆங்கிலிக்கப் பாடசாலைகளை அவர்கள் விட்டு வைத்தனர்.[7][8][9][10] இந்நிலையில் பல கிறித்தவர்கள் இலங்கையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பெரும்பாலானோர் ஐக்கிய இராச்சியம் நோக்கிப் புலம் பெயர்ந்தனர். நாட்டின் பொருளாதாரம் இதனால் பாதிப்படைந்தது. விலைவாசிகள், வேலையின்மை போன்றவை ஏறத்தொடங்கின. இதே வேளையில் பாக்கித்தானில் இராணுவத் தலைவர் அயூப் கான் நடத்திய இராணுவப் புரட்சி உள்ளூரில் சிலருக்கு ஊக்கம் கொடுத்தது.[11]
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி
தொகுஇராணுவப் புரட்சிக்கு "வன்பிடி நடவடிக்கை" (Operation Holdfast) எனப் பெயரிடப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்புக்கான நாடாளுமன்றச் செயலர் (பீலிக்சு டயசு பண்டாரநாயக்கா), இராணுவத் தளபதி, கடற்படையின் பதில் தளபதி, காவல்துறை உயர் அதிகாரி, புலனாய்வுத்துறை உயர் அதிகாரி (ஜோன் ஆட்டிகலை) ஆகியோரைக் கைது செய்து இராணுவத் தலைமையகத்தில் சிறை வைப்பதே நோக்கமாக இருந்தது.[12] ஆனாலும், புரட்சிக்குத் திட்டமிட்டவர்கள் “ஒரு துளி இரத்தமும் சிந்தாமல்" புரட்சியை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தனர்.[13]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "How the British press saw Mrs Bandaranaike". சண்டே டைம்சு. அக்டோபர் 22, 2000. http://sundaytimes.lk/001022/plus7.html.
- ↑ "The Kataragama factor and the 1962 coup". சண்டே டைம்சு. ஆகத்து 13, 2000. http://sundaytimes.lk/000813/news3.html.
- ↑ Perera, K.K.S. (January 29, 2012). "Two Prime Ministers and the Governor General – did they have a role?". The Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 5 September 2015.
- ↑ J R Jayawardene of Sri Lanka. A Political Biography Volume II: From 1956 to His Retirement by de Silva, K M; Wriggins, Howard, pp.114-116 (Leo Cooper) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850524307
- ↑ Balachandran, P. K. (1 சூன் 2006). "Significance of the abortive 1962 military coup". டெய்லி நியூசு. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2015.
- ↑ 6.0 6.1 "Bandaranaikes: the bane of Lanka". சண்டே லீடர். நவம்பர் 9, 2003 இம் மூலத்தில் இருந்து 2016-10-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161009192527/http://www.thesundayleader.lk/archive/20031109/politics-1.htm.
- ↑ Catholics Protest Ceylon Plan To Take Over Church Schools, The Blade (Toledo Blade), Accessed 05-09-2015
- ↑ Coup Theories and Officers' Motives: Sri Lanka in Comparative Perspective, Donald L. Horowitz, p.133 (Princeton Legacy Library) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691615608
- ↑ When the 'nobodies' made their mark Sunday Times Retrieved 05 October 2015
- ↑ Amerasekera, Dr. Nihal D. (4 January 2014). "Cedric James Oorloff - A tribute to a great educationist of the 20th Century". The Island இம் மூலத்தில் இருந்து 11 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141211053316/http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95323. பார்த்த நாள்: 3 December 2014.
- ↑ "Delayed Revolt". Time. மார்ச் 3, 1961 இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023205140/http://www.time.com/time/magazine/article/0,9171,897670,00.html?promoid=googlep. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ *"Looking back on operation `Holdfast'". சண்டே லீடர். Archived from the original on 13 சூன் 2002. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
- ↑ “Operation holdfast”: The attempted coup d’etat of Jan 1962 பரணிடப்பட்டது 2016-05-28 at the வந்தவழி இயந்திரம் by D.B.S. Jeyaraj, Accessed 05-09-2015
வெளி இணைப்புகள்
தொகு- Significance of the abortive 1962 military coup பரணிடப்பட்டது 2008-04-28 at the வந்தவழி இயந்திரம்
- Memoirs of Sirima R.D. Bandaranaike, Quelling the 1962 Coup : Braved it all to save democracy பரணிடப்பட்டது 2013-02-21 at Archive.today
- THE QUEEN v. பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்
- He stood by the country when democracy was in peril, 18th death anniversary of the 7th post-independence IGP ~ Stanley Senanayake
- Coup d'etat of 1962 and Police rugby
- Coup of 1962: an inside story, by former diplomat T.D.S.A. Dissanayaka, son of C.C. "Jungle" Dissanayake பரணிடப்பட்டது 2011-06-05 at the வந்தவழி இயந்திரம்
- Conspiracies to overthrow Government - I: பரணிடப்பட்டது 2010-02-15 at the வந்தவழி இயந்திரம்
- Conspiracies to overthrow Government - II பரணிடப்பட்டது 2010-02-17 at the வந்தவழி இயந்திரம்
- Coup of 1962 in Sinhala பரணிடப்பட்டது 2008-10-12 at the வந்தவழி இயந்திரம்