1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்

3-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்

1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1965; ஆங்கிலம்: 1965 Southeast Asian Peninsular Games) என்பது 3-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் ஆகும்.[1]

3-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
நடத்தும் நகரம்கோலாலம்பூர், மலேசியா
பங்கேற்கும் நாடுகள்7
துவக்க விழா14 டிசம்பர் 1965
நிறைவு விழா21 டிசம்பர் 1965
அலுவல்முறை துவக்கம்இஸ்மாயில் நசிருதீன்
யாங் டி பெர்துவான் அகோங் of மலேசியா
Ceremony venueமெர்டேகா அரங்கம், கோலாலம்பூர், மலேசியா
1961 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் 1967 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்  >

சியாப் விளையாட்டுக் கூட்டமைப்பால் (SEAP Games Federation) உருவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி. 1965 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் மூன்றாவது விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.

இந்த மூன்றாவது விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வு, மலேசியா கோலாலம்பூர் மாநகரில் 1965 டிசம்பர் 14-ஆம் தேதி முதல் 1965 டிசம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்தப் போட்டொயில் 14 வகையான விளையாட்டுகள் இடம்பெற்றன.

இந்த மூன்றாவது விளையாட்டு போட்டி, 1965-ஆம் ஆன்டில், லாவோஸ் நாட்டினால் நடத்தப்பட இருந்தது. நிதிச் சிக்கல்களினால் நடத்த இயலவில்லை. அதன் பின்னர் அந்தப் பொறுப்பை மலேசியா ஏற்றுக் கொண்டது.

கோலாலம்பூர், மெர்டேகா அரங்கத்தில் (Stadium Merdeka); மலேசியாவின் மாமன்னர் இஸ்மாயில் நசிருதீன் (Ismail Nasiruddin), இந்த விளையாட்டு நிகழ்வை அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இறுதிப் பதக்கப் பட்டியலில் தாய்லாந்து; அதைத் தொடர்ந்து மலேசியா; சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முன்னிலை வகித்தன.[1]

விளையாட்டுகள் தொகு

பங்கேற்பு நாடுகள் தொகு

விளையாட்டு தொகு

பதக்க அட்டவணை தொகு

      போட்டி நடத்திய நாடு (மலேசியா)

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   THA 38 33 35 106
2   MAS 33 36 29 98
3   SIN 26 23 27 76
4   CAM 15 19 17 51
5   MYA 18 14 16 48
6   VIE 5 7 7 19
7   LAO 0 0 2 2

மேற்கோள் தொகு

  1. 1.0 1.1 "OCA » Kuala Lumpur 1965 - The 3rd Southeast Asian Peninsular Games were held in Kuala Lumpur, Malaysia from 14 September - 21 September 1965". ocasia.org. பார்க்கப்பட்ட நாள் 20 March 2022.

வெளி இணைப்புகள் தொகு