1967 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
1967 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1967; ஆங்கிலம்: 1967 Southeast Asian Peninsular Games) என்பது 4-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் ஆகும்.
நடத்தும் நகரம் | பாங்காக், தாய்லாந்து | ||
---|---|---|---|
பங்கேற்கும் நாடுகள் | 6 | ||
துவக்க விழா | 9 டிசம்பர் 1967 | ||
நிறைவு விழா | 16 டிசம்பர் 1967 | ||
அலுவல்முறை துவக்கம் | பூமிபோல் அதுல்யதேஜ் தாய்லாந்து மாமன்னர் | ||
Ceremony venue | சுபச்சலசாய் அரங்கம், பாங்காக், தாய்லாந்து | ||
|
சியாப் விளையாட்டுக் கூட்டமைப்பால் (SEAP Games Federation) உருவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி. 1967 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் நான்காவது விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.
தாய்லாந்து, பாங்காக் நகரில் 1967 டிசம்பர் 9 முதல் டிசம்பர் 16, 16 விளையாட்டுகளுடன் நடைபெற்றது. இந்தப் போட்டிகளைத் தாய்லாந்து நடத்துவது, இதுவே இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 1959-ஆம் ஆண்டில் தொடக்க ஆட்டங்களை முதல் முறையாக நடத்தியது.
சுபச்சலசாய் அரங்கத்தில் (Suphachalasai Stadium) தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (Bhumibol Adulyadej) விளையாட்டுகளைத் திறந்து வைத்தார். இறுதிப் பதக்கப் பட்டியலில் தாய்லாந்து; சிங்கப்பூர்; மலேசியா ஆகிய நாடுகள் முன்னிலை வகித்தன.
விளையாட்டுகள்
தொகுபங்கேற்பு நாடுகள்
தொகு- மியான்மர்
- லாவோஸ்
- மலேசியா
- சிங்கப்பூர்
- தெற்கு வியட்நாம்
- தாய்லாந்து (புரவலர்)
விளையாட்டு
தொகு- நீச்சல்
- தடகளம்
- இறகுப்பந்தாட்டம்
- கூடைப்பந்து
- குத்துச்சண்டை
- மிதிவண்டி ஓட்டப்பந்தயம்
- கால்பந்து
- ஜுடோ
- அஞ்சல்பந்தாட்டம்
- குறி பார்த்துச் சுடுதல்
- சேப்பாக் தக்ராவ்
- படகோட்டம்
- மேசைப்பந்தாட்டம்
- டென்னிசு
- கைப்பந்தாட்டம்
- பாரம் தூக்குதல்
பதக்க அட்டவணை
தொகுபோட்டி நடத்திய நாடு (தாய்லாந்து)
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | தாய்லாந்து | 77 | 48 | 47 | 172 |
2 | சிங்கப்பூர் | 28 | 31 | 28 | 87 |
3 | மலேசியா | 23 | 29 | 43 | 95 |
4 | மியான்மர் | 11 | 26 | 32 | 69 |
5 | வியட்நாம் | 6 | 10 | 17 | 33 |
6 | லாவோஸ் | 0 | 0 | 3 | 3 |