2006–07 தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தல்
2006–07 தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தல் (Tamil Nadu assembly by-election, 2006-07) - இந்தியாவில் தமிழ்நாட்டில் இரண்டு மாநில சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இரண்டு தனித்தனி கட்டங்களில் நடைபெற்றது. மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு 2006 அக்டோபர் 11 ம் தேதி தேர்தல் நடைபெற்றது, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு ஜூன் 26, 2007 அன்று நடைபெற்றது.
| |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இந்த இடைத்தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும். மற்றும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய தேசிய காங்கிரசுக்கு வெற்றியைக் கொடுத்தது. 2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டாணிக் கட்சிகள் ஜனநாயக முற்போக்குக்கூட்டணியை விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், மதுரை தொகுதியில் அனைத்து தொகுதிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தி.மு.க வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது..
கூட்டணி முடிவு
தொகு2007 ல் நடைபெற்ற இரண்டாவது இடைத் தேர்தல் முடிவுகள் கட்சிகளின் கூட்டணிகளில் பிரதிபலித்தது.
தே.மு.கூ | இடங்கள் | அ.இ.அ.தி.மு.க+ | இடங்கள் | மற்றவை | இடங்கள் |
---|---|---|---|---|---|
தி.மு.க | 96 | அ.இ.அ.தி.மு.க | 60 (-1) | தேமுதிக | 1 |
இதேகா | 34 (+1) | மதிமுக | 6 | சுயேச்சை | 1 |
பாமக | 18 | விசிக | 2 | ||
சிபிஐ(எம்) | 9 | ||||
சிபிஐ | 6 | ||||
மொத்தம் (2007) | 164 | மொத்தம் (2007) | 69 | மொத்தம் (2007) | 2 |
மொத்தம் (2006) | 163 | மொத்தம் (2006) | 69 | மொத்தம் (2006) | 2 |
முதல் தேர்தல்
தொகுதிராவிட முன்னேற்ற கழக அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த தி.மு.க.வின் பி. டி. ஆர். பழனிவேல் ராஜனின் மரணத்தின் காரணமாக இந்தத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 2006 அக்டோபர் 11 ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இரண்டாவது இடைத்தேர்தல்
தொகுஅ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர், எஸ். வி. சண்முகம் மரணத்தின் காரணமாக இந்தத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜூன் 26, 2007 அன்று நடைபெற்றது.