2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்

sunami
(2011 செண்டை நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2011 செண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் (சப்பானியம்: 東北地方太平洋沖地震 ; ஒலிப்பு: டோஹுக்கு ச்சிஹோ தைஹெயோ-ஒகி ஜிஷின் - டோஹுக்கு மண்டல பசிபிக் பெருங்கடல் கரையோர நிலநடுக்கம்)[2] ஆனது சப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட ஓர் 8.9 – 9 என்ற அளவிலான எண்மதிப்பு கொண்ட நிலநடுக்கமாகும். சப்பானிய சீர் நேரம் 14:46 (05:46 ஒ. ச. நே) மணிக்கு வெள்ளிக்கிழமை, மார்ச்சு 11,2011 அன்று[3][4][5] ஏற்பட்ட இந்த புவியதிர்வு 10 மீட்டர் (33 அடி) அளவிலான ஆழிப்பேரலைகளைத் தோற்றுவித்தது.[6] இது சப்பான் வானிலை அமைப்பின் நிலநடுக்க அளவுகோலில் 7ஆகப் பதிவானது. மேலும் சப்பான் வானிலை அமைப்பின் ஆழிப்பேரலை எச்சரிக்கையில் 8.8 என்று குறிக்கப்பட்டிருந்தது. நிலநடுக்க மையமானது ஒசிகா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 130 கிலோமீட்டர்கள் (81 mi) தொலைவில் நடுக்க மையம் 32 km (20 mi) ஆழத்தில் இருந்தது.[7][8]

2011 செண்டாய் நிலநடுக்கம்
செண்டாய் is located in யப்பான்
செண்டாய்
செண்டாய்
நாள்மார்ச் 11, 2011
தொடக்க நேரம்05:46:23 ஒசநே
(14:46 சப்பான் திட்ட நேரம்)
நிலநடுக்க அளவு8.9
ஆழம்24 கி.மீ.
நிலநடுக்க மையம்38°19′19″N 142°22′08″E / 38.322°N 142.369°E / 38.322; 142.369
வகைநிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட ஆழிப்பேரலை
பாதிக்கப்பட்ட பகுதிகள்சப்பான்
மொத்த அழிவுதெரியவில்லை
ஆழிப்பேரலைஆம்
நிலச்சரிவுகள்ஆம்
பின்னதிர்வுகள்குறைந்தது 517 (32க்கும் மேற்பட்டவை 6.0 Mwக்கும் மேலானவை)
உயிரிழப்புகள்10,489 பேர் இறப்பு, 2,777 காயம்பட்டோர், 16,621 பேரைக் காணவில்லை,[1]

இதனால் ஏற்பட்ட ஆழிப்பேரலையானது சப்பானின் பசிபிக் கடற்கரை முழுவதையும் மேலும் 20 நாடுகளையும் பாதிப்பிற்குள்ளாக்கியது. இதில் வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையும் தென் அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையும் அடங்கும்.[9][10][11]

சப்பான் தேசிய காவல்துறை ஆனது 2,722 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.[12] நிலநடுக்கமும் அதை அடுத்து நிகழ்ந்த ஆழிப்பேரலையும் சப்பானில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது; சாலைகள்,இருப்புப் பாதைகள் முற்றிலும் சிதைந்ததுடன் பல இடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. ஓர் அணையும் உடைந்துள்ளது. வடக்கு சப்பானில் உள்ள 4.4 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் இன்றியும் 1.4 மில்லியன் வீடுகளுக்கு குடிநீர் இன்றியும் போயிற்று.[13] பல மின்னாக்கிகள் இயக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டன. மூன்று அணுஉலைகள் பகுதியாக உருகின.[14][15] இதனால் கதிரியக்க அபாயம் பெருகி பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளோர் இடம் பெயர்க்கப்பட்டதுடன்[16] அவசரநிலை அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பாதிக்கப்பட்ட மூன்று அணுஉலைகளிலும் வேதிப்பொருள் வெடிப்புகள் நிகழ்ந்து அவற்றின் கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. உள்ளே அணுக்கரு அடங்கிய கலன்களின் பாதுகாப்பும் குறைந்து கதிரியக்கப் பொருள்கள் வெளிவரத் தொடங்கின[13][17][18]. புகுசிமா I அணுஉலையின் 20 கி.மீ சுற்றிலுள்ள மக்களும் ஃபுகுசிமா II அணுஉலையின் 10 கி.மீ சுற்றிலுள்ள மக்களும் இடம் பெயர்க்கப்பட்டனர்.

இந்த இயற்கைப் பேரழவினால் ஏற்பட்ட இழப்பு $ 14.5 பில்லியன் முதல் $ 34.6 பில்லியனாக இருக்கலாம் என காப்பீட்டாளர்கள் கருதுகின்றனர்.[19] கிரெடிட் சுவிசின் சப்பானிய முதன்மை பொருளியலாளர் இரோமிசி சிரகாவா தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பொன்றில் மதிப்பிடப்படும் பொருளாதார சேதம் ஏறத்தாழ $171–183 பில்லியன்கள் என்று கூறியுள்ளார்.[20] சப்பான் வங்கி (The Bank of Japan) மொத்தமாக ¥15 டிரில்லியன் ($183 பில்லியன்) பணத்தை பங்குசந்தை சரிவுகளிலிருந்து காப்பதற்காக 14 மார்ச்சு 2011 அன்று வங்கியமைப்பில் விட்டுள்ளது [20].

டோஹொகு நிலநடுக்கத்தின் மதிப்பிடப்பட்டுள்ள திறனளவின்படி இது சப்பானில் இதுவரை பதிவாகியுள்ள நிலநடுக்கங்களிலேயே மிக வலிமையானதொன்றாகும்; உலக வரலாற்றில் 1900 ஆம் ஆண்டு அளவிடத்தொடங்கிய பிறகு ஏற்பட்ட நான்காவது மிகவலிய நிலநடுக்கமாகும். [6][21][22][23] சப்பானிய பிரதமர் நவோடோ கான் "கடந்த 65 ஆண்டுகளாக இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சப்பான் சந்தித்துள்ள மிகக்கடுமையான மற்றும் கடினமான மிகப்பெரும் இடர் இதுவே" எனக் கூறியுள்ளார்.[24] இந்த நிலநடுக்கத்தினால் ஒன்சூ தீவு 2.4மீ கிழக்கில் நகர்ந்துள்ளதாகவும் புவியின் அச்சு சுமார் 10 செ.மீ நகர்ந்துள்ளதாகவும் மதிப்பிடப்படுகிறது.[25]

ஆழிப்பேரலை

தொகு

இது சப்பான் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமும்[6] உலக வரலாற்றில் ஏழாவது பெரிய நிலநடுக்கமும் ஆகும்.[26] ஜப்பானில் பதிவுகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஜப்பானின் வட கிழக்கு கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரமுடைய ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. NHK TV, March 11, 2011
  2. 気象庁 Japan Meteorological Agency. "平成23年3月11日14時46分頃の三陸沖の地震について(第2報) 気象庁 | 平成23年報道発表資料" (in Japanese). JP: JMA. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "USGS Updates Magnitude of Japan's 2011 Tohoku Earthquake to 9.0". United States Geological Survey (USGS). 14 March 2011. Archived from the original on 15 மார்ச்சு 2011. பார்க்கப்பட்ட நாள் 18 March 2011.
  4. Reilly, Michael (11 March 2011<!- – 17:22 GMT -->). "Japan's quake updated to magnitude 9.0". New Scientist. http://www.newscientist.com/blogs/shortsharpscience/2011/03/powerful-japan-quake-sparks-ts.html. பார்த்த நாள்: 11 March 2011. 
  5. "Tsunami warning center raises magnitude of Japan quake to 9.1". US: Honolulu Star-Advertiser. Archived from the original on 22 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
  6. 6.0 6.1 6.2 "Magnitude 8.9 – NEAR THE EAST COAST OF HONSHU, JAPAN 2011 March 11 05:46:23 UTC". United States Geological Survey (USGS). Archived from the original on 2 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
  7. "Séisme et tsunami dévastateurs: plus de 1000 morts et disparus au Japon [Devastating quake and tsunami: more than 1,000 deaths and many more missing in Japan]" (in French). Le Parisien. 11 March 2011 இம் மூலத்தில் இருந்து 15 மார்ச்சு 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110315023314/http://www.leparisien.fr/tsunami-pacifique/seisme-et-tsunami-devastateurs-plus-de-1000-morts-et-disparus-au-japon-11-03-2011-1352998.php. பார்த்த நாள்: 12 March 2011. 
  8. "Tsunami hits north-eastern Japan after massive quake". BBC News (UK). 11 March 2011. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12709598. பார்த்த நாள்: 11 March 2011. 
  9. "Tsunami bulletin number 3". Pacific Tsunami Warning Center/NOAA/NWS. 11 March 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
  10. Wire Staff (11 March 2011). "Tsunami warnings issued for at least 20 countries after quake". CNN. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
  11. "PTWC warnings complete list". பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
  12. "Damage Situation and Police Countermeasures associated with 2011Tohoku district – off the Pacific Ocean Earthquake". Japanese National Police Agency. 15 March 2011, 15:30 JST. http://www.npa.go.jp/archive/keibi/biki/higaijokyo_e.pdf பரணிடப்பட்டது 2017-06-23 at the வந்தவழி இயந்திரம். Retrieved 15 March 2011.
  13. 13.0 13.1 "World English". NHK. 12 March 2011. பார்க்கப்பட்ட நாள் 12 March 2011.
  14. "2011/03/13 01:04 – Meltdown Caused Nuke Plant Explosion: Safety Body". E.nikkei.com. Archived from the original on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2011-03-13.
  15. "Report: 2nd Japan nuclear meltdown likely under way - World news - Asia-Pacific - msnbc.com". MSNBC. Archived from the original on 2011-03-14. பார்க்கப்பட்ட நாள் 2011-03-13.
  16. "Official: 2 Japanese plants struggling to cool radioactive material". CNN. 11 March 2001 இம் மூலத்தில் இருந்து 1 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121101044751/http://www.cnn.com/2011/WORLD/asiapcf/03/11/japan.nuclear/. பார்த்த நாள்: 12 March 2011. 
  17. Wire Staff. "Report: Explosion at Japanese nuclear plant". World. CNN. பார்க்கப்பட்ட நாள் 12 March 2011.
  18. "Huge blast at Japan nuclear power plant (with video of explosion)". BBC News. 12 March 2011. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12720219. பார்த்த நாள்: 12 March 2011. 
  19. Molly Hennessy-Fiske (13 March 2011). "Japan earthquake: Insurance cost for quake alone pegged at $35 billion, AIR says". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011.
  20. 20.0 20.1 Sanskar Shrivastava (14 March 2011). "Life in Japan stuck, Quake kills 10,000; Economy falling down". The World Reporter. பார்க்கப்பட்ட நாள் 14 March 2011.
  21. "New USGS number puts Japan quake at 4th largest". CBS News. Associated Press. 14 March 2011 இம் மூலத்தில் இருந்து 4 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5xgjFTgf4?url=http://www.cbsnews.com/stories/2011/03/14/501364/main20043126.shtml. பார்த்த நாள்: 15 March 2011. 
  22. "8.9 Earthquake in Japan, Tsunami Warning to Russia, Taiwan and South East Asia". 11 March 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011.
  23. "Japan quake – 7th largest in recorded history". 11 March 2011. Archived from the original on 12 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  24. "Japanese PM: 'Toughest' crisis since World War II publisher=CNN". World. பார்க்கப்பட்ட நாள் 13 March 2011. {{cite web}}: Missing pipe in: |title= (help)
  25. "Quake shifted Japan by over two meters". Deutsche Welle. March 14, 2011. http://www.dw-world.de/dw/article/0,,14909967,00.html. பார்த்த நாள்: March 14, 2011. 
  26. "Japan quake – 7th largest in recorded history". 11 March 2011. Archived from the original on 12 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.