2019 ஆசியத் தடகளப் போட்டிகள்
2019 ஆசியத் தடகளப் போட்டிகள் (2019 Asian Athletics Championships) என்பது 23 ஆவது முறையாக நடைபெறுகின்ற ஆசிய தடகள போட்டிகளைக் குறிக்கின்றது. இப்போட்டிகள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 வரை கத்தார், தோகா நகரில் நடைபெற்றன. இப்போட்டியில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,400 வீரர்கள் பங்கேற்றனர். இருபத்து மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 வகையான விளையாட்டுகள் போட்டிக்காக இடம்பெற்றன.
2019 ஆசியத் தடகளப் போட்டிகள் | |
---|---|
நடத்தும் நகரம் | தோகா, கத்தார் |
காலம் | 21–24 ஏப்ரல் |
முதன்மை அரங்கு | காலிபா பன்னாட்டு விளையாட்டரங்கு |
பங்குபற்றுவோர் | 43 நாடுகளில் இருந்து |
நிகழ்வுகள் | 43 |
2021 → |
முன்னதாக 22 ஆவது ஆசிய தடகள போட்டிகள் இந்தியாவின் புவனேசுவரம் நகரில் நடந்து முடிந்தன. நடைபெற்ற நிறைவு விழாவில் ஆசிய தடகள சங்கத்தின் தலைவர் தாலன் அல் அகமது இவ்வமைப்பின் கொடியை அதிகாரப்பூர்வமாக கத்தார் ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளரும், கத்தார் தடகள கூட்டமைப்பின் தலைவருமான தானி அப்துல்ரகுமான் அல் குவாரியிடம் ஒப்படைத்திருந்தார்[1]. காலிபா அனைத்துலக விளையாட்டு அரங்கத்தில் 23 ஆவது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதே அரங்கில் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன் போட்டிக்கு ஒரு முன்னோட்டமாகவும் இப்போட்டிகள் கருதப்பட்டன[2][3].
பங்குபெற்ற நாடுகள்
தொகுவிளையாட்டுக்கள்
தொகுஅதிகாரபூர்வமாக 21 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
- 100 மீ ஓட்டம்
- 200 மீ ஓட்டம்
- 400 மீ ஓட்டம்
- 800 மீ ஓட்டம்
- 1500 மீ ஓட்டம்
- 5000 மீ ஓட்டம்
- 10000 மீ ஓட்டம்
- 100 மீட்டர்*4 தொடர் ஓட்டம்
- 400 மீட்டர்*4 தொடர் ஓட்டம்
- 3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம்
- வட்டெறிதல் (விளையாட்டு)
- சம்மட்டி எறிதல்
- உயரம் தாண்டுதல்
- நீளம் தாண்டுதல்
- மும்முறை தாண்டுதல்
- தடை தாண்டும் ஓட்டம்
- தடியூன்றி தாண்டுதல்
- குண்டெறிதல்
மொத்தப் பதக்கங்கள்
தொகு- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 43
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 43
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 43
- மொத்தப் பதக்கங்கள் - 423
நாடுகள் பெற்ற பதக்கங்கள்
தொகு* நடத்தும் நாடு (கத்தார்)
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | பகுரைன் (BHR) | 11 | 7 | 4 | 22 |
2 | சீனா (CHN) | 9 | 13 | 7 | 29 |
3 | சப்பான் (JPN) | 5 | 4 | 9 | 18 |
4 | இந்தியா (IND) | 3 | 7 | 7 | 17 |
5 | உஸ்பெகிஸ்தான் (UZB) | 3 | 0 | 2 | 5 |
6 | கத்தார் (QAT)* | 2 | 1 | 3 | 6 |
7 | தாய்லாந்து (THA) | 2 | 0 | 2 | 4 |
8 | கசக்கஸ்தான் (KAZ) | 1 | 4 | 3 | 8 |
9 | குவைத் (KUW) | 1 | 3 | 0 | 4 |
10 | சீன தைப்பே (TPE) | 1 | 2 | 1 | 4 |
11 | ஈரான் (IRI) | 1 | 1 | 0 | 2 |
12 | பிலிப்பீன்சு (PHI) | 1 | 0 | 1 | 2 |
13 | சிரியா (SYR) | 1 | 0 | 0 | 1 |
தஜிகிஸ்தான் (TJK) | 1 | 0 | 0 | 1 | |
வியட்நாம் (VIE) | 1 | 0 | 0 | 1 | |
16 | இந்தோனேசியா (INA) | 0 | 1 | 0 | 1 |
17 | ஆங்காங் (HKG) | 0 | 0 | 1 | 1 |
இலங்கை (SRI) | 0 | 0 | 1 | 1 | |
ஓமான் (OMA) | 0 | 0 | 1 | 1 | |
யோர்தான் (JOR) | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் (20 நாடுக்கள்) | 43 | 43 | 43 | 129 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Doha to host 23rd Asian Athletics Championship". The Peninsula. https://thepeninsulaqatar.com/article/11/07/2017/Doha-to-host-23rd-Asian-Athletics-Championship.
- ↑ "DOHA SHOWS IT IS READY TO REACH NEW HEIGHTS FOR 2019 IAAF WORLD ATHLETICS CHAMPIONSHIPS". 27 September 2018.
- ↑ Rowbottom, Mike (27 September 2018). "IAAF delegation blown away by Khalifa Stadium cooling system as Doha marks one-year countdown to World Championships". inside the games. https://www.insidethegames.biz/articles/1070459/iaaf-delegation-blown-away-by-khalifa-stadium-cooling-system-as-doha-marks-one-year-countdown-to-world-championships.